Wednesday, January 30, 2013

சேமியா உப்புமா


   
தேவையானவை:

சேமியா உடைத்தது 2 கப்
வெங்காயம் 1
காரட் 2
குடமிளகாய் 1
உருளைக்கிழங்கு 1
பட்டாணி 1/2கப்
தக்காளி 2
பச்சைமிளகாய் 3
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சம்பழ சாறு 2 டேபிள்ஸ்பூன்
எண்ணைய் & உப்பு தேவையானது

தாளிக்க:
கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு,முந்திரிபருப்பு,கருவேப்பிலை எல்லாம் சிறிதளவு.

அலங்கரிக்க:
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை,தேங்காய் துருவல்.

செய்முறை:


வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு உருக்கி உடைத்த சேமியாவை போட்டு
பொன்னிறமாக வறுக்கவும்.
வெங்காயம்,காரட்,குடமிளகாய்,உருளைக்கிழங்கு,தக்காளி ஆகியவற்றை பொடியாக
நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு 10 கப் தண்ணீருடன் சிறிது
உப்பு,சிறிது எண்ணைய் விட்டு கொதிக்கவிடவும்.தண்ணீர் நன்றாக
கொதித்தவுடன் வறுத்த சேமியாவைபோட்டு கிளற் வேண்டும்.சேமியா வெந்தவுடன்
வடிகட்டி அதன் மேல் குளிர்ந்த தண்ணீரை விட்டு இரண்டு நிமிடம் கழித்து
அதனையும் வடிகட்டவேண்டும்.(இப்படி செய்வதால் சேமியா ஒட்டாமல் இருக்கும்)

வாணலியில் எண்ணைய் விட்டு தளிக்கவேண்டியவைகளை
தாளிக்கவேண்டும்.பச்சைமிளகாயை குறுக்காக வெட்டி அதனுடன் பொடியாக
நறுக்கிய எல்லா காய்கறிகளையும் போட்டு வதக்கவேண்டும்.காய்கறிகள் நன்றாக
வெந்தவுடன் தக்காளியை போட்டு வதக்கவேண்டும்.பின்னர் வடிகட்டிய சேமியாவை
சிறிது உப்பு,பெருங்காயத்தூள்சேர்த்து காய்கறிக்கலவையில் கல்ந்து கிளற
வேண்டும்.இறக்கிய பின் எலுமிச்சம்பழ சாறு விடவேண்டும்.கடைசியில் பொடியாக
நறுக்கிய கொத்தமல்லித்தழையையும்,தேங்காய் துருவலையும் தூவி
அலங்கரிக்கவேண்டும்.
(இப்பொழுதெல்லாம் roastedசேமியா கிடைக்கிறது.அதை உபயோகிப்பதானால் சேமியாவை வறுக்க வேண்டிய அவசியமில்லை.)

6 comments:

Yaathoramani.blogspot.com said...

இன்று என்னுடைய சமையல்தான்
அருமையான ரெசிபிக்கு மனமார்ந்த நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

எனக்கு சிறிது பிடிக்காத ஐட்டம்... உங்களின் குறிப்பு போல் செய்து பார்க்க வேண்டும்... நன்றி...

Kanchana Radhakrishnan said...

// Ramani S said...
இன்று என்னுடைய சமையல்தான்
அருமையான ரெசிபிக்கு மனமார்ந்த நன்றி//

வருகைக்கு நன்றி ரமணி.

Kanchana Radhakrishnan said...

//
திண்டுக்கல் தனபாலன் said...
எனக்கு சிறிது பிடிக்காத ஐட்டம்... உங்களின் குறிப்பு போல் செய்து பார்க்க வேண்டும்... நன்றி...//


செய்துபாருங்கள்.நன்றாக இருக்கும்.வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.

ADHI VENKAT said...

நல்லதொரு பகிர்வு. சேமியா உப்புமா எனக்கு பிடிக்கும். ஆனால் அப்பாவுக்கும், மகளுக்கும் பிடிக்காததால் வாங்குவதேயில்லை....:))

Kanchana Radhakrishnan said...

:-)))

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...