Thursday, April 29, 2010

வேப்பிலைக் கட்டி

எலுமிச்ச இலை


நார்த்த இலை



தேவையானவை:

நார்த்த இலை 1 கப்
எலுமிச்சை இலை 1 கப்
கறிவேப்பிலை 1/2 கப்
மிளகாய் வற்றல் 10
ஓமம் 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் சிறிது
உப்பு தேவையானது

செய்முறை:


எலுமிச்ச இலையையும் நார்த்த இலையையும் நன்றாகக் கழுவி துடைத்து நிழலில் உலர்த்தி எடுக்கவேண்டும்.(இலைகளை microwave oven ல் ஒரு microwave plate ல் பரப்பி 10 sec. வைத்தாலும் போதும்)

வெறும் கடாயில் இலைகளை எண்ணைய் விடாமல் வறுக்கவேண்டும்.பிறகு மிளகாய் வற்றல்,ஓமம்,பெருங்காயம் மூன்றையும் எண்ணைய் விட்டு வறுக்கவேண்டும்.

இலைகள் தவிர மற்றவற்றை உப்புடன் சேர்த்து மிக்ஸியில் பொடி செய்து கடைசியில் இலைகளையும் சேர்த்து அரைக்கவேண்டும்.

வெய்யிலுக்கு தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.

Monday, April 26, 2010

பீட்ரூட் போளி



தேவையானவை:

பீட்ரூட் 1கப்(துருவியது)
தேங்காய் 1 கப் (துருவியது)
வெல்லம் 1 கப் (பொடித்தது)
பொட்டுக்கடலை 1 கப்
வெள்ளை எள் 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் 3
---
மைதாமாவு 1 கப்
நெய் 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:



மைதாமாவை சலித்து உப்பு,எண்ணைய்,மஞ்சள்தூள் சேர்த்து நன்கு பிசையவேண்டும்.ஒரு மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.

பீட்ரூட் துருவல்,தேங்காய் துருவல் இரண்டையும் ஒரு பேப்பரில் பரவலாக போட்டு காய வைக்கவும்.

ஏலக்காயை வெறும் வாணலியில் வறுத்து அதனுடன் பொட்டுக்கடலை,எள் இரண்டையும் சேர்த்து மிக்ஸியில் பொடி பண்ணவும்.

வெல்லத்தை சிறிது தண்ணீருடன் ஒரு பாத்திரத்தில் வைத்து அடுப்பில் வைக்கவும்.கம்பிப் பாகு வந்ததும் காய வைத்துள்ள பீட்ரூட் துருவல்,தேங்காய் துருவல் இரண்டையும் கொட்டி கிளறவும்.
பின்னர் பொட்டுக்கடலை பொடியை தூவி கிளறவும்.கொழுக்கட்டை பூரணம் மாதிரி வரும்.

மைதாமாவை சிறு சிறு உருண்டைகளாக்கி சப்பாத்திக்கு இடுவதுபோல இட்டு பீட்ரூட் பூரணத்தை உள்ளே வைத்து மூடி கையால் தட்டவும்.ஒவ்வொரு உருண்டையையும் இது மாதிரி செய்யவேண்டும்.
அடுப்பில் தோசைக்கல்லை போட்டு சிறிது நெய் விட்டு ஒவ்வொரு போளியாக போட்டு இரண்டு பக்கமும் நன்கு வெந்ததும் எடுக்கவேண்டும்.

குழந்தைகள் இதனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்..

Thursday, April 22, 2010

பச்சடிகள் பலவிதம்

1.தக்காளி பச்சடி

தக்காளியை வென்னீரில் போட்டு தோலுரித்து மசிக்கவும்.
தேங்காய் துருவல் (1 tsp),பச்சைமிளகாய் (1),பெருங்காயத்தூள் (1 tsp) மூன்றையும் விழுது போல அரைக்கவும்.
ஒரு கப் தயிரில் மசித்த தக்காளி,அரைத்த விழுது கலந்து கடுகு,உளுத்தம்பருப்பு, சீரகம் தாளிக்கவும்.

2.டாங்கர் பச்சடி:

உளுத்தம்பருப்பு கால் கப் எடுத்து வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும்.
ஒரு கப் தயிரைக் கடைந்து ஒரு டேபிள்ஸ்பூன் உளுத்தம்பொடி,உப்பு சேர்த்து கலக்கவும்.
கடுகு,கறிவேப்பிலை தாளிக்கவும்.
சீரகத்தை உள்ளங்கையில் வைத்து கசக்கி பச்சடியில் சேர்க்கவும்.

3.குடமிளகாய் பச்சடி:

ஒரு குடமிளகாயை பொடியாக நறுக்கி எண்ணைய் விட்டு நன்கு வதக்கவும்.
பொட்டுக்கடலை (1 tsp),இஞ்சி துருவல் (1 tsp),பச்சைமிளகாய் (1),மல்லித்தழை (சிறிதளவு) நான்கையும் விழுதாக அரைக்கவும்.
ஒரு கப் தயிரில் வதக்கின குடமிளகாய்,அரைத்த விழுது,உப்பு சேர்த்து கலக்கவும்.
கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.

4.வெள்ளரி பச்சடி:

வெள்ளரிக்காய் ஒன்றை எடுத்து தோல் சீவி துருவிக்கொள்ளவும்.
பச்சைமிளகாய் (1) கடுகு (1/2 tsp) தேங்காய் துருவல் (1 tsp),பெருங்காயத்தூள் (1/2 tsp) நான்கையும் விழுதுபோல அரைக்கவும்.
ஒரு கப் தயிரில் துருவிய வெள்ளரிக்காய்,அரைத்த விழுது,உப்புடன் சேர்த்து கலக்கவும்.
சீரகம் கறிவேப்பிலை தாளிக்கவும்.

5.அன்னாசிப் பழ பச்சடி:

அன்னாசிப் பழத்தை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்கவும்.
தேங்காய் துருவல் (1tblsp),பச்சைமிளகாய் (2), சீரகம் (1tsp)மூன்றையும் விழுது போல அரைக்கவும்.
ஒரு கப் தயிரில் வேகவைத்த அன்னாசித் துண்டுகள்,அரைத்த விழுது உப்பு சேர்த்து கலக்கவும்.
கறிவேப்பிலை தாளிக்கவும்.

6.முருங்கைக்காய் பச்சடி:

நான்கு முருங்கைக்காய்களை நீட்ட துண்டுகளாக நறுக்கிவேகவைத்து உள்ளே இருக்கும் சதைப் பகுதிகளை வெளியே எடுக்கவும்.
பச்சைமிளகாய் (1),இஞ்சி (ஒரு துண்டு) சீரகம் (1tsp) மூன்றையும் அரைக்கவும்.
வெங்காயம் ஒன்றை பொடியாக நறுக்கவும்.
ஒரு கப் தயிரில் முருங்கை விழுது,அரைத்த விழுது,பொடியாக நறுக்கிய வெங்காயம்,உப்பு சேர்த்து கலக்கவும்.
கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.

Monday, April 19, 2010

காரட் பரோட்டா


தேவையானவை:


மைதாமாவு 1 கப்
கோதுமைமாவு 1 கப்
வெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையானது
------
காரட் 2
உருளைக்கிழங்கு 2
வெங்காயம் 1
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
தனியாதூள் 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
----
தாளிக்க:

கடுகு 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
----

செய்முறை:


மைதாமாவையும்,கோதுமைமாவையும் சிறிது வெண்ணைய்,உப்பு,தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவதுபோல் பிசைந்து அரைமணிநேரம் ஊறவைக்கவும்.

காரட்டை துருவிக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் துருவிய காரட்,மசித்த உருளைக்கிழங்கு,உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
தனியாதூள்,மிளகாய்தூள் சிறிது தண்ணீர் தெளித்து நன்கு வதக்கவேண்டும்.கலவை சற்று கெட்டியாக இருக்கவேண்டும்.

பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி சப்பாத்தியாக இடவும்.
ஒரு சப்பாத்தி மேல் தயாராக உள்ள காரட் கலவையை பரவலாகப் போட்டு அதன் மேல் இன்னொரு சப்பாத்தி வைத்து ஓரங்களை ஒட்டி தோசை தவாவில் போட்டு இறுபுறமும் சிவந்ததும் எடுக்கவும்.

Saturday, April 10, 2010

"அ" வை நீக்கி தண்ணீரை சேமிக்கவும்.




அலட்சியத்தில்

அ வை நீக்கி

சிறுதுளி பெருவெள்ளம்

என்றில்லாது

பெரும்துளிகளை சேமிப்பதே

லட்சியமாகட்டும்.


வழியும் டேங்க்

பாதாம் அல்வா


தேவையானவை:

பாதாம் பருப்பு 1 கப் (அரைத்த விழுது)
சர்க்கரை 1 கப்
நெய் 1/4 கப்
குங்குமப்பூ சிறிது (optional)
ஏலக்காய் தூள் 1/2 டீஸ்பூன்
Lemon yellow colour 1/2 டீஸ்பூன்

செய்முறை:

பாதாம் பருப்புகளை கொதிக்கும் நீரில் போட்டு அரைமணிநேரம் மூடிவைக்கவேண்டும்.பின்னர் அதனை எடுத்து தோலுரித்து சிறிது தண்ணீருடன் மிக்ஸியில் சற்று கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.

அடுப்பில் சற்று அடி கனமான பாத்திரத்தை வைத்து பாதாம் விழுதுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவேண்டும்.உருட்டுகிற பதம் வருகிறவரை கிளறவேண்டும்.பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு பாதாம் பருப்பு விழுது,சர்க்கரை கலவையில் நெய் சேர்த்து கிளறவேண்டும்.(அடுப்பு எரியும்போதே நெய் ஊற்றி கிளறினால் அல்வாவின் நிறம் மாறிவிடும்)அல்வாவானது பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்.

அல்வாவில் ஏலப்பொடி,குங்குமப்பூ,lemon colour சேர்க்கவண்டும்.

Wednesday, April 7, 2010

பேபிகார்ன் மசாலா


தேவையானவை:

பேபி கார்ன் 10
வெங்காயம் 1
தக்காளி 2
உருளைக்கிழங்கு 1
முட்டைக்கோஸ் 1/2 கப் (நறுக்கியது)
பீன்ஸ் 1/2 கப் (நறுக்கியது
காரட் 2
குடமிளகாய் 1
----
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
தனியாதூள் 1 டீஸ்பூன்
காரப்பொடி 1 டீஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது 1 டீஸ்பூன்
வேர்கடலை பொடி 1 டேபீள்ஸ்பூன்
எலுமிச்சம்பழம் 1
-----
தாளிக்க:
கடுகு 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 2
பட்டை 1 துண்டு
கிராம்பு 4
சோம்பு 1 டீஸ்பூன்
----
செய்முறை:


பேபிகார்னை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளி,உருளைக்கிழங்கு,காரட்,குடமிளகாய் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

கடாயில் எண்ணைய் வைத்து தாளிக்கக் கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.பிறகு சிறிது மஞ்சள்தூள் சேர்த்து நறுக்கிய பேபிகார்னை வதக்கவும்.
பேபிகார்ன் சிறிது வெந்ததும் நறுக்கிய தக்காளி,உருளைக்கிழங்கு,முட்டைக்கோஸ்,பீன்ஸ்,காரட்,குடமிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.
உப்பு சேர்த்து அதனுடன் தனியாதூள்,காரப்பொடி,இஞ்சி பூண்டு விழுது,சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
இறக்கியபின் வேர்க்கடலை பொடியை தூவவும்.
கொஞ்சம் ஆறிய பிறகு எலுமிச்சம்பழம் பிழியலாம்.
பேபிகார்ன் மசாலா சப்பாத்தி,பூரிக்கு சிறந்த sidedish.

Sunday, April 4, 2010

நீரிழிவிற்கு நாவல்பழம்


நாவல்பழம்,நாகப்பழம்,நவாப்பழம் என்று பல பெயர்களில் இந்த பழம் அழைக்கப்படும்.

கல்லீரல் கோளாறுகள்,குடற்புண் போன்றவற்றை இப்பழம் போக்கவல்லது.

நாவல்பழத்தின் விதையில் ' ஜம்போலைன் ' என்ற குளுக்கோசைட் உள்ளது.இதன் செயல்பாடு உடலுக்குள் ஸ்டார்ச்சை சக்கரையாக மாற்றும் செயலை தடுக்கிறது.

இதனால் நாவல்பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

நாவல்பழத்தின் விதைகளை இடித்து எடுக்கப்பட்ட தூளை தினமும் காலையிலும் மாலையிலும் தண்ணீருடன் (ஒரு ஸ்பூன் பொடியில் மூன்று ஸ்பூன் தண்ணீர் )கலந்து உட்கொள்ள
அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது குறையும் சர்க்கரையும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

தமிழ் இலக்கியங்களிலும் தெய்வ வழிபாட்டிலும் இடம் பெற்ற பழம் இது.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...