Monday, May 30, 2011

சீனிக்கிழங்கு பொரியல்

தேவையானவை:

சர்க்கரைவள்ளிகிழங்கு 2

மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது

--------

அரைக்க:

பச்சைமிளகாய் 2

இஞ்சி 1 துண்டு

தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன்

பொட்டுக்கடலை 1 டேபிள்ஸ்பூன்

-----

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை 1 கொத்து

-----

செய்முறை:

சீனிக்கிழங்கின் தோலை எடுத்துவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.அரைக்கக் கொடுத்துள்ளவைகளை தண்ணீர் விடாமல் ரவை போல் அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் சிறிது தண்ணீர் விட்டு நறுக்கிய சர்க்கரைவள்ளித்துண்டுகளை மஞ்சள்தூள் ,உப்பு சேர்த்து வேகவிட்டு வடிகட்டவும்.(ஐந்து நிமிடத்தில் வெந்து விடும்).வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கவேண்டியவைகளை தாளித்து வடிகட்டி வைத்துள்ள சீனிக்கிழங்கு துண்டுகளை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவும்.பின்னர் அரைத்து வைத்துள்ளதை போட்டு நன்கு கிளறி எடுத்து வைக்கவும்.

இந்த் பொறியல் மிகவும் சுவையாக இருக்கும்.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Wednesday, May 25, 2011

வாழைத்தண்டு ரசம்



தேவையானவை:

வாழைத்தண்டு 1/2 அடி துண்டு ஒன்று

துவரம்பருப்பு 1/2 கப்

தக்காளி 2

பச்சைமிளகாய் 2

மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை சிறிதளவு

------

பொடி பண்ண:

மிளகாய் வற்றல் 2

மிளகு 1 டீஸ்பூன்

சீரகம் 1 டீஸ்பூன்

-------

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை ஒரு கொத்து

--------

செய்முறை:

வாழைத்தண்டை  பொடியாக

 நறுக்கிக்கொண்டு சிறிது தண்ணீர் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் துவரம்பருப்போடு (இரண்டையும் தனித்தனி அடுக்கில்) வைத்து வேகவைக்கவும்.

மிளகாய் வற்றல்,மிளகு,சீரகம் மூன்றையும் சிறிது எண்ணையில்வறுத்து பொடி பண்ணிக்கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சைமிளகாயை நீட்ட வாக்கில் கீறிக்கொள்ளவும்.
------
குக்கரில் இருந்து எடுத்த வாழைத்தண்டை அதிலிருந்த தண்ணீருடன் மிக்சியில் நன்கு அரைத்து வடிகட்டவேண்டும்.

வெந்த துவரம்பருப்பை நன்றாக கடைந்துகொண்டு அதனுடன் வாழைத்தண்டு சாறு,தக்காளி,பச்சைமிளகாய்,அரைத்த பொடி,தேவையான உப்பு

எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவேண்டும்.

கடைசியில் கடுகு,பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை தாளித்து அரிந்த கொத்தமல்லித்தழையை சேர்க்கவும்

Monday, May 23, 2011

பனீர் மஷ்ரூம் மசாலா.....



தேவையானவை:

பனீர் துண்டுகள் 10

மஷ்ரூம் துண்டுகள் 10

குடமிளகாய் 1

வெங்காயம் 1

காரட் 2

மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்

மிளகு தூள் 1 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்

வெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது

-------

பொடி பண்ண:

பட்டை ஒரு துண்டு

கிராம்பு 4

சோம்பு 1 டீஸ்பூன்

--------

செய்முறை:

மஷ்ரூமை தண்ணீரில் நன்றாக அலசி சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

கடாயில் சிறிது வெண்ணைய் சேர்த்து மஷ்ரூம் துண்டுகளை ஒரு பிரட்டு பிரட்டி தனியே எடுத்து வைக்கவும்.

பனீர் துண்டுகளை வென்னீரில் போட்டு எடுக்கவும்.

வெங்காயம்,காரட்,குடமிளகாய் மூன்றையும் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

பட்டை,சோம்பு,கிராம்பு மூன்றையும் எண்ணையில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

--------

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணைய் ஊற்றி வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.

அதனுடன் காரட்,குடமிளகாய் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.

குடமிளகாய்,காரட் இரண்டும் சிறிது வெந்ததும் தேவையான உப்பு,மஞ்சளதூள்,மிளகு தூள்,இஞ்சி பூண்டு விழுது,

சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

பின்னர் மஷ்ரூம்,பனீர் அரைத்து வைத்துள்ள பொடி மூன்றையும் சேர்த்து மசாலா திக்காக வந்தவுடன் இறக்கி மீதமுள்ள வெண்ணையை சேர்க்கவும்.

பூரி,சப்பாத்திக்கு ஏற்றது.

Monday, May 16, 2011

அரைக்கீரை...காராமணி மசியல்


தேவையானவை:     அரைக்கீரை. 

அரைக்கீரை 1 கட்டு
பயத்தம்பருப்பு 1/2 கப்
காராமணி 1/4 கப்
பச்சைமிளகாய் 2
------
அரைக்க:
தேங்காய் துருவல் 1/4 கப்
சீரகம் 1 டீஸ்பூன்
மிளகு 10
-----
பொடி பண்ண:
வெந்தயம் 1 டீஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு
-----
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
------
கொத்தமல்லித்தழை சிறிதளவு

செய்முறை:


அரைக்கக் கொடுத்துளவைகளை நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
வெந்தயம் பெருங்காயம் இரண்டையும் எண்ணையில் வறுத்து பொடி பண்ணிகொள்ளவும்.
அரைக்கீரையை நன்கு ஆய்ந்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
குக்கருக்குள் வைக்கும் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் முதலில் பயத்தம்பருப்பு,காராமணி இரண்டையும் சிறிது தண்ணீருடன் வைத்து அதன் மேல் பொடியாக நறுக்கிய அரைக்கீரையை தேவையான உப்புடன் சேர்த்து குக்கருக்குள் வைத்து மூன்று விசில் வந்ததும் இறக்கவும்.
-----
கடாயில் எண்ணைய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து குக்கரில் இருந்து எடுத்த கீரை,காராமணிக் கலவையை சேர்க்கவேண்டும்.
அதனுடன் அரைத்த விழுதையும்,வெந்தய பெருங்காயப்பொடியையும் சேர்த்து கிளறவேண்டும்.
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் இறக்கவும்.
கடைசியில் கொத்துமல்லித்தழையால் அலங்கரிக்கவும்.

Sunday, May 8, 2011

பாதாம் பக்கோடா

தேவையானவை:
பாதாம்பருப்பு 20
கடலைமாவு 1 கப்
அரிசிமாவு 1/4 கப்
மைதாமாவு 1 மேசைக்கரண்டி
------
இஞ்சி 1 துண்டு (பொடியாக நறுக்கியது)
மிளகாய்தூள் 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை 1 கொத்து
நெய் 1 மேசைக்கரண்டி
உப்பு,எண்ணைய் தேவையானது
------
செய்முறை:



பாதாம் பருப்பை அரைமணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து தோலுரித்து நன்றாக துடைக்கவும்.அடுப்பில் கடாயை வைத்து நெய் சேர்த்து காய்ந்ததும் பாதாம்பருப்பை ஒரு பிரட்டு பிரட்டவேண்டும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் கடலை மாவு,அரிசிமாவு,மைதாமாவு,பொடியாக நறுக்கிய இஞ்சி,மிளகாய் தூள்,கறிவேப்பிலை,வறுத்த பாதாம் பருப்பு தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து சிறித் தண்ணீர் தெளித்து பக்கோடா பதத்திற்கு பிசைய வேண்டும்.
வாணலியில் எண்ணைய் வைத்து நன்கு காய்ந்ததும் பிசைந்து வைத்த பாதாம் பக்கோடாவை தனித்தனி உருண்டைகளாக போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.
பள்ளியில் இருந்து வரும் சிறுவர் சிறுமிகளுக்கு விருப்பமான மாலைநேர சிற்றுண்டியாகும்.

Sunday, May 1, 2011

காரட்- தேன் சாலட்

தேவையானவை:
துருவிய காரட் 1 கப்
உலர்ந்த திராட்சை 10
பச்சை திராட்சை 10
தேன் 2 டேபிள்ஸ்பூன்
red chilli flakes 1
உப்பு 1/2 டீஸ்பூன்
--------
செய்முறை:


இரண்டு மிளகாய் வற்றலை எண்ணையில் சிறிது வறுத்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றவேண்டும்.பொடி பண்ணக்கூடாது.இது தான் chilli flakes.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் தேன்,உப்பு,red chilli flakes மூன்றையும் சேர்த்து நன்கு கலக்கவும்.பிறகு அதனுடன் துருவிய காரட்,உலர்ந்த திராட்சை,பச்சை திராட்சை மூன்றையும் சேர்க்கவும்.
காரட்,தேன் சாலட் ரெடி.
இந்த சாலட்டை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...