Thursday, July 31, 2008

சன்னா மசாலா

தேவையானவை:
சன்னா (கொண்டக்கடலை) 1 கப்
உருளைக்கிழங்கு 2
தக்காளி 2
வெங்காயம் 2
வெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் பொடி,தனியாபொடி,காரப்பொடி
அல்லது சாம்பார் பொடி,இஞ்சி பூண்டு விழுது,
சன்னா மசாலா பொடி எல்லாம் அரை டீஸ்பூன்

அரைக்க:
தேங்காய் 1/2 கப்
எள்ளு 1 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை 1 டீஸ்பூன்
கசகசா 1 டீஸ்பூன்
முந்திரிபருப்பு 4

செய்முறை:

சன்னாவை நான்கு மணிநேரம் ஊறவைத்து குக்கரில்
வேகவைக்கவேண்டும்.
உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கவேண்டும்.
தக்காளியை வென்னீரில் போட்டு தோலுரித்து பொடியாக நறுக்கவேண்டும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கவேண்டும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணையில் லேசாக
வறுத்து விழுதாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

வாணலியில் எண்ணைய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை
தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவேண்டும்.
பின்னர் வேகவைத்த சன்னா,உருளைக்கிழங்கு,தக்காளி ,தேவையான உப்பு,
தண்ணீர் சிறிதளவு விட்டு கிளற வேண்டும்.

பின்னர் அரைத்த விழுதையும் சேர்த்து மேலே குறிப்பிட்டுள்ள எல்லா
பொடிகளையும் கலந்து நன்கு கொதிக்கவைக்கவேண்டும்.
கடைசியில் வெண்ணைய் சேர்த்து இறக்கவேண்டும்.
சப்பாத்தி,பூரிக்கு ஏற்ற sidedish

Wednesday, July 30, 2008

சுரைக்காய் பால் கூட்டு

தேவையானவை:

சுரைக்காய் 1
வெங்காயம் 2
பச்சைமிளகாய் 3
பால் 2 கப்
மஞ்சள்தூள் 1 ட்ஸ்ப்
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:
சுரைக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
வெங்காயத்தையும் பொடியாக நறுக்கவும்.
பச்சைமிளகாயை நடுவில் கீறிக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணைய் வைத்து வெங்காயம்,மஞ்சள்தூள்,
உப்பு சேர்த்து வதக்கவும்.
பின்னர் சுரைக்காய் துண்டுகளைப்போடவும்.
தீயைக்குறைத்து மூடிவைக்கவும்.
சுரைக்காய் வெந்ததும் காய்ச்சிய பாலை விட்டு நன்கு
கொதிவந்ததும் இறக்கவும்

Tuesday, July 29, 2008

கொத்தமல்லி பாத்

தேவையானவை:

பாசுமதி அரிசி 2 கப்
கொத்தமல்லி 1 கட்டு
பூண்டு 4 பல்
தேங்காய் துருவல் 1 கப்
பச்சைமிளகாய் 2
முந்திரிபருப்பு 4
வெங்காயம் 1
காரப்பொடி 1 டேபிள்ஸ்பூன்
தனியாபொடி 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணெய் தேவையானது

கொத்தமல்லியை நன்கு ஆய்ந்து வென்னீரில் இரண்டு நிமிடம்
போட்டு எடுக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

அரைக்க:
பூண்டு,பச்சைமிளகாய் இரண்டையும் எண்ணையில் வத்க்கவும்.
தேங்காய் துருவல்,முந்திரிபருப்பு இரண்டையும் பொன்னிறமாக வறுக்கவும்.
எல்லாவற்றையும் சேர்த்து விழுதுபோல அரைக்கவும்.
செய்முறை:
அரிசியில் இரண்டு கப் தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து மூன்று விசில்
வந்தவுடன் இறக்கவும்.
கொத்தமல்லியோட அரைத்த விழுதையும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து
அரைக்கவும்.
வாணலியில் எண்ணய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை
தாளித்து.வெங்காயத்தையும் பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் கொத்தமல்லியோட அரைத்த விழுதை உப்புடன் சேர்த்து
நன்கு கிளறவும்
கடைசியில் காரப்பொடி,தனியாபொடி சேர்த்து கொதிக்கவைக்கவும்.
குக்கரிலிருந்து எடுத்த சாதத்தை ஒரு அகண்ட பாத்திரத்தில் பரவலாக கொட்டி
ரெடியாக உள்ள கொத்தமல்லி விழுதை கலக்கவும்.

Sunday, July 27, 2008

பிஸிபேளா ஹூளி

தேவையானவை:
சின்ன வெங்காயம் 200 gm.(சாம்பார் வெங்காயம்)

பச்சரிசி 3 கப்
துவரம்பருப்பு 1 1/2 கப்
தண்ணீர் 22 கப்
புளித்தண்ணீர் 1 கப்
நெய் 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
முந்திரிபருப்பு 10
உப்பு தேவையானது

முதலில் கீழ்கண்ட இரண்டு வகையான பொடிகளை செய்துகொள்ளவேண்டும்.

பொடி நம்பர் 1:
வற்றல் மிளகாய் 5
தனியா 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் 1 கப்
கடலைபருப்பு 2 டேபிள்ஸ்பூன்
எல்லாவற்றையும் நன்றாக வறுத்து பொடி பண்ணவும்.

பொடி நம்பர் 2:
சோம்பு,கசகசா,ஏலக்காய்,கிராம்பு,பட்டை
எல்லாவற்றிலும் சிறிதளவு எடுத்து நன்றாக வறுத்து
பொடி பண்ணவும்.

செய்முறை:

முதலில் துவரம் பருப்பை 3 கப் தண்ணீரில் குக்கரில்
நன்றாக வேகவைக்கவும்.
அரிசியை களைந்து ஒரு அகண்ட பாத்திரத்தில் ஆறு கப்
தண்ணீர் விட்டு போடவும்.
அரிசி வெந்ததும் வெந்த துவரம்பருப்பை அதில் போட்டு கிளறவும்.
மீதமுள்ள 12 கப் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக விடவும்
பின்னர் சின்ன வெங்காயத்தை வதக்கிப்போட்டு
அதனுடன் பொடிபண்ணிய இரண்டு பொடிகளையும்,உப்பும்
போட்டு கிளறவும்.புளித்தண்ணீர் விடவும்.
தண்ணீர் அதிகம் என்று நினைக்கவேண்டாம்.
தானாக சரியாகிவிடும்.
கடைசியில் வாணலியில் நெய் விட்டு கறிவேப்பிலை,
முந்திரிபருப்பு வறுத்துப்போடவும்

Saturday, July 26, 2008

வாழைக்காய் பொடிமாஸ்

தேவையானவை:

வாழைக்காய் (முற்றியது) 2
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி ஒரு பெரிய துண்டு
எலுமிச்சம் பழம் 1
உப்பு தேவைக்கேற்ப

தாளிக்க:
கடுகு,உளுத்தம்பருப்பு,சீரகம்,
பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை
எல்லாம் சிறிதளவு.

செய்முறை:

வாழைக்காயை இரண்டு துண்டுகளாக வெட்டி
குக்கரில் தண்ணீர் வைத்து மஞ்சள் தூள் சேர்த்து
இரண்டு விசில் வந்தவுடன் இறக்கவும்.

குக்கரில் இருந்து எடுத்து வாழைக்காயின் தோலை உரித்து
நன்றாக துருவிக்கொள்ளவும்.
இஞ்சியை நன்றாக கழுவி தோல் உரித்து துருவிிக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கவேண்டியவைகள
தாளித்து துருவிய வாழைக்காய் துருவலைப் போடவும்.
பின்னர் தேங்காய் துருவல்,இஞ்சிதுருவல் ,உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்
நன்றாகக் கலந்து இறக்கவும்.
கடைசியில் எலுமிச்சம்பழம் பிழியவும்.

Friday, July 25, 2008

கொள்ளு தால்

தேவையானவை:

கொள்ளு 1/2 கப்
சின்ன வெங்காயம் 5
பச்சைமிளகாய் 1
தக்காளி 1
மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன்
தனியா தூள் 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
புளித்தண்ணீர் 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
உப்பு தேவையானது

தாளிக்க:
கடுகு,சீரகம்,கறிவேப்பிலை,எண்ணைய்

செய்முறை:

கொள்ளை முதல் நாள் இரவே ஊறவைக்கவும்.
மறுநாள் குக்கரில் இரண்டு கப் தண்ணீர் வைத்து 5 அல்லது
6 விசில் வரும்வரை வேகவிடவும்.

ஒரு வாணலியை எடுத்து சிறிது எண்ணய் விட்டு
பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய்,தக்காளி
ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
பின்னர் மிளகாய் தூள்,தனியாதூள்,மஞ்சள் தூள்,
இஞ்சிபூண்டு விழுது ஆகியவற்றை சேர்க்கவும்.
எல்லாவற்றையும் நன்றாக வதக்கி புளித்தண்ணீர்,உப்பு,
வெந்த பருப்பு மூன்றையும் சேர்க்கவும்.
நன்றாக கொதி வந்ததும் கடுகு,சீரகம்,கறிவேப்பிலை
தாளித்து இறக்கவும்

Thursday, July 24, 2008

கத்திரிக்காய் கூட்டு

தேவையானவை:

கத்திரிக்காய் 1/4 கிலோ
துவரம்பருப்பு 1 கப்
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்

அரைக்க:

red chillie 7
தனியா 2 டேபிள்ஸ்பூன்
கடலைபருப்பு 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் 1 கப்
சீரகம் 1 டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு,உளுத்தம்பருப்பு,கருவேப்பிலை எல்லாம் சிறிதளவு.

செய்முறை:

கத்திரிக்காயை நன்றாக கழுவி பொடியாக நறுக்கவும்.
துவரம்பருப்பை குக்கரில் வைத்து வேகவிடவும்.
அரைக்க கூறிய பொருட்களை வாணலியில் சிறிது எண்ணைய் விட்டு
வறுத்து விழுது போல அரைக்கவும்.

துவரம்பருப்பு வெந்தவுடன் அதில் உப்பு,பொடியாக நறுக்கிய
கத்திரிக்காய் சேர்த்து வேகவிடவும்.
கத்திரிக்காய் வெந்தவுடன் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக
கொதிக்கவிடவும்.
கடைசியில் தாளிக்கவேண்டியவைகளை தாளித்து இறக்கவும்

Tuesday, July 22, 2008

தெரக்கல் (side dish

)

தேவையானவை

கத்திரிக்காய் 3
உருளைக்கிழங்கு 2
தக்காளி 2
வெங்காயம் 2

அரைக்க:
பச்சைமிளகாய் 3
காய்ந்த மிளகாய் 3
சீரகம் 1 டீஸ்பூன்
தேங்காய் 1 கப் துருவியது
முந்திரிபருப்பு 2
பொட்டுக்கடலை 3 டீஸ்பூன்
சோம்பு 1 டீஸ்பூன்

தாளிக்க:
சோம்பு 1/2 டீஸ்பூன்
மிளகு 10
பட்டை சிறிய துண்டு
எண்ணய் தேவையானது

செய்முறை:

கத்திரிக்காய்,உருளைக்கிழங்கு,வெங்காயம் மூன்றையும்
பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி வாணலியில் எண்ணைய்விட்டு
வதக்கி பேஸ்டு போல் பண்ணவும்.
அரைக்கக்கொடுத்துள்ள பொருட்களை விழுதுபோல அரைக்கவும்.

ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் எண்ணய் விட்டு
தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பின்னர் பொடியாக நறுக்கிய
வெங்காயத்தைப்போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
கத்திரிக்காய்,உருளைக்கிழங்கு போட்டு வதக்கி உப்பு சேர்க்கவும்.
தக்காளி பேஸ்டு சேர்க்கவும்.
பின்னர் அரைத்த விழுதையும் போட்டு கிளறி 4 கப் தண்ணீர் விட்டு
நன்கு கொதிக்கவைக்கவும்

இது செட்டிநாட்டில் பிரபலமான side dish..

Monday, July 21, 2008

காக்ஷ்மீரி புலவ்

தேவையானவை:

பாசுமதி அரிசி 2 கப்
வெங்காயம் 4
பாதாம் 4
முந்திரிப்பருப்பு 10
வால்நட் (walnut) 5
உலர்ந்த திராட்சை 10
சர்க்கரை 2 டீஸ்பூன்
நெய் 2 டீஸ்பூன்
சீரகம்,ஏலக்காய்,பட்டை,கிராம்பு,
பிரிஞ்சி இலை எல்லாம் சிறிதளவு
குங்குமப்பூ சிறிதளவு
அன்னாசிப்பழம் பொடியாக நறுக்கியது கால் கப்
தண்ணீர் 4 கப்

செய்முறை:

முதலில் பாசுமதி அரிசியை அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
வெங்காயத்தை பொன்னிறமாக வறுக்கவும்.
பாதாம்,முந்திரி,வால்நட் ஆகியவற்றை லேசாக வறுக்கவும்
உலர்ந்த திராட்சையை தண்ணீரில் ஊறவைக்கவும்.

ஒரு கடாயை எடுத்துக்கொண்டு நெய்யை சூடாக்கி சர்க்கரையை
போடவேண்டும்.சர்க்கரை கரைந்தவுடன் பொன்னிறமாக வதக்கிய
வெங்காயத்தைப்போட்டு வதக்கவேண்டும்
.
கடாயில் 4 கப் தண்ணீர் விட்டு சீரகம்,ஏலக்காய்,பட்டை,பிரிஞ்சி இலை
ஆகியவற்றை வறுத்து போடவேண்டும்.
தண்ணீர் கொதித்தவுடன் ஊறவைத்த அரிசி,உப்பு,திராட்சை,
குங்குமப்பூ சேர்க்கவேண்டும்.
அரிசி நன்றாக வெந்தவுடன் பாதாம்,முந்திரி,வால்நட் சேர்க்கவேண்டும்.
கடைசியில் பொடியாக நறுக்கிய அன்னசிப்பழ்த்தை போடவேண்டும்

Sunday, July 20, 2008

அவியல்

தேவையானவை:
உருளைக்கிழங்கு 2
பீன்ஸ் 10
பூசணித்துண்டு 1
முருங்கை 1
வாழைக்காய் 1 (சிறியது)
சேனைக்கிழங்கு ஒரு துண்டு
கேரட் 1 (சிறியது)
தேங்காய் எண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்
தயிர் 2 கப்
கருவேப்பிலை ஒரு கொத்து
உப்பு தேவைக்கு

அரைத்துக்கொள்ள:

தேங்காய்துருவல் 1 கப்
சீரகம் 1 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் 5

செய்முறை:

காய்கறிகளை நன்கு கழுவி சற்று மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கவும்.
குக்கரில் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகளை கொஞ்சம் தண்ணிர்,உப்பு
சேர்த்து இரண்டு விசில் வைத்து இறக்கவும்.
குக்கர் திறந்தவுடன் காய்கறிகளை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி
ஒரு அகண்ட பாத்திரத்தில் வைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சற்று கரகரப்பாக அரைத்து
காய்கறிக்கலவையில் சேர்க்கவும்.
அத்துடன் இரண்டு கப் தயிர்,தேங்காயெண்ணைய் இரண்டையும்
கருவேப்பிலை கொத்தில் ஊற்றவும்.கொதிக்கவைக்கவேண்டாம்

Saturday, July 19, 2008

மால்புவா (Malpoa) Bengali Sweet.

தேவையானவை:
பால் 5 கப்
மைதா 4 டேபிள்ஸ்பூன்
ரவை 3 டேபிள்ஸ்பூன்
சோம்பு 1/2 டீஸ்பூன்
சர்க்கரை 1 கப்
தண்ணீர் 1 கப்
நெய் தேவையான அளவு
ரோஸ் essence சிறிதளவு

செய்முறை:
பாலை திக்காக ஆகும் வரை கொதிக்கவைக்கவும்.
சோம்பை இரண்டு கைகளாலும் பிசிறி பாலில் கலக்கவும்.
ஒரு மணிநேரம் கழித்து pancake களாக வெட்டவும்.

அடுத்து தண்ணீரில் சர்க்கரை கலந்து கொதிக்கவைக்கவேண்டும்.
அதில் சிறிது பாலை விட்டு வடிகட்டு.
பின்னர் rose essence யை விடவேண்டும்.
இந்த சிரப்பை இரண்டு பகுதிகளாக பிரித்து ஒரு பகுதியை
ஒரு அகண்ட bowl ல் வைக்கவும்.

அடுத்து ஒரு தவாவை எடுத்து அதில் நெய் ஊற்றி ஒவ்வொரு
pancake களாக போட்டு இருபுறமும் பொன்னிறமாகும் வரை
வைத்திருந்து எடுக்கவும்.
எடுத்ததை bowlல் உள்ள சிரப்பில் போட்டு மீதியுள்ள
சிரப்பை மேலே ஊற்றவும்.

Wednesday, July 16, 2008

ரசவாங்கி.

கத்திரிக்காய் 200கிராம்
துவரம்பருப்பு 1 கப்
புளி எலுமிச்சை பழ அளவு
கொத்துக்கடலை(சன்னா) 1 கப்
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு

மசலா பொடி செய்ய :
தனியா 2 டேபிள் ஸ்பூன்
கடலைபருப்பு 2 டேபிள்ஸ்பூன்
சிவப்பு மிளகாய் 3
துருவிய தேங்காய் 2 டேபிள்ஸ்பூன்
கசகசா 1 டீஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
கருவேப்பிலை 1 கொத்து

தாளிக்க: (எல்லாம் சிறிதளவு)
கடுகு
உளுத்தம்பருப்பு
கடலைபருப்பு
பெருங்காயத்தூள்
துருவிய தேங்காய்
கருவேப்பிலை

செய்முறை:
கத்திரிக்காயை பொடியாக நறுக்கவும்.
துவரம்பருப்பை குக்கரில் வேகவைத்துக்கொள்ளவும்.
கொத்துக்கடலையை ஊறவைத்து வேகவைத்துக்கொள்ளவும்.
புளியை ஒரு கப் தண்ணீரில் ஊறவைக்கவும்
மசாலா பொடி சாமான்களை எண்ணைய் விட்டு வறுத்து மிக்ஸியில்
விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

முதலில் புளித்தண்ணீரை நறுக்கிய கத்திரி துண்டுகளுடன்
மஞ்சள் பொடி,உப்பு சேர்த்து கொதிக்கவைக்கவும்.
கத்திரிக்காய் வெந்தவுடன் அதனுடன் வெந்த துவரம்பருப்பு,
வெந்த கொத்துக்கடலை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து
அரைத்து வைத்துள்ள மசாலா விழுதையும் சேர்த்து
கொதிக்கவைக்கவும்.
நன்றாக கொதிததும் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு
முதலில் தாளித்து பிறகு மற்ற பொருட்களை போட்டு
தாளித்து தயாராகவுள்ள ரசவங்கியில் சேர்க்கவும்.

Tuesday, July 15, 2008

இளநீர் பாயசம்

தேவையானவை:

condensed milk 2 கப்
இளநீர் 1 கப்
துருவிய தேங்காய் 1/2 கப்
வெல்லம் 1 கப்
ஏலக்காய் பவுடர் 1 டீஸ்பூன்
குங்குமப்பூ 1 டீஸ்பூன்
sliced pista சிறிதளவு

செய்முறை:
வெல்லத்தை ஒரு கப் தண்ணீரில் போட்டு கரையவிட்டு
வடிகட்டவும்.

ஒரு bowl யை எடுத்துக்கொண்டு அதில் condensed milk,
இளநீர்,துருவிய தேங்காய் ஆகியவற்றை போடவும்.
வெல்லக்கரைசலை விடவும்.நன்றாக கலக்கவும்.
அடுப்பில் வைத்து லேசாக கொதிக்கவைக்கவும்
.ஏலக்காய் பவுடர் குங்குமப்பூ போடவும்.
இறக்கி வைத்த பின் sliced pista வை தூவவும்.
Fridge ல் வைத்து கொடுக்கவும்.

Monday, July 14, 2008

ரங்கூன் வெஜிடபிள் கறி

தேவையானவை:

உருளைக்கிழங்கு 2
காரட் 2
பட்டாணி 1/2 கப்
தேங்காய்பால் 1 கப்
வெங்காயம் 1

மசாலா சாமான்:

ஏலக்காய் 2
கிராம்பு 2
பட்டை சிறிதளவு
கசகசா 1 டீஸ்பூன்
சோம்பு 1 டீஸ்பூன்

செய்முறை:
உருளைக்கிழங்கு,காரட் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிது எண்ணைய் விட்டு
மேலே குறிப்பிட்ட மசாலா சாமான்களை வறுக்கவும்.
பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப்போட்டு பொன்னிறமாக
வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் உருளை,காரட்,பட்டாணி ஆகியவற்றை போட்டு
வதக்கவும்.
ஒரு கப் தேங்காய் பாலை அதனுடன் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
கடைசியில் உப்பு போடவும்.

இது சப்பாத்தி,நாண் ஆகியவற்றிற்கு side dish ஆக பயன்படுத்தலாம்

Sunday, July 13, 2008

மைசூர் மெதுபக்கோடா

தேவையானவை:

அரிசிமாவு 1 கப்
கடலைமாவு 1 கப்
நெய் 6 டீஸ்பூன்
சமையல்சோடா 2 சிட்டிகை
முந்திரி பருப்பு 8
பச்சை மிளகாய் 4
இஞ்சி சிறிதளவு

செய்முறை:

நெய்யை சமையல் சோடாவுடன் சேர்த்து விரல் நுனிகளால் நுரைக்க தேய்க்கவும்.

அரிசிமாவு,கடலைமாவுடன் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்,இஞ்சி,வறுத்த
முந்திரிபருப்பு,உப்பு,கருவேப்பிலை ஆகியவற்றை கலக்கவும்.

பின்னர் நெய்,சமயல்சோடா கலவையில் கலக்கவும்.
சிறிது தண்ணீர் விட்டு சப்பாத்திமாவு போல பிசைந்து
சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணையில் பொரிக்கவும்.

தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.

Saturday, July 12, 2008

மிளகூட்டான்

தேவையானவை:

முருங்கைக்காய் 2
துவரம்பருப்பு 1 கப்
தேங்காய் துருவல் 1 கப்
உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
வத்தல் மிளகாய் 2
வெந்தயம் 1 டீஸ்பூன்

செய்முறை:

துவரம்பருப்பை குக்கரில் வேகவைக்கவும்.
வாணலியில் எண்ணைவிட்டு முருங்கைக்காயை வதக்கவும்.

தேங்காய் துருவல்,சீரகம் இரண்டையும் பச்சையாகவும்
உளுத்தம்பருப்பு,வத்தல் மிளகாய்,வெந்தயம் ஆகியவற்றை வறுத்தும்
விழுதாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

வாணலியில் உள்ள வெந்த முருங்கைக்காயுடன் வேகவைத்த பருப்பையும்
அரைத்த விழுதையும் கலந்து உப்பு போட்டு கொதிக்கவைக்கவேண்டும்.

நன்றாக கொதித்தவுடன் தேங்காயெண்ணையில் தாளிக்கவேண்டும்.

மிளகூட்டானை சேனைக்கிழங்கு,பூசனி,முளைக்கீரை ஆகியவற்றிலும்
பண்ணலாம்.

Thursday, July 3, 2008

பீட்ரூட்வடை

தேவையானவை:

1.கடலைப்பருப்பு 1 கப்
2.பீட்ரூட் துருவியது 1 கப்
3.பச்சைமிளகாய் 4
4.இஞ்சி,பூண்டு விழுது ஒரு டேபிள்ஸ்பூன்
5.மிளகாய் தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
6.சோம்பு ஒரு டேபிள்ஸ்பூன்
7.பட்டை சிறிதளவு

செய்முறை:

கடலைபருப்பை அரை மணிேந்ர்ம் ஊற்வைத்து உப்பு சேர்த்து
கரகர வென்று அரைத்துக்கொள்ளவேண்டும்.
அத்துடன் துருவிய பீட்ரூட்,பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்,
இஞ்சிபூண்டு விழுது,மிளகாய்தூள்,சோம்பு,பட்டை (லேசாக வறுத்து
விழுதாக அரைத்துக்கொள்ளவேண்டும்) ஆகியவற்றை
கலக்கவேண்டும்.
வாணலியில் எண்ணைய் வைத்து கலந்த மாவை
வடை போல தட்டி எண்ணையில் போட்டு இரண்டுபக்கமும்
சிவந்தவுடன் எடுக்கவேண்டும்.

வெஜிடபிள் துவையல்

தேவையானவை:

1.குடமிளகாய் 1
2.காரட் 1
3.வெங்காயம் 1
4.மிளகாய் வற்றல் 4
5.உளுத்தம்பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
6.பெருங்காயம் 1 டீஸ்பூன்

செய்முறை:

வாணலியில் எண்ணைய் விட்டு குடமிளகாய்,காரட்,வெங்காயம்
ஆகியவற்றை தனித்தனியாக பொன்னிறமாக வதக்கவும்.
தனியே எடுத்து வைக்கவும்.
பின்னர் மிளகாய்வற்றல்,உ.பருப்பு,பெருங்காயம் ஆகியவற்றை எண்ணய்விட்டு
வறுக்கவும்.
வறுத்ததுடன் உப்பு சேர்த்து வத்க்கிய காய்கறிகளையும் சேர்த்து
மிக்சியில் கரகர வென்று அரைக்கவும்

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...