Thursday, February 4, 2010

உளுந்து சட்னி

தேவையானவை:

உளுத்தம்பருப்பு 1 கப்
மிளகாய்வற்றல் 4
தேங்காய் துருவல் 1/4 கப்
கறிவேப்பிலை ஒரு கொத்து
கொத்தமல்லித்தழை சிறிது
புளி எலுமிச்சை அளவு

செய்முறை:

உளுத்தம்பருப்பை வாணலியில் எண்ணைய் விட்டு சிவக்க வறுக்க வேண்டும்.
மிளகாய்வற்றலை முதலில் வறுத்துவிட்டு அதனுடன் கறிவேப்பிலை புளி இரண்டையும் வறுக்கவேண்டும்.
தேங்காய் துருவலையும் ஒரு பிரட்டு பிரட்டவேண்டும்.
எல்லாவற்றையும் உப்புடன் சேர்த்து அரைக்கவேண்டும்.

உளுந்து சட்னி இட்லி தோசைக்கு பொருத்தமான side dish.

4 comments:

Menaga Sathia said...

உளுந்து சட்னியில் தேங்காய் சேர்த்ததில்லை.தேங்காய் சேர்ப்பதால் ரொம்ப நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன்.செய்து பார்க்கனும்...

Kanchana Radhakrishnan said...

கருத்துக்கு நன்றி Menaga

settaikkaran said...

நீங்க நல்லா சமைப்பீங்கன்னு தெரியுது. நான் நல்லாச் சாப்பிடுவேன். அதுனாலே ஒரு யோசனை. சமையல் குறிப்பு எழுதும்போது தேவையானவைங்கிறதுலே முதல்லே வர வேண்டியது என்ன தெரியுமா? சாப்பிடுவதற்கு ஆளுங்க தான்! ஜோக், சீரியசா எடுத்துக்காதீங்க!

Kanchana Radhakrishnan said...

///சேட்டைக்காரன் said...
நீங்க நல்லா சமைப்பீங்கன்னு தெரியுது. நான் நல்லாச் சாப்பிடுவேன். அதுனாலே ஒரு யோசனை. சமையல் குறிப்பு எழுதும்போது தேவையானவைங்கிறதுலே முதல்லே வர வேண்டியது என்ன தெரியுமா? சாப்பிடுவதற்கு ஆளுங்க தான்! ஜோக், சீரியசா எடுத்துக்காதீங்க!///

;-)))

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...