Monday, June 30, 2014

அவகோடா ((avacado) சப்பாத்தி



தேவையானவை:                      
--------                                                   அவகோடா     

கோதுமை மாவு 2 கப்
அவகோடா 2
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
மிளகாய்தூள் 1 தேக்கரண்டி
எண்ணெய் 1 மேசைக்கரண்டி
உப்பு தேவையானது
செய்முறை:



அவகோடாவை தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் கோதுமை மாவு,மசித்த அவகோடா,உப்பு,மஞ்சள்தூள்,மிளகாய் தூள்,எண்ணெய் எல்லாவற்றையும் கலந்து பிசையவேண்டும்.தண்ணீர் விடவேண்டாம்.தேவையென்றால் தண்ணீர் தெளித்துக்கொள்ளவும்.பிசைந்த மாவை அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
பின்னர் உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியாக தேய்த்து அடுப்பில் போட்டு எடுக்கவும்.
எண்ணெய் ஊற்ற தேவையில்லை.
அவகோடா சப்பாத்தி மிகவும் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.

அவகோடா LDL (கெட்ட கொழுப்பு ) ஐ குறைத்து HDL (நல்ல கொழுப்பு ) ஐ அதிகரிக்கச் செய்யும்.

Tuesday, June 24, 2014

பார்லி கிச்சடி



தேவையானவை:

பார்லி 1 கப்
பயத்தம்பருப்பு 1/2 கப்
மஞ்சள்தூள் 2/3 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
----------
வெங்காயம் 2
தக்காளி 1
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லிதழை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-----------------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
சீரகம் 1 மேசைக்கரண்டி
---------
செய்முறை:


பார்லியை வெறும் வாணலியில் வறுத்து ரவைபோல உடைத்துக்கொள்ளவும்.
வெங்காயம் தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பச்சைமிளகாயை குறுக்கே கீறிக்கொள்ளவும்.
------
குக்கருக்குள் வைக்கும் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பார்லி ரவை,பயத்தம்பருப்பு,மூன்று கப் தண்ணீர்,மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள்,தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து வைத்து நான்கு விசில் வந்தவுடன்
அடுப்பை அணைக்கவும்.
ஒரு கடாயை  அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் சேர்த்து தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவும்.
பிறகு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி அதனுடன் தக்காளியையும்,பச்சைமிளகாயையும் சேர்த்து வதக்கவேண்டும்.
குக்கரில் இருந்த பார்லி,பயத்தம்பருப்பு கலவையை இதனுடன் சேர்த்து நன்கு கிளறவேண்டும்.
இறக்குமுன் கொத்தமல்லித்தழையை தூவவும்.
இதனுடன் பட்டாணி உருளைக்கிழங்கு (தோல் சீவி பொடியாக நறுக்கியது) சேர்க்கலாம்.

Monday, June 16, 2014

தயிர் வடை



தேவையானவை:

உளுத்தம்பருப்பு 1 கப்
தயிர் 2 கப்
சர்க்கரை 1 தேக்கரண்டி
கேரட் துருவல் 1 கப்
கொத்தமல்லித்தழை சிறிதளவு
கடுக் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
---------
செய்முறை:


உளுத்தம்பருப்பை இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
பின்பு வடிகட்டி நன்றாக வெண்ணெய் போல அரைத்து எடுக்கவேண்டும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் புளிப்பில்லாத தயிரில் கடுகை தாளித்துக்கொட்டி
உப்பு போட்டு ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து நன்கு கரைத்து வைக்கவேண்டும்.

அடுப்பில் எண்ணெய் வைத்து அரைத்த மாவை வடைகளாக தட்டவேண்டும்.சூடாக இருக்கும்போதே வடைகளை
தயிரில் போடவேண்டும். அதன் மேல் கேரட் துருவலையும்,கொத்தமல்லித்தழையையும் அலங்கரிக்கவேண்டும்.
காராபூந்தியையும் மேலே தூவி அலங்கரிக்கலாம்.

 (மோர்க்குழம்பிலோ அல்லது ரசத்திலோ கூட இந்த வடையை போடலாம்.)

Tuesday, June 10, 2014

பிரௌன் ரைஸ் பிஸிபேளாபாத்

தேவையானவை:   
பிரௌன் ரைஸ் 1 கப்

துவரம்பருப்பு 1/2 கப்

மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்

தண்ணீர் 7 கப்

புளி ஒரு எலுமிச்சை அளவு

நெய் 1 டேபிள்ஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது

------

வெங்காயம் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

பீன்ஸ் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

காரட் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

பட்டாணி 1/2 கப்

-----

பொடி பண்ண:

கடலைபருப்பு 1 டேபிள்ஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்

தனியா 2 டேபிள்ஸ்பூன்

வெந்தயம் 1/2 டீஸ்பூன்

மிளகு 10

வற்றல் மிளகாய் 5

பெருங்காயம் 1 துண்டு

கிராம்பு 2

பட்டை 1 துண்டு

துருவிய தேங்காய் 1/2 கப்

வறுத்து பொடி பண்ணியது:



-------

தாளிக்க:

கறிவேப்பிலை சிறிதளவு

மிளகாய் வற்றல் 2

முந்திரிபருப்பு 10

நிலக்கடலை 10 (உடைத்தது)

-----

செய்முறை:


பிரௌன் ரைஸை ஒரு கப்புக்கு 2 1/2 கப் தண்ணீர் வீதம் வைத்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

ஒரு குக்கரை எடுத்துக்கொண்டு அதில் அடி பாத்திரத்தில் பிரௌன் ரைஸையும் மேல் தட்டில் துவரம்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து

ஒரு கப் தண்ணீருடன் வைத்து 6 விசில் விட்டு குக்கரை அணைக்கவேண்டும்.

அரைக்க கொடுத்துள்ளவைகளை எண்ணையில் வறுத்து பொடி பண்ணிக்கொள்ளவும்.

வெங்காயத்தை முதலில் பொன்னிறமாக வதக்கி அதனுடன் மற்ற காய்கறிகளை சிறிது உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.

-----

வேகவைத்த சாதம்,பருப்பு இரண்டையும் குக்கர் பாத்திரத்தில் மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.

அதில் வதக்கின காய்கறிகள்,அரைத்து வைத்துள்ள பொடி,தேவையான உப்பு சேர்க்கவும்.

சாதம்,பருப்பு,காய்கறிகள்,பொடி எல்லாம் நன்றாக ஒன்று சேர்ந்ததும் புளித்தண்ணீர் சேர்த்து மீதமுள்ள தண்ணீர் (1 1/2 கப்)

சேர்த்து அடுப்பை ஸ்லிம்மில் வைத்து நன்றாக கொதிக்கவிடவும்..

முந்திரிபருப்பு,நிலக்கடலை,கறிவேப்பிலை,வற்றல் மிளகாய் எல்லாவற்றையும் நெய்யில் வறுத்து சேர்க்கவும்.

Thursday, June 5, 2014

அரைப்புளி குழம்பு


தேவையானவை:  
சேனைக்கிழங்கு  1/4 கிலோ
கொண்டக்கடலை 1 கப் (channa)
புளி ஒரு எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி 3 மேசைக்கரண்டி
தேங்காய் துண்டுகள் 1/4 கப்
அரிசிமாவு 1 டீஸ்பூன்
எண்ணைய், உப்பு தேவையானது
------
தாளிக்க:
நல்லெண்ணை 2 டேபிள்ஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு
மிளகாய் வற்றல் 3
கறிவேப்பிலை 1 கொத்து
-----
செய்முறை:

 கொண்டக்கடலையை  நான்கு மணிநேரம் ஊறவைத்து  பின்னர்
 குக்கரில் வைத்து (3விசில்) வேகவைக்கவேண்டும்.
சேனைக்கிழங்கை தோல் சீவிவிட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
அடுப்பில் கனமான பாத்திரத்தை வைத்து அதில் ஒரு குழிக்கரண்டி நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயம்,மிளகாய் வற்றல்,
 இவைகளுடன் கொண்டக்கடலையையும் போட்டு சிவக்க வறுக்கவும்.பின்னர் தேங்காய் துண்டங்களையும் போட்டு சற்று வறுத்து கறிவேப்பிலையை சேர்த்து
வெடிக்கவிடவும்.வெடித்ததும் சாம்பார் பொடி போட்டு வறுக்கவும்.
பின்னர் புளியை கெட்டியாக கரைத்து விட்டு உப்பு சேர்த்து நறுக்கிய சேனைக்கிழங்கு துண்டுகளை சேர்க்கவும்.
நன்றாக கொதித்து வற்றியவுடன் அரிசிமாவை சிறிது தண்ணீரில் கரைத்து விட்டு எல்லாம் சேர்ந்து கொதித்தபின் இறக்கவும்.
வேண்டுமென்றால் அப்பளத்தை சிறு துண்டுகளாக்கி பொரித்து போடலாம்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...