Wednesday, June 30, 2010

பனீர் மட்டர்


தேவையானவை:

பனீர் துண்டுகள் 1 1/2 கப்
பச்சைப்பட்டாணி 1 கப்
வெங்காயம் 2
தக்காளி 2
இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன்
முந்திரிபருப்பு 4
பாதாம் பருப்பு 4
காரப்பொடி 1 டீஸ்பூன்
தனியாப் பொடி 1 டீஸ்பூன்
தயிர் 1/2 கப்
கொத்தமல்லித்தழை 1/2 கப் (ஆய்ந்தது)
எண்ணைய்,உப்பு தேவையானது

முதலில் செய்து கொள்ள வேண்டியது:

1.வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி தண்ணீரில் 5 நிமிடம் கொதிக்கவைக்கவேண்டும்.
வடிகட்டி மிக்ஸியில் விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.

2.தக்காளியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எண்ணையில் வதக்கி விழுது போல
ஆனவுடன் தனியாக எடுத்து வைக்கவேண்டும்.

3.பாதாம் பருப்பையும் முந்திரி பருப்பையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து விழுது போல அரைத்துக் கொள்ள வேண்டும்.

4. பனீர் துண்டுகளை எண்ணையில் பொரித்து ஒரு பாத்திரத்தில் குளிர்ந்த தண்ணீரில் போடவேண்டும்.

செய்முறை:

ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிது எண்ணைய் விட்டு
வெங்காய விழுது
இஞ்சி பூண்டு விழுது
பாதாம்,முந்திரி விழுது
மூன்றையும் சேர்த்து வதக்கவேண்டும்.நன்றாக வதங்கிய பின்
காரப்பொடி,தனியாத்தூள்
இரண்டையும் சேர்த்து மீண்டும் வதக்கி தக்காளி பேஸ்டை உப்புடன் சேர்த்து நன்கு வதக்கவேண்டும்.
பச்சைப்பட்டாணியை சிறிது தண்ணீருடன் இந்த கலவையில் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவைக்க வேண்டும்.
கடைசியில் தயிர் சேர்க்கவேண்டும்.
அடுப்பை அணைக்கு முன்பு பனீர் துண்டுகளை பிழிந்து போடவேண்டும்.
கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்

Sunday, June 27, 2010

கதம்ப பாஸ்தா


தேவையானவை:

கோதுமை பாஸ்தா 1 கப்
Broccoli 1 கப் (சிறு துண்டுகளாக அரிந்தது) 
காரட் 1 கப் (நீட்டவாக்கில் நறுக்கியது)
பீன்ஸ் 1 கப்
கொத்தமல்லித் தழை சிறிதளவு
ஆலிவ் ஆயில் 1 டேபிள்ஸ்பூன்
எள் 1 டேபிள்ஸ்பூன்
peanut sauce 1 டேபிள்ஸ்பூன்
-------
peanut sauce தயாரிக்க தேவையானவை:
peanut butter 1/4 கப் (கடைகளில் கிடைக்கும்)
சோயா சாஸ் 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சம்பழ ஜூஸ் 1 டேபிள்ஸ்பூன்
பூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன்
வினிகர் 1 டேபிள்ஸ்பூன்
எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு குறைந்த சூட்டில் கிளறவேண்டும்.Mixture creamy ஆக வரும்.
வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு மீதியை fridge ல் வைத்துக்கொள்ளலாம்,
---------
பாஸ்தா செய்முறை:

பாஸ்தாவை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து உப்பு சேர்த்து 15 நிமிடம் கொதிக்கவைக்கவேண்டும்.
வடிகட்டி ஆறினவுடன் அதன் மேல் ஒரு கப் குளிர்ந்த தண்ணீரை ஊற்றி மீண்டும் வடிகட்டி எடுத்துவைக்கவேண்டும்.
(இப்படி செய்தால் பாஸ்தா ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்)

Broccoli,காரட், பீன்ஸ் மூன்றையும் உப்பு சேர்த்து குக்கரில் ஆவியில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும்.
------
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வேகவைத்த பாஸ்தா,ஆவியில் வைத்த காய்கறிகள்,peanut sauce ஒரு டேபிள்ஸ்பூன்,
ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு குலுக்கவும்.கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.வேண்டுமென்றால் எள்ளை தூவலாம்..

------
குழந்தைகளுக்கு cooked pasta,துருவிய காரட்,சீஸ் சேர்த்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்

Monday, June 21, 2010

புதினா ஓமப்பொடி


தேவையானவை:

கடலைமாவு 2 கப்
அரிசிமாவு 1/2 கப்
நெய் 2 டேபிள்ஸ்பூன்
நிலக்கடலை 10
முந்திரிபருப்பு 10
உப்பு,எண்ணைய் தேவையான அளவு.
-----
அரைக்க: 1.

ஓமம் 1 டேபிள்ஸ்பூன்
மிளகு 10
காய்ந்த மிளகாய் 4
----

அரைக்க: 2

புதினா 1 கட்டு
காய்ந்த மிளகாய் 4
உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு
உப்பு தேவையானது
----

செய்முறை:
ஓமம்,மிளகு,காய்ந்த மிளகாய் மூன்றையும் தண்ணீரில் ஊறவைத்து தண்ணருடன் சேர்த்து நைசாக அரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவேண்டும்.

புதினாவை நன்கு ஆய்ந்து எண்ணையில் பச்சை வாசனை போக வதக்கவேண்டும்.அதனுடன் வறுத்த காய்ந்த மிளகாய்,உளுத்தம்பருப்பு,பெருங்காயம்,உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவேண்டும்.அரைத்த விழுதை ஒரு மெல்லிய துணியில் போட்டு வடிகட்ட வேண்டும்.

கடலைமாவையும் அரிசிமாவையும் ஒரு அகண்ட பாத்திரத்தில் போட்டு உப்பு,நெய் சேர்த்து பிசிறவேண்டும்.
அதில் ஒரு சிறு பகுதியை தனியே எடுத்து அதனுடன் வடிகட்டிய ஓமத்தண்ணீரை சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.அடுப்பில் எண்ணைய் வைத்து நன்கு காய்ந்தவுடன் பிசைந்த மாவை
ஓமப்பொடி அச்சில் வைத்து பிழிய வேண்டும்.சிகப்பாக இருக்கும் இந்த ஓமப்பொடியை பொடிப்பொடியாக உடைத்துக்கொள்ளவேண்டும்.

மீதமுள்ள மாவை வடிகட்டிய புதினா தண்ணீருடன் சேர்த்து பிசைய வேண்டும்.மேற்கூறியவாறு ஓமப்பொடி அச்சில் போட்டு எடுக்கவேண்டும்.இந்த ஓமப்பொடி பச்சைக் கலரில் இருக்கும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் தயாராகவுள்ள இரண்டு ( சிகப்பு,பச்சை)ஓமப்பொடிகளையும் கலந்து அதனுடன் வறுத்த நிலக்கடலை,முந்திரிபருப்பு சேர்த்து கலக்கவேண்டும்.

colourful ஆக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Wednesday, June 16, 2010

உளுந்து சாதமும் எள்ளுத் துவையலும்.


தேவையானவை:

பச்சரிசி 1 கப்
உளுத்தம்பருப்பு 1/4 கப்
தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 4
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது

தாளிக்க:

கடுகு 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
நெய் 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பச்சரிசியை சிறிது உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளவும்.
உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் சிவப்பாக வரும் வரை வறுத்துக்கொள்ளவும்.
தேங்காய்துருவல்,காய்ந்த மிளகாய்,பெருங்காயம் மூன்றையும் சிறிது எண்ணைய் விட்டு வறுத்துக்கொள்ளவும்.
வறுத்த உளுத்தம்பருப்பு,தேங்காய்துருவல்,காய்ந்த மிளகாய்,பெருங்காயம் நான்கையும் மிக்சியில் பொடி பண்ணிக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வடித்த சாதத்தை பரவலாகக் கொட்டி அதன் மேல் தயாராக உள்ள உளுந்துப்பொடியை உப்புடன் சேர்த்து தூவவும்.
வாணலியில் நெய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்து அதனுடன் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

உளுந்து சாதம் எள்ளுத்துவையலுடன் சேர்ந்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

எள்ளுத்துவையலுக்கு கறுப்பு எள் 1/2 கப்பை தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைத்து வடிகட்டி வெறும் வாணலியில் நன்றாக வெடிக்கும் வரை வறுக்கவேண்டும்.
அதனுடன் வறுத்த தேங்காய் துருவல் 1/4 கப்.காய்ந்த மிளகாய் 4,பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன் ,உப்பு சேர்த்து அரைக்கவேண்டும்

Sunday, June 6, 2010

குழாய் புட்டு

தேவையானவை:

புழுங்கலரிசி 2 கப்
தேங்காய் துருவல் 1 கப்
நெய் 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணைய் 1 டீஸ்பூன்
பால் 1/4 கப்
உப்பு தேவையானது



செய்முறை:

புழுங்கலரிசியை மூன்று மணிநேரம் ஊறவைத்து வடிகட்டி ஒரு துணியில் பரவலாக பரப்பி உலர்த்த வேண்டும்.நன்றாக காய்ந்தவுடன் மிக்சியில் மாவாக அரைத்து எடுத்து வைக்கவேண்டும்.
(ready made புட்டு மாவு dept.store கிடைக்கும்.)

ஒரு அகண்ட பாத்திரத்தில் புட்டு மாவை போட்டு உப்பு,தேங்காய் எண்ணைய்,நெய்,பால் சேர்த்து பிசிறவேண்டும்.தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து"பொல பொல" என்று வரும்வரை
பிசிற வேண்டும்.

புட்டு பாத்திரம்


புட்டு பாத்திரத்தில் முதலில் தேங்காய் துருவல் சேர்த்து அதன் மேல் புட்டு மாவு பின் தேங்காய் துருவல் அதன் மேல் புட்டு மாவு என்று மாறி மாறிபோடவேண்டும்.அழுத்தக்கூடாது.
புட்டு பாத்திரத்தில் உள்ள ஓட்டையில் குச்சி வைத்து குத்தவேண்டும்.அப்பொழுதுதான் மாவு நன்றாக வேகும்.

குக்கரின் மேல் புட்டு பாத்திரம்

குழாய் புட்டு

குக்கரில் தண்ணீர் வைத்து மூடி போட்டு புட்டு பாத்திரத்தை குக்கரின் மூடியின் மேல் weight போடும் இடத்தில் வைத்து அடுப்பை on பண்ணி 10 நிமிடம் கழித்து குழாயின் மேல் ஆவி நன்றாக வரும்.அப்பொழுது அடுப்பை அணைக்கவேண்டும.இறக்கிய பின் அடிபக்கம் குத்தி எடுக்கவேண்டும்.

வாழைப்பழம் அல்லது கடலலைக்குருமா ஏற்ற sidedish.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...