Monday, April 25, 2016

மாங்காய் சாதம்



தேவையானவை:

மாங்காய் 1
இஞ்சி ஒரு துண்டு
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
வடித்த சாதம் 1 கப்
எலுமிச்சம்பழம் 1
தேங்காய் எண்ணெய் 1 மேசைக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
-----
பொடி பண்ண:
கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
தனியா 2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி
சிவப்பு மிளகாய் 2
-------------
தாளிக்க:
கடுகு 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1/2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 2
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:

மாங்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
இஞ்சியையும் துருவிக்கொள்ளவும்
பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
பொடிக்க கொடுத்துள்ளவைகளை நன்றாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
-----
வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவும்.
அதனுடன் துருவிய மாங்காய், இஞ்சி,மஞ்சள்தூள்,தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
இதனுடன் உதிரியாக வடித்த சாதம்,பொடித்து வைத்துள்ள பொடி,சிறிது உப்பு,தேங்காய் எண்ணெய்,எலுமிச்சம்பழ சாறு சேர்த்து நன்கு கிளறவும்.
சுவையான மாங்காய் சாதம் ரெடி.
தயிர் பச்சடி இதற்கு ஏற்ற sidedish

Monday, April 18, 2016

மாம்பழம்,பப்பாளி மில்க் ஷேக்



தேவையானவை:

மாம்பழம் 1
பப்பாளி 1
வாழைப்பழம் 1
பேரீச்சம்பழம் 2
பாதாம் 5
பால் 2 கப்
-------
செய்முறை:




மாம்பழத்தை தோலை சீவிவிட்டு நறுக்கிக்கொள்ளவும்.
பப்பாளியையும் தோலை சீவிவிட்டு நறுக்கிக்கொள்ளவும்.
வாழைப்பழத்தை தோலை எடுத்துவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
மிக்சியை எடுத்துக்கொண்டு அதில் முதலில் பாதாம் பருப்பை சிறிது பாலுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
பின்னர் நறுக்கிய மாம்பழம்,பப்பாளி,வாழைப்பழம்,பேரீச்சம்பழம்,பால் சேர்த்து விப்பரில் அரைக்கவும்.

வெயிலுக்கு இதமானது.
 குழந்தைகளும்  விரும்பி சாப்பிடுவார்கள்.

Monday, April 11, 2016

உருளைக்கிழங்கு பால் கூட்டு



உருளைக்கிழங்கு 4
தேங்காய் துருவல் 2 கப்
பச்சைமிளகாய் 2
இஞ்சி 1 துண்டு
வெங்காயம் 1
தேங்காய் எண்ணெய் 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு தேவையானது
-----------------------

செய்முறை:

தேங்காயை துருவி முதலில் கெட்டியாகவும்,இரண்டாவது கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொஞ்சம் கெட்டியாகவும்,மூன்றாவ்ஸ்து பால் தண்ணீராகவும் எடுத்துக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
பச்சைமிளகாய்,இஞ்சி,வெங்காயம் மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து மூன்றாவதாக எடுத்த தண்ணீர் பாலில் இஞ்சி,பச்சைமிளகாய்,வெங்காயத்துண்டுகளைப் போட்டு வேகவைக்கவும்.
அடுத்து இரண்டாவது பாலை ஊற்றி நறுக்கி வைத்த உருளைக்கிழங்கு துண்டுகளைப் போடவும். தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவைக்கவும்.

கொதித்து வரும்போது கெட்டியான முதல் பாலை சேர்த்து சிறிது கொதிக்கவைத்து கறிவேப்பிலை போட்டு தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கவும்.

பூரி சப்பாத்திக்கு ஏற்ற sidedish.

Tuesday, April 5, 2016

சேனைக்கிழங்கு மசியல்



தேவையானவை :

சேனைக்கிழங்கு  1 பெரிய துண்டு
பச்சைமிளகாய் 2
எலுமிச்சம்பழம் 1
வெங்காயம் 1
இஞ்சி ஒரு துண்டு
மிளகாய்தூள் 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
------------------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
-------------------------
செய்முறை:
சேனைக்கிழங்கின் தோலை சீவிவிட்டு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வெட்டிய துண்டுகளை வேகவைத்து நன்றாக மசித்துக்கொள்ளவும்.
வெங்காயம்,இஞ்சி,பச்சைமிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மசித்த சேனைக்கிழங்கு துண்டுகள்.எலுமிச்சம்பழச்சாறு,மிளகாய் தூள், தேவையான உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயம்,இஞ்சி,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
அத்துடன் சேனைக்கிழங்கு கலவையை சிறிது தண்ணீருடன் சேர்த்து கிளறவும்.
மசியல் பவுன் நிறம் வந்ததும் இறக்கவும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...