Thursday, April 22, 2010

பச்சடிகள் பலவிதம்

1.தக்காளி பச்சடி

தக்காளியை வென்னீரில் போட்டு தோலுரித்து மசிக்கவும்.
தேங்காய் துருவல் (1 tsp),பச்சைமிளகாய் (1),பெருங்காயத்தூள் (1 tsp) மூன்றையும் விழுது போல அரைக்கவும்.
ஒரு கப் தயிரில் மசித்த தக்காளி,அரைத்த விழுது கலந்து கடுகு,உளுத்தம்பருப்பு, சீரகம் தாளிக்கவும்.

2.டாங்கர் பச்சடி:

உளுத்தம்பருப்பு கால் கப் எடுத்து வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும்.
ஒரு கப் தயிரைக் கடைந்து ஒரு டேபிள்ஸ்பூன் உளுத்தம்பொடி,உப்பு சேர்த்து கலக்கவும்.
கடுகு,கறிவேப்பிலை தாளிக்கவும்.
சீரகத்தை உள்ளங்கையில் வைத்து கசக்கி பச்சடியில் சேர்க்கவும்.

3.குடமிளகாய் பச்சடி:

ஒரு குடமிளகாயை பொடியாக நறுக்கி எண்ணைய் விட்டு நன்கு வதக்கவும்.
பொட்டுக்கடலை (1 tsp),இஞ்சி துருவல் (1 tsp),பச்சைமிளகாய் (1),மல்லித்தழை (சிறிதளவு) நான்கையும் விழுதாக அரைக்கவும்.
ஒரு கப் தயிரில் வதக்கின குடமிளகாய்,அரைத்த விழுது,உப்பு சேர்த்து கலக்கவும்.
கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.

4.வெள்ளரி பச்சடி:

வெள்ளரிக்காய் ஒன்றை எடுத்து தோல் சீவி துருவிக்கொள்ளவும்.
பச்சைமிளகாய் (1) கடுகு (1/2 tsp) தேங்காய் துருவல் (1 tsp),பெருங்காயத்தூள் (1/2 tsp) நான்கையும் விழுதுபோல அரைக்கவும்.
ஒரு கப் தயிரில் துருவிய வெள்ளரிக்காய்,அரைத்த விழுது,உப்புடன் சேர்த்து கலக்கவும்.
சீரகம் கறிவேப்பிலை தாளிக்கவும்.

5.அன்னாசிப் பழ பச்சடி:

அன்னாசிப் பழத்தை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்கவும்.
தேங்காய் துருவல் (1tblsp),பச்சைமிளகாய் (2), சீரகம் (1tsp)மூன்றையும் விழுது போல அரைக்கவும்.
ஒரு கப் தயிரில் வேகவைத்த அன்னாசித் துண்டுகள்,அரைத்த விழுது உப்பு சேர்த்து கலக்கவும்.
கறிவேப்பிலை தாளிக்கவும்.

6.முருங்கைக்காய் பச்சடி:

நான்கு முருங்கைக்காய்களை நீட்ட துண்டுகளாக நறுக்கிவேகவைத்து உள்ளே இருக்கும் சதைப் பகுதிகளை வெளியே எடுக்கவும்.
பச்சைமிளகாய் (1),இஞ்சி (ஒரு துண்டு) சீரகம் (1tsp) மூன்றையும் அரைக்கவும்.
வெங்காயம் ஒன்றை பொடியாக நறுக்கவும்.
ஒரு கப் தயிரில் முருங்கை விழுது,அரைத்த விழுது,பொடியாக நறுக்கிய வெங்காயம்,உப்பு சேர்த்து கலக்கவும்.
கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.

8 comments:

Menaga Sathia said...

வாவ்வ்வ் அருமையான பச்சடி குறிப்புகள்!!

GEETHA ACHAL said...

சூப்பர்ப்..விதவிதமான பச்சடிகள்...அருமை...

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Menaga

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Geetha

Vijiskitchencreations said...

எல்லா பச்சடிகளும் சுப்பர். இஞ்ஞி பச்சடி விட்டுடிங்களா? நல்லா இருக்கும்.

Kanchana Radhakrishnan said...

இஞ்சி பச்சடி வெய்யிலுக்கு ஏற்றதில்லை.அதனால் விட்டுவிட்டேன்.வருகைக்கு நன்றி விஜி.

Mrs.Mano Saminathan said...

எல்லா பச்சடிகளும் நன்றாக இருக்கின்றன, குறிப்பாக முருங்க்கைக்காய் பச்சடி புதுமையாக இருக்கின்றது, காஞ்சனா!

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Mano Saminathan

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...