Thursday, July 31, 2008

சன்னா மசாலா

தேவையானவை:
சன்னா (கொண்டக்கடலை) 1 கப்
உருளைக்கிழங்கு 2
தக்காளி 2
வெங்காயம் 2
வெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் பொடி,தனியாபொடி,காரப்பொடி
அல்லது சாம்பார் பொடி,இஞ்சி பூண்டு விழுது,
சன்னா மசாலா பொடி எல்லாம் அரை டீஸ்பூன்

அரைக்க:
தேங்காய் 1/2 கப்
எள்ளு 1 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை 1 டீஸ்பூன்
கசகசா 1 டீஸ்பூன்
முந்திரிபருப்பு 4

செய்முறை:

சன்னாவை நான்கு மணிநேரம் ஊறவைத்து குக்கரில்
வேகவைக்கவேண்டும்.
உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கவேண்டும்.
தக்காளியை வென்னீரில் போட்டு தோலுரித்து பொடியாக நறுக்கவேண்டும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கவேண்டும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணையில் லேசாக
வறுத்து விழுதாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

வாணலியில் எண்ணைய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை
தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவேண்டும்.
பின்னர் வேகவைத்த சன்னா,உருளைக்கிழங்கு,தக்காளி ,தேவையான உப்பு,
தண்ணீர் சிறிதளவு விட்டு கிளற வேண்டும்.

பின்னர் அரைத்த விழுதையும் சேர்த்து மேலே குறிப்பிட்டுள்ள எல்லா
பொடிகளையும் கலந்து நன்கு கொதிக்கவைக்கவேண்டும்.
கடைசியில் வெண்ணைய் சேர்த்து இறக்கவேண்டும்.
சப்பாத்தி,பூரிக்கு ஏற்ற sidedish

No comments:

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...