Sunday, February 28, 2010

ரவா பொங்கல்


தேவையானவை:

ரவா 1 கப்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
---
பயத்தம்பருப்பு 1/4 கப்
இஞ்சி ஒரு சிறிய துண்டு
பச்சைமிளகாய் 2
மிளகு 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் 1 டேபிள்ஸ்பூன்
நெய் 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
முந்திரிபருப்பு 10
உப்பு,எண்ணைய் தேவையானது
---
செய்முறை:

பயத்தம்பருப்பை ஒரு கப் தண்ணீரில் மஞ்சள்தூள்,பெருங்காய்த்தூள் சேர்த்து வேகவைக்கவேண்டும். பருப்பு நன்கு குழைய வேண்டும்.குக்கரிலும் வைக்கலாம். 4 விசில் விடவேண்டும்.

ஒரு கடாயை எடுத்துக்கொண்டு ஒரு டேபிள்ஸ்பூன் நெய்,ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணைய் விட்டு முதலில் மிளகை பொறிக்கவேண்டும். பின்னர் சீரகத்தை பொறித்து அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவேண்டும்.தயாராக உள்ள பயத்தம்பருப்பை இதனுடன் சேர்த்து கிளறவேண்டும்.

இன்னொரு அடுப்பில் இரண்டு கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் கொதிக்கவிடவேண்டும். தண்ணீர் கொதித்தவுடன் பயத்தம்பருப்பு கலவையுடன் உப்புடன் சேர்த்து கிளறவேண்டும்.
ரவையை பரவலாக கட்டித் தட்டாமல் தூவிக்கொண்டே கிளறவேண்டும்,பயத்தம்பருப்பும் ரவையும் நன்றாக சேர்ந்து வந்தபின் அடுப்பை அணைத்து வறுத்த முந்திரியை போடவேண்டும்.

ரவா பொங்கலுக்கு பொருத்தமான side dish தேங்காய் சட்னி.

Thursday, February 25, 2010

மணி கொழுக்கட்டை


தேவையானவை:

அரிசி மாவு 1கப்
உப்பு தேவையானது
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
---
அரைக்க:

துவரம்பருப்பு 1/4 கப்
கடலைப்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
பயத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை 1 டேபிள்ஸ்பூன்
சிவப்பு மிளகாய் 2
---
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை:

ஒரு அகண்ட பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் உப்பு,பெருங்காயத்தூள் சேர்த்து அரிசி மாவை பரவலாக தூவி கட்டிதட்டாமல் கிளறவும்.
கிளறிய மாவு ஆறியவுடன் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தனியே எடுத்து வைக்கவும்.

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரை மணிநேரம் ஊறவைத்து வடிகட்டி கரகரப்பாக அரைக்கவும்.அரைத்த விழுதை இட்லி தட்டில் வைத்து 15 நிமிடம் ஆவியில் வேகவைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கவேண்டியவைகளை தாளித்து ஆவியில் வைத்து எடுத்த பருப்பு கலவையை சேர்த்து நன்கு கிளறவும்.உதிரியாக வரும்.பின்னர் தயாராக உள்ள மணி கொழுக்கட்டைகளை சேர்த்து நன்கு பிரட்டி எடுத்து வைக்கவும்.

பள்ளியிலிருந்து வரும் சிறுவர் சிறுமிகளுக்கு ஒரு அருமையான மாலை நேர சிற்றுண்டி இது

Monday, February 22, 2010

தக்காளி, அவகோடா( Avocado) சாலட்


தேவையானவை:

தக்காளி 2
Avocado 2
வெங்காயம் 2
வெள்ளரிக்காய் 1
வினிகர் 1 டேபில்ஸ்பூன்
எலுமிச்சம்பழம் 1
ஆலிவ் எண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
மிளகு தூள் 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை சிறிதளவு

செய்முறை:

Avocado வை குறுக்கு வாட்டில் வெட்டி உள்ளே இருக்கும் கொட்டைகளை எடுத்துவிட்டு சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தக்காளி,வெங்காயம்,வெள்ளரிக்காய் மூன்றையும் பொடியாக நறுக்கிகொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு நறுக்கிய எல்லாவற்றையும் போட்டு மேலே மிளகுத்தூள்,வினிகர் சேர்த்து Olive oil யை பரவலாக ஊற்றவும்.அதன் மேல்
எலுமிச்சம்பழத்தை சிறு சிறு வட்டமாக நறுக்கி வைத்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை தூவவும்.
அரைமணிநேரம் ஊறவைத்து சாப்பிடலாம்.
Avocado ல் நிறைய விட்டமின் சத்துக்கள் உண்டு,எல்லா சூப்ப்ர் மார்க்கெட்டிலும் கிடைக்கும்.

Sunday, February 21, 2010

Stuffed புடலங்காய்


தேவையானவை:

புடலங்காய் 1
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
உப்பு தேவையானது
-----
For Stuffing:

வெங்காயம் 2
தக்காளி 2
உருளைக்கிழங்கு 2
இஞ்சிபூண்டு விழுது 1 டீஸ்பூன்
தனியாதூள் 1 டீஸ்பூன்
மிளகாய்தூள் 1 டீஸ்பூன்
----
கடலைமாவு,அரிசி மாவு,சோளமாவு
மைதாமாவு ஒவ்வொன்றும் ஒரு டேபிள்ஸ்பூன்
---
bread crums 1/4 கப்
எலுமிச்சம்பழம் 1


செய்முறை:

புடலங்காயை ஒர் அங்குல அளவிற்கு உருளை வடிவுகளாகவே (cylindrical shape) நறுக்கிகொண்டு சிறிது மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து பத்து நிமிடம் ஊறவைக்கவும்.

பின்னர் ஒரு microwavae bowl ல் வைத்து microwave "H"ல் இரண்டு நிமிடம் வைக்கவும்.நன்றாக வெந்துவிடும்.உள்ளே இருக்கும் விதைகளை எடுத்துவிட்டு தனியே வைக்கவும்

For stuffing:
வெங்காயம்,தக்காளி இரண்டையும் பொடிப்பொடியாக நறுக்கி எண்ணையில் வதக்கவும்.அதனுடன் உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சேர்த்து வதக்கவும்.இதற்கு தேவையான உப்புடன் இஞ்சி பூண்டு விழுது,தனியாத்தூள்,மிளகாய்தூள் கலந்து வதக்கவும்.வதக்கிய விழுதில் அரிசிமாவு,சோளமாவு சேர்த்து பிசையவும்,(தண்ணீர் சேர்க்கவேண்டாம்.)

தயாராக உள்ள புடலங்காய் துண்டில் கலந்த கலவையை திணிக்கவும்.புடலங்காய் துண்டின் இருபுறத்தையும் மைதாமாவு,கடலைமாவு, bread crums மூன்றிலும் வரிசையாக ஒத்தி எடுக்கவேண்டும்.

அடுப்பில் எண்ணைய் வைத்து எண்ணைய் நன்கு காய்ந்தவுடன் அடுப்பை ஸ்லிம்மில் வைத்து ஒவ்வொரு துண்டாகப்போட்டு பொரித்து எடுக்கவும்

Tuesday, February 16, 2010

முளைகட்டின சன்னா வடை




தேவையானவை:

முளைகட்டின சன்னா 1கப்
வெங்காயம் 1
இஞ்சி 1 துண்டு
பச்சைமிளகாய் 2
வற்றல் மிளகாய் 2
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
சோம்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லித்தழை சிறிதளவு
அரிசிமாவு 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:

சன்னாவை முதல்நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து அடுத்தநாள் காலையில் வடிகட்டி ஒரு ஈரத்துணியில்
கட்டிவைக்கவும்.2,3 நாட்களில் முளைகட்டும்.
---
வெங்காயத்தையும் பச்சைமிளகாயையும் பொடியாக நறுக்கிகொள்ளவும்.
கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை இரண்டையும் ஆய்ந்துகொள்ளவும்..
---
முளைகட்டின சன்னாவுடன் வற்றல்மிளகாய்,இஞ்சி,பெருங்காயத்தூள்,சோம்பு,உப்பு சேர்த்து
விழுதாக அரைக்கவும்.
அரைத்த விழுதில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய்,அரிசிமாவு,கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை
சேர்த்து வடைபோல தட்டி எண்ணையில் பொரிக்கவும்.
தக்காளி sauce டன் சூடாக பறிமாறவும்.சுவையாக இருக்கும்.

Sunday, February 14, 2010

குடமிளகாய் உசிலி


தேவையானவை:

குடமிளகாய் 2
துவரம்பருப்பு 1/2 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
மிளகாய் வற்றல் 4
பெருங்காயம் 1 துண்டு
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு,எண்ணைய் தேவையானது
---
தாளிக்க:
கடுகு,உளுத்தம்பருப்பு சிறிதளவு

செய்முறை:

குடமிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
துவரம்பருப்பு,கடலைபருப்பு,மிளகாய்வற்றல்,பெருங்காயம் நான்கையும் ஒரு மணிநேரம் தண்ணீரில்
ஊறவைத்து வடிகட்டி சிறிது உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
அரைத்த விழுதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 15 நிமிடம் வேகவைக்கவும்.
ஆவியில் வேகவைத்த பருப்புகளை நன்கு உதிர்க்கவும்.(மிக்சியில் ஒரு சுற்று சுற்றினால் உதிரியாக வரும்)

வாணலியில் எண்ணைய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து
குடமிளகாய்,கறிவேப்பிலை,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
குடமிளகாய் வதங்கினவுடன் உதிர்த்த பருப்புகளை சேர்த்து சிறிது எண்ணைய் விட்டு நன்றாக கிளறவும்.
உதிரி உதிரியாக வரும்.

Tuesday, February 9, 2010

புளி இஞ்சி


தேவையானவை:




இஞ்சி 1 கப் (நறுக்கியது)
புளி பெரிய எலுமிச்சை அளவு)
நல்லெண்ணைய் 1/4 கப்
பச்சைமிளகாய் 3
கடுகு 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
வெல்லம் சிறிதளவு

செய்முறை:


இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கிகொள்ளவேண்டும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக்கொள்ளவேண்டும்.
பச்சைமிளகாயை குறுக்கு வாட்டில் வெட்டிக்கொள்ளவேண்டும்.---
வாணலியில் நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,பெருங்காயத்தூள் தாளித்து
பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய் இரண்டையும் சேர்த்து வதக்கவேண்டும்.
நன்கு வதங்கிய பின் உப்பு,மஞ்சள்தூள்,புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
புளியும் இஞ்சியும் சேர்ந்து கெட்டியானவுடன் வெல்லம் சேர்த்து இறக்கவேண்டும்.

புளி இஞ்சியை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.பொங்கலுக்கு ஏற்ற side dish.
ஜீரணத்திற்கு நல்லது.

Sunday, February 7, 2010

Spinach-Fruits Smoothie




தேவையானவை:
Spinach 1 கப் (பொடியாக நறுக்கியது )
ஆப்பிள் 1
பச்சை திராட்சை பழம் 1/2 கப்
வாழைப்பழம் 1
உப்பு சிறிதளவு

செய்முறை:

பொடியாக நறுக்கிய பசலைக்கீரையை (spinach) நன்றாக அலசி சிறிது தண்ணீர் தெளித்து சிறிது உப்பு சேர்த்து Microwave High ல் ஒரு நிமிடம் வைக்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய ஆப்பிள்,வாழைப்பழம்,திராட்சைப்பழம் எல்லாவற்றையும் சேர்த்து Mixie ல் அரைக்கவேண்டும்.
இந்த ஸ்மூதி உடலுக்கு குளிர்ச்சியை தரும்.

Thursday, February 4, 2010

உளுந்து சட்னி

தேவையானவை:

உளுத்தம்பருப்பு 1 கப்
மிளகாய்வற்றல் 4
தேங்காய் துருவல் 1/4 கப்
கறிவேப்பிலை ஒரு கொத்து
கொத்தமல்லித்தழை சிறிது
புளி எலுமிச்சை அளவு

செய்முறை:

உளுத்தம்பருப்பை வாணலியில் எண்ணைய் விட்டு சிவக்க வறுக்க வேண்டும்.
மிளகாய்வற்றலை முதலில் வறுத்துவிட்டு அதனுடன் கறிவேப்பிலை புளி இரண்டையும் வறுக்கவேண்டும்.
தேங்காய் துருவலையும் ஒரு பிரட்டு பிரட்டவேண்டும்.
எல்லாவற்றையும் உப்புடன் சேர்த்து அரைக்கவேண்டும்.

உளுந்து சட்னி இட்லி தோசைக்கு பொருத்தமான side dish.

Wednesday, February 3, 2010

மாதுளை ஜூஸ்


தேவையானவை:

மாதுளை 1
சர்க்கரை 1 டேபிள்ஸ்பூன்
பால் 1/4 கப்
கிரீம் 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

மாதுளைப்பழத்தை இரண்டாக வெட்டி உள்ளே உள்ள முத்துக்களை எடுத்துவைக்கவேண்டும்.
அதனுடன் பால்,சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவேண்டும்.
நன்றாக அரைத்தால் வடிகட்டவேண்டிய அவசியமில்லை.
Fridge ல் வைத்து குழந்தகளுக்கு கொடுக்கலாம்.
முத்துக்களை சாப்பிடுவதை விட இப்படி ஜூஸ் ஆக சாப்பிடுவதை விரும்புவார்கள்
கொடுக்கும்பொழுது மேலே கிரீம் போட்டு கொடுக்கவேண்டும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...