தேவையானவை:
கடலைமாவு 2 கப்
அரிசிமாவு 1/2 கப்
நெய் 2 டேபிள்ஸ்பூன்
நிலக்கடலை 10
முந்திரிபருப்பு 10
உப்பு,எண்ணைய் தேவையான அளவு.
-----
அரைக்க: 1.
ஓமம் 1 டேபிள்ஸ்பூன்
மிளகு 10
காய்ந்த மிளகாய் 4
----
அரைக்க: 2
புதினா 1 கட்டு
காய்ந்த மிளகாய் 4
உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு
உப்பு தேவையானது
----
செய்முறை:
ஓமம்,மிளகு,காய்ந்த மிளகாய் மூன்றையும் தண்ணீரில் ஊறவைத்து தண்ணருடன் சேர்த்து நைசாக அரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவேண்டும்.
புதினாவை நன்கு ஆய்ந்து எண்ணையில் பச்சை வாசனை போக வதக்கவேண்டும்.அதனுடன் வறுத்த காய்ந்த மிளகாய்,உளுத்தம்பருப்பு,பெருங்காயம்,உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவேண்டும்.அரைத்த விழுதை ஒரு மெல்லிய துணியில் போட்டு வடிகட்ட வேண்டும்.
கடலைமாவையும் அரிசிமாவையும் ஒரு அகண்ட பாத்திரத்தில் போட்டு உப்பு,நெய் சேர்த்து பிசிறவேண்டும்.
அதில் ஒரு சிறு பகுதியை தனியே எடுத்து அதனுடன் வடிகட்டிய ஓமத்தண்ணீரை சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.அடுப்பில் எண்ணைய் வைத்து நன்கு காய்ந்தவுடன் பிசைந்த மாவை
ஓமப்பொடி அச்சில் வைத்து பிழிய வேண்டும்.சிகப்பாக இருக்கும் இந்த ஓமப்பொடியை பொடிப்பொடியாக உடைத்துக்கொள்ளவேண்டும்.
மீதமுள்ள மாவை வடிகட்டிய புதினா தண்ணீருடன் சேர்த்து பிசைய வேண்டும்.மேற்கூறியவாறு ஓமப்பொடி அச்சில் போட்டு எடுக்கவேண்டும்.இந்த ஓமப்பொடி பச்சைக் கலரில் இருக்கும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் தயாராகவுள்ள இரண்டு ( சிகப்பு,பச்சை)ஓமப்பொடிகளையும் கலந்து அதனுடன் வறுத்த நிலக்கடலை,முந்திரிபருப்பு சேர்த்து கலக்கவேண்டும்.
colourful ஆக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
7 comments:
wow........healthy recipe.thanks.
arumayana recipe..pakkavey asaiya irukku..healthy as well..thanks for sharing..Thank you so much your wishes:-)
புதுசா இருக்குதே!செய்து பார்த்துட வேண்டியதுதான்!எத்தனை நாளைக்குத்தான் இட்லிப் பொடியவே தொட்டுக்கறது:)
வித்தியாசமான குறிப்பு! உடனே செய்து பார்க்கத் தூண்டும் புகைப்படம்!!
Thanks Nithu.
இது இட்லி பொடி அல்ல.மாலை நேர snacks.வருகைக்கு நன்றி
ராஜ நடராஜன்.
Thanks Mano.
Post a Comment