Tuesday, July 29, 2014

உருளைக்கிழங்கு STEW (எளிய முறை)



தேவையானவை:

உருளைக்கிழங்கு 2
வெங்காயம் 1
பச்சைமிளகாய் 3
இஞ்சிபூண்டு விழுது 1 தேக்கரண்டி
தேங்காயெண்ணெய் 1/4 கப்
தேங்காய் பால் 2 கப்
கறிவேப்பிலை 1 கொத்து
உப்பு தேவையானது
--------
செய்முறை:


உருளைக்கிழங்கை தோலுரித்து சிறிது பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
பச்சைமிளகாயை குறுக்கே வெட்டிக்கொள்ளவும்.
-------
அடுப்பில் கடாயை வைத்து சிறிது தேங்காயெண்ணெயில் வெங்காயம்,பச்சைமிளகாய் இரண்டையும் வதக்கவும்.வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கக்கூடாது.சிறிது வதக்கினால் போதும்.
அதனுடன் இஞ்சிபூண்டு விழுது,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின்னர் உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்.மேலும் தேங்காயெண்ணய் சேர்த்து வதக்கவும்.உருளைக்கிழங்கு வெந்ததும்
தேவையான உப்பும் சிறிது தண்ணீரும் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
கடைசியில் தேங்காய் பால் சேர்த்து சிறிது கொதித்தவுடன் இறக்கவேண்டும்.
இந்த உருளைக்கிழங்கு STEW தண்ணியாக இருக்கவேண்டும்.
இட்லி தோசைக்கு ஏற்ற sidedish.

Thursday, July 24, 2014

மெக்சிகன் ரைஸ்


தேவையானவை:
பாசுமதி அரிசி 2 கப்
--------
குடமிளகாய் 3
(பச்சை,மஞ்சள் சிவப்பு ஒவ்வொன்றிலும் ஒன்று)
Spring onion 1 கட்டு
வெங்காயம் 2
Jalapeno slices 5
--------
இஞ்சி பூண்டு விழுது 1 மேசைக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
தக்காளி பேஸ்டு 1/2 கப்
காரப்பொடி 1 மேசைக்கரண்டி
------
வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
உப்பு எண்ணெய் தேவையானது
-----
செய்முறை:

பாசுமதி அரிசியை (ஒரு கப்புக்கு இரண்டு கப் தண்ணீர்) 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
குடமிளகாய்,வெங்காயம் இரண்டையும் நீட்ட வாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
spring onion ஐ பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
Jalapeno slices ஐ அப்படியே போடலாம்.
------
அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெயில் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் நறுக்கி வைத்துள்ள குடமிளகாய்,spring onio,jalapeno slices மூன்றையும் சேர்த்து வதக்கவும்.
தேவையான  உப்பு சேர்த்து இஞ்சி பூண்டு விழுது,சீரகம்,தக்காளி பேஸ்டு,காரப்பொடி எல்லாம் சேர்த்து வதக்கவும்.
எல்லாம் சிறிது வதங்கியதும் வெண்ணெய் சேர்த்து ஊறவைத்துள்ள அரிசியுடன் கலந்து அப்படியே Ele.cooker ல்
வைக்கலாம்.

Monday, July 14, 2014

அங்காயப்பொடி

தேவையானவை:

வேப்பம்பூ 1/2 கப்  தனியா 1/2 கப்

மிளகு 2 டேபிள்ஸ்பூன்

சீரகம் 2 டேபிள்ஸ்பூன்

சுண்டைக்காய் வற்றல் 15

மிளகாய் வற்றல் 4

பெருங்காயம் 1 துண்டு

கறிவேப்பிலை 1/2 கப்

சுக்குப்பொடி 2 டீஸ்பூன்

கடுகு 1/2 டீஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது



செய்முறை:


ஒரு கடாயை எடுத்துக்கொண்டு அதில் வேப்பம்பூவை கருஞ்சிவப்பாக வறுக்கவேண்டும்.

தனியா,மிளகு,சீரகம் மூன்றையும் சிறிது எண்ணையில் நல்ல சிவப்பாக வறுக்கவேண்டும்.

சுண்டைக்காய் வற்றலை எண்ணையில் வறுக்காமல் பொறிக்கவேண்டும்.

மிளகாய் வற்றல்,பெருங்காயம்,கறிவேப்பிலை மூன்றையும் வறுக்கவேண்டும்.

சுக்கை சிறு சிறு துண்டுகளாக்கி பொடி செய்யலாம்.(அல்லது கடையில் சுக்குப்பொடியே கிடைக்கும்.அதை வாங்கிக் கொள்ளவும்)

கடுகையும் உப்பையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுக்கவேண்டும்.

எல்லாவற்றையும் ஒன்றாக மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவேண்டும்.

சாதத்தில் முதலில் நல்லெண்ணைய் சேர்த்து பிசறி பின் இந்த பொடியை சேர்த்து சாப்பிடவேண்டும்

வயிறு சம்மந்தமான உபாதைகளை அங்காயப்பொடி தீர்க்கும்.

Monday, July 7, 2014

கறிவேப்பிலை பொடி



தேவையானவை:
கறிவேப்பிலை 1 கப் (ஆய்ந்தது)
மிளகாய்வற்றல் 4
உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி
கடலைபருப்பு 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் 1 துண்டு
புளி சி றி தளவு
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து ஆய்ந்து வைத்துள்ள கறிவேப்பிலையை போட்டு எண்ணைய் விடாமல் ஒரு பிரட்ட வேண்டும்.
ஈரமெல்லாம் போனவுடன் தனியே எடுத்து வைக்கவேண்டும்.
வாணலியில் சிறிது எண்ணைய் வைத்து மிளகாய் வற்றலை தனியே வறுத்து எடுக்கவேண்டும்.
அதே வாணலியில் கடலை பருப்பு,உளுத்தம்பருப்பு இரண்டையும் பொன்னிறமாக வறுக்கவேண்டும்.
பெருங்காயத்தை தனியே பொரித்து எடுக்கவேண்டும்
 கடைசியில் புளியையும் உப்பையும் ஒரு பிரட்டு பிரட்ட வேண்டும்.

மிக்சியில் முதலில் பருப்புகளையும்,மிளகாய்வற்றல், பெருங்காயம் புளி உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி விட்டு கறிவேப்பிலையை சேர்த்து
பொடியாக அரைக்கவேண்டும்.
கறிவேப்பிலை பொடியை சாதத்தோடு சிறிது நல்லெண்ணைய் சேர்த்து சாப்பிடலாம்.
தயிர் சாதத்திற்கு ஊறுகாய்க்கு பதில் தொட்டுக்கொள்ளலாம்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...