Sunday, January 26, 2014

பிரிஞ்சி (எளிய முறை)



பச்சரிசி 1 கப்
தேங்காய் பால் 1 கப்
தண்ணீர் 1 கப்
சின்ன வெங்காயம் 10
பூண்டு 10
பச்சைமிளகாய் 4

பட்டை 1 துண்டு
பிரிஞ்சி இலை 1
லவங்கம் 5
கிராம்பு 5
வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
----------
செய்முறை:


சின்ன வெங்காயம்,பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
அரிசியை பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு குக்கரை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து பட்டை,பிரிஞ்சி இலை,லவங்கம்,கிராம்பு நான்கையும் வறுத்து அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பூண்டு,குறுக்கே நறுக்கிய பச்சைமிளகாய்
எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவேண்டும்.வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் ஊறவைத்த அரிசியை வடிகட்டி குக்கரில் சேர்த்து நன்றாக பிரட்டவேண்டும்.
ஐந்து நிமிடம் கழித்து தண்ணீர், தேங்காய் பால்,தேவையான உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி குக்கரை மூடி இரண்டு விசில் வரும் வரை வைக்கவேண்டும். பிறகு
அடுப்பை சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவேண்டும்.
சுவையான பிரிஞ்சி ரெடி.

எதிர்பாராமல் வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு இந்த திடீர் பிரிஞ்சி நமக்கு கை கொடுக்கும்.

Tuesday, January 21, 2014

பரங்கிக்காய் பால் கூட்டு



தேவையானவை:

பரங்கிக்காய் துண்டுகள் 2 கப்
பால் 1/2 கப்
பொடித்த வெல்லம் 2 மேசைக்கரண்டி
துருவிய தேங்காய் 2 மேசைக்கரண்டி
அரிசிமாவு 1 மேசைக்கரண்டி
உப்பு 1/2 தேக்கரண்டி
---------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 2
கறிவேப்பிலை ஒரு கொத்து
தேங்காயெண்ணெய் 1 மேசைக்கரண்டி
------
செய்முறை:


ஒருபாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் வைத்து பரங்கிக்காய் துண்டுகளை வேகவைக்கவும்.
அரிசிமாவை கால் கப் தண்ணீரில் கரைத்து அதில் சேர்க்கவும்.
கொதித்தவுடன் பால்,பொடித்த வெல்லம்,உப்பு மூன்றையும் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
கடைசியில் துருவிய தேங்காய் அல்லது தேங்காய் பால் (கால் கப்) சேர்த்து எல்லாவற்றையும் கலந்து அடுப்பை அணைக்கவும்.
தேங்காயெண்ணையில் தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவும்.

Tuesday, January 14, 2014

தேங்காய் பொடி



தேவையானவை:

தேங்காய் துருவல் 1 கப்
மிளகாய் வற்றல் 4
உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை 1/4 கப்
புளி சிறிதளவு
பெருங்காயம் 1 துண்டு
கடுகு 1/2 தேக்கரண்டி
உப்பு எண்ணெய் தேவையானது
---------
செய்முறை:


தேவையானவையில் குறிப்பிட்ட ஒவ்வொன்றையும் தனித்தனியாக எண்ணெயில் வறுக்கவேண்டும்.
மிக்சியில் எல்லாவற்றையும் சேர்த்து அரைக்கவேண்டும்.

இட்லி,தோசைக்கு ஏற்றது.
சாதத்தில் கொஞ்சம் நெய்விட்டு இந்த பொடியுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.

Monday, January 6, 2014

பார்லி கிச்சடி





தேவையானவை:

பார்லி 1/2 கப்
பயத்தம்பருப்பு 1/4 கப்
வெங்காயம் 1
தக்காளி 1
பச்சைமிளகாய் 2
சீரகம் 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் 1 துண்டு
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
எலுமிச்கம்பழம் 1
கொத்தமல்லித்தழை சிறிதளவு
நெய் 1 மேசைக்கரண்டி
உப்பு எண்ணெய் தேவையானது
--------
செய்முறை:



பார்லியை 15 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
ஒரு குக்கரை எடுத்துக்கொண்டு அதில் தனித்தனியே பார்லியையும் பயத்தம்பருப்பையும் வேகவைக்கவேண்டும்.(2 விசில்)

அடுப்பில் கடாயை வைத்து நெய்யில் சீரகத்தை பொரிக்கவேண்டும்.
அதனுடன் பெருங்காயத்தை பொரித்து குறுக்கே வெட்டிய பச்சைமிளகாயையும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவேண்டும்.
பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
அதனுடன் குக்கரில் இருந்து எடுத்த பார்லியையும் பயத்தம்பருப்பையும் தேவையான உப்பு,சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவேண்டும்.
கிச்சடி கொதித்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சம்பழத்தை பிழியவேண்டும்.
கொத்தமல்லித்தழையை தூவ பார்லி கிச்சடி ரெடி.

Wednesday, January 1, 2014

கேப்சிகம் கோசுமல்லி




தேவையானவை:

குடமிளகாய் 2
பயத்தம்பருப்பு 1/4 கப்
தேங்காய் துருவல் 1/4 கப்
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 கொத்து
உப்பு,எண்ணெய் தேவையானது

செய்முறை:


குடமிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பயத்தம்பருப்பை தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.
பொடியாக நறுக்கிய குடமிளகாயை சேர்த்து வதக்கவும்.
ஊறவைத்த பயத்தம்பருப்பை வடிகட்டி இதனுடன் சேர்த்து வதக்கவும்.
 குடமிளகாய் நன்கு வதங்கிய பின் தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குவதற்கு முன்பு தேங்காய் துருவலை தூவி இறக்கவும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...