Wednesday, January 30, 2013

சேமியா உப்புமா


   
தேவையானவை:

சேமியா உடைத்தது 2 கப்
வெங்காயம் 1
காரட் 2
குடமிளகாய் 1
உருளைக்கிழங்கு 1
பட்டாணி 1/2கப்
தக்காளி 2
பச்சைமிளகாய் 3
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சம்பழ சாறு 2 டேபிள்ஸ்பூன்
எண்ணைய் & உப்பு தேவையானது

தாளிக்க:
கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு,முந்திரிபருப்பு,கருவேப்பிலை எல்லாம் சிறிதளவு.

அலங்கரிக்க:
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை,தேங்காய் துருவல்.

செய்முறை:


வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு உருக்கி உடைத்த சேமியாவை போட்டு
பொன்னிறமாக வறுக்கவும்.
வெங்காயம்,காரட்,குடமிளகாய்,உருளைக்கிழங்கு,தக்காளி ஆகியவற்றை பொடியாக
நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு 10 கப் தண்ணீருடன் சிறிது
உப்பு,சிறிது எண்ணைய் விட்டு கொதிக்கவிடவும்.தண்ணீர் நன்றாக
கொதித்தவுடன் வறுத்த சேமியாவைபோட்டு கிளற் வேண்டும்.சேமியா வெந்தவுடன்
வடிகட்டி அதன் மேல் குளிர்ந்த தண்ணீரை விட்டு இரண்டு நிமிடம் கழித்து
அதனையும் வடிகட்டவேண்டும்.(இப்படி செய்வதால் சேமியா ஒட்டாமல் இருக்கும்)

வாணலியில் எண்ணைய் விட்டு தளிக்கவேண்டியவைகளை
தாளிக்கவேண்டும்.பச்சைமிளகாயை குறுக்காக வெட்டி அதனுடன் பொடியாக
நறுக்கிய எல்லா காய்கறிகளையும் போட்டு வதக்கவேண்டும்.காய்கறிகள் நன்றாக
வெந்தவுடன் தக்காளியை போட்டு வதக்கவேண்டும்.பின்னர் வடிகட்டிய சேமியாவை
சிறிது உப்பு,பெருங்காயத்தூள்சேர்த்து காய்கறிக்கலவையில் கல்ந்து கிளற
வேண்டும்.இறக்கிய பின் எலுமிச்சம்பழ சாறு விடவேண்டும்.கடைசியில் பொடியாக
நறுக்கிய கொத்தமல்லித்தழையையும்,தேங்காய் துருவலையும் தூவி
அலங்கரிக்கவேண்டும்.
(இப்பொழுதெல்லாம் roastedசேமியா கிடைக்கிறது.அதை உபயோகிப்பதானால் சேமியாவை வறுக்க வேண்டிய அவசியமில்லை.)

Friday, January 25, 2013

பசலை (Spinach) சப்ஜி




தேவையானவை:                  
பசலைக்கீரை

       
பசலைக்கீரை 1 கப் (பொடியாக நறுக்கியது)
பயத்தம்பருப்பு 1/2 கப்
வெங்காயம் 2
தக்காளி 2
-----
சாம்பார் பொடி 1/2 டீஸ்பூன்
தனியா தூள் 1/2 டீஸ்பூன்
சீரக தூள் 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையானது.
---
தாளிக்க:
கடுகு 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
----
செய்முறை:


பசலைக்கீரையை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பயத்தம்பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
வெங்காயம்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
----
குக்கரை எடுத்துக்கொண்டு அதில் ஊறவைத்த பயத்தம்பருப்பு,நறுக்கிய பசலைக்கீரை,
வெங்காயம்,தக்காளி,மேலே குறிப்பிட்ட மசாலா சாமான்கள்,அரை கப் தண்ணீர்,தேவையான உப்பு
எல்லாவற்றையும் ஒன்றாக வைத்து மூன்று விசிலுக்கு பிறகு அடுப்பை அணைக்கவும்.
குக்கரில் இருந்து எடுத்து தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.
சப்ஜி ரெடி.
இது பூரி,சப்பாத்திக்கு ஏற்ற side dish.

Tuesday, January 22, 2013

சன்னா (கொண்டக்கடலை) பிரியாணி



தேவையானவை:
சன்னா 1 கப்
பாசுமதி அரிசி 1 கப்
வெங்காயம் 2
தக்காளி 2
புதினா இலைகள் 10
உப்பு,எண்ணெய் தேவையானது
--------
அரைக்க:
இஞ்சி 1 துண்டு
பூண்டு 4 பற்கள்
துருவிய தேங்காய் 1/4 கப்
கரம் மசாலா 1 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லித்தழை 1/4 கப் (ஆய்ந்தது)
------
தாளிக்க:
பட்டை 1 துண்டு
கிராம்பு 2
ஏலக்காய் 2
சீரகம் 1 தேக்கரண்டி
-------
செய்முறை:

கொண்டக்கடலையை 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின்னர் குக்கரில் மூன்று விசில் வரும் வரை வைத்து எடுக்கவேண்டும்.
பாசுமதி அரிசியை ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் வீதம் வைத்து அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
தக்காளி வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
அரைக்கக்கொடுத்துள்ளவைகளை விழுதாக அரைக்கவேண்டும்.
---------
வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவேண்டும்.
பின்னர் தக்காளி,புதினா இலைகள் சேர்த்து வதக்கவேண்டும்,
வேகவைத்த கொண்டக்கடலை,அரைத்த விழுது தேவையான உப்பு சேர்த்து வதக்கி ஊறவைத்த அரிசியை வடிகட்டி (தண்ணீரை எடுத்துவைக்கவேண்டும்.) இதனுடன் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்ட வேண்டும்.
எல்லாவற்றையும் ele.cooker ல் ஊறவைத்த தண்ணீருடன் சேர்த்து வைக்கவேண்டும்.
சுவையான சன்னா பிரியாணி ரெடி.

Thursday, January 17, 2013

பார்லி உப்புமா கொழுக்கட்டை




தேவையானவை:
பார்லி 1 கப்
உப்பு,எண்ணெய் தேவையானது                      பார்லி
                                                   
-------
அரைக்க:
துவரம்பருப்பு 2 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் 3
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
பெருங்காயம் 1 துண்டு
------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
கடலைபருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
மிளகாய் வற்றல் 2
-------
செய்முறை:

பார்லியை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து மிக்சியில் ரவை பதத்திற்கு பொடித்துக்கொள்ளவும்.
அரைக்கக்கொடுத்துள்ள பொருட்களை பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து நன்றாக விழுது போல் அரைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெயில் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து 2 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
(ஒரு கப் உடைத்த பார்லி ரவாவுக்கு 2 1/2 கப் தண்ணீர் வீதம்)
அரைத்த விழுதையும் தேவையான உப்பையும் அதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
தண்ணீர் கொதித்தவுடன் பார்லி ரவையை மெதுவாக தூவி கட்டியில்லாமல் கிளறவேண்டும்.
தேவையானால் சிறிது எண்ணெய் சேர்த்து கிளறலாம்.
ஆறினவுடன் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் ஆவியில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்க
சுவையான பார்லி உப்புமா கொழுக்கட்டை ரெடி.

தேங்காய் சட்னி,தக்காளி சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

Monday, January 14, 2013

கலந்த சாதங்கள் (சித்ரான்னம்)



 புளியோதரை


தேவையானவை:

பாசுமதி அரிசி 2 கப்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
நல்லெண்ணைய் 4 டேபிள்ஸ்பூன்
முந்திரிபருப்பு 10
வேர்க்கடலை 10
கறிவேப்பிலை சிறிதளவு
நெய் 1 டீஸ்பூன்
---------
புளிக்காய்ச்சல் செய்ய தேவையானது:

புளி 2 எலுமிச்சை அளவு
மிளகாய்வற்றல் 6
வெந்தயம் 2 டீஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கடலைபருப்பு 1 டீஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு

செய்முறை:


வாணலியில் எண்ணைய் விடாமல் வெந்தயத்தை வறுத்து எண்ணைய் விட்டு மிளகாய்வற்றலை வறுத்து இரண்டையும் சிறிது உப்போடு நன்கு பொடி பண்ணிக்கொள்ளவும்.

புளியை இரண்டு கப் தண்ணீரில் கெட்டியாக கரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணைய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு,மீதமுள்ள 2 மிளகாய்,பெருங்காயம் இவற்றை வறுத்துக்கொண்டு தயாராக உள்ள புளித்தண்ணியை சிறிது உப்புடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.வெந்தயப் பொடியில் பாதியை இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
20 நிமிடங்கள் நன்றாக கொதித்து கெட்டியானதும் இறக்கவேண்டும். இப்பொழுது புளிக்காய்ச்சல் ரெடி.

பாசுமதி அரிசியை ஒரு கப்புக்கு 1 1/2 கப் தண்ணீர் வைத்து உதிரியாக குக்கரில் 3 விசில் வரும் வரை வைக்கவும்.(ele,cooker லும் வைக்கலாம்)
சாதம் ஆறினவுடன் ஒரு தட்டில் பரவலாக போட்டு மஞ்சள் தூள் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணைய் சேர்த்து பிசறவேண்டும்.15 நிமிடம் ஊறவேண்டும்.
பின்னர் செய்து வைத்திருக்கும் புளிக்காய்ச்சலை சேர்க்கவும் மீதமுள்ள பொடியை சேர்க்கவும்..முந்திரிபருப்பு,வேர்க்கடலை,கறிவேப்பிலை மூன்றையும் சிறிது நெய்யில் வறுத்து நன்றாக கலந்து வைக்கவும்.
--------------------------------------

எலுமிச்சம்பழ சாதம்.

தேவையானவை
பாசுமதி அரிசி 2 கப்
எலுமிச்சம்பழம் 2
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
நல்லெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்

பொடிபண்ண:
வெந்தயம் 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 3
உப்பு தேவையானது

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 2 (நாலாக கிள்ளிக்கொள்ளவும்)
முந்திரிபருப்பு 5
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து'

செய்முறை:

1.பாசுமதி அரிசியை 40 நிமிடம் (ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர்)ஊறவைக்கவும்.
அப்படியே Electric cooker ல் வைத்தால் உதிரியாக வரும்.

2.சாதத்தை ஒரு அகண்ட தட்டில் கொட்டி அதன் மீது மஞ்சள்தூள்,நல்லெண்ணைய் கலந்து ஆறவைக்கவும்.

3.வாணலியில் எண்ணைய் விடாமல் வெந்தயத்தை வறுக்கவேண்டும்.
சிறிது எண்ணைய் விட்டு மிளகாய் வற்றலை வறுக்கவேண்டும்.
உப்பு வறுக்கவேண்டாம்.
மூன்றையும் பொடி பண்ணி சாதத்தில் தூவவேண்டும்.
4.கடைசியாக தாளிக்கவேண்டியவைகளை தாளித்து அதையும் சாதத்தில் கலந்து
எலுமிச்சம்பழம் பிழிய வேண்டும்.
எல்லாவற்றையும் நன்றாக கலந்து எடுத்து வைக்கவேண்டும்.

(சாதாரண பச்சைஅரிசியிலும் செய்யலாம்.பாசுமதி சற்று சுவையைக் கூட்டும்)
----------------------------------------


தேங்காய் சாதம்

தேவையானவை:
பாசுமதி அரிசி 1 கப்
தேங்காய் துருவல் 1 கப்
மிளகாய் வற்றல் 2 எண்ணெயில் கடுகு
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு தேவையானது
தேங்காய் எண்ணெய் 1 மேசைக்கரண்டி
-------
செய்முறை

பாசுமதி அரிசியை 20 நிமிடம் ஊறவைத்து உதிரியாக வடித்துக்கொள்ளவும்.
தேங்காய் எண்ணெயில் தேங்காயை வறுத்துக்கொள்ளவும்.
சிறிது தேங்காய் எண்ணெயில் கடுகு,உளுத்தம்பருப்பு,கிள்ளிய மிளகாய் வற்றல்,கறிவேப்பிலை தாளித்துக்கொள்ளவும்.
ஒரு அகண்ட தட்டில் சாதத்தை பரவலாக போட்டு அதனுடன் வறுத்த தேங்காய் துருவல்,தாளித்த கடுகு,உளுத்தம்பருப்பு,மிளகாய் வற்றல்,கறிவேப்பிலை தேவையான் உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கலக்கவும்.
-------
கலந்த சாதங்களை அப்பளம்,வடகம் ஆகியவற்றுடன் சாப்பிடலாம்.
தவிர்த்து சிறிது மோர்க்குழம்புடனும் சாப்பிடலாம்
காணும் பொங்கல்,ஆடிப்பெருக்கு,சித்ரா பௌர்ணமி ஆகிய நாட்களில் 'சித்ரான்னம்' என்ற பெயரில் கலந்த சாதங்களை செய்வது வழக்கம்.
=====================
எள்ளு சாதமும் செய்யலாம்.
எள்ளுப் பொடிக்கு இந்த லிங்க் ஐ பார்க்கவும்.
http://annaimira.blogspot.com/2012/07/blog-post_31.html

Friday, January 11, 2013

புதினா துவையல்




தேவையானவை:
புதினா 1 கட்டு
மிளகாய் வற்றல் 4
உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் 1  துண்டு
புளி சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது             புதினா

-------
செய்முறை:
புதினாவை நன்கு ஆய்ந்துவிட்டு தண்ணீரில் அலசிக்கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து புதினாவை பிழிந்து போட்டு வதக்கவும்.
பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
மிளகாய் வற்றல்.உளுத்தம்பருப்பு,பெருங்காயம் மூன்றினையும் எண்ணெயில் வறுக்கவும்.
வதக்கிய புதினா,வறுத்த மிளகாய் வற்றல் உளுத்தம்பருப்பு,பெருங்காயம்,புளி,உப்பு எல்லாவற்றையும் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்
சூடான சாதத்துடன் சற்று நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட அருமை..

Wednesday, January 9, 2013

கோதுமை மாவு தோசை



தேவையானவை:
கோதுமைமாவு 1 கப்
ரவை 1 மேசைக்கரண்டி
அரிசி மாவு 1 மேசைக்கரண்டி
உப்பு எண்ணெய் தேவையானது
-------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 2
இஞ்சி 1 துண்டு
பச்சைமிளகாய் 3
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:

கோதுமை மாவை வெறும் வாணலியில் லேசாக வறுத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் கோதுமைமாவு,ரவை,அரிசிமாவு மூன்றையும் தேவையான உப்புடன் சேர்த்து தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளவேண்டும்.கரைத்த மாவு இட்லி மாவு பதத்திற்கு இல்லாமல் சற்று நீர்க்க இருக்கவேண்டும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,சீரகம்,மிளகாய் வற்றல்,பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய்,கறிவேப்பிலை எல்லாம் தாளித்து கரைத்த மாவில் சேர்க்கவேண்டும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து மாவை அள்ளித்தெளித்தாற்போல் பரவலாக ஊற்றி வார்த்து எடுக்கவேண்டும்.
வெங்காய காரச்சட்னியுடன் சாப்பிட சுவையோ சுவை.

Thursday, January 3, 2013

பாகற்காய் பிட்லை


 

                                                                               
தேவையானவை:                                                  மிதி பாகற்காய்                                                                                 
                                                                                 

மிதி பாகற்காய் 200 gm
கொண்டைக்கடலை 1/2 கப் (channa)
துவரம்பருப்பு 1 கப்
புளி எலுமிச்சை அளவு
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
உப்பு எண்ணெய் தேவையானது
----
அரைக்க:

தனியா 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
கடலைபருப்பு 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 10
உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப்
பெருங்காயம் சிறிதளவு
---
தாளிக்க:

கடுகு,உளுத்தம்பருப்பு,மிளகாய்வற்றல்,கறிவேப்பிலை
-----

செய்முறை:


1.துவரம்பருப்பை மஞ்சள்பொடி சேர்த்து குக்கரில் வேகவைக்கவும்.
2.மிதி பாகற்காயை காம்பை எடுத்துவிட்டு குறுக்காக வெட்டவும்.
3.கொண்டக்கடலையை முந்தினநாள் இரவே ஊறவைக்கவும்.
4.அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணய் விட்டு வறுத்து நைசாக இல்லாமல் அரைத்துக்கொள்ளவும்.
----
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு எண்ணைவிட்டு தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவும்.
பின்னர் குறுக்காக வெட்டிய பாகற்காய்,ஊறவைத்த கொண்டக்கடலை இரண்டையும் சேர்த்து வதக்கவும்.
மிதி பாகற்காய் நன்றாக வெந்ததும் வேகவைத்த துவரம்பருப்பு,அரைத்த விழுது,உப்பு மூன்றையும் சேர்த்து கொதிக்க வைக்கவும்
புளியை கரைத்துவிடவும். நன்றாக கொதிவந்ததும் இறக்கவும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...