Tuesday, July 30, 2013

மணி கொழுக்கட்டை



 


தேவையானவை:

அரிசி மாவு 1கப்
உப்பு தேவையானது
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
---
அரைக்க:

துவரம்பருப்பு 1/4 கப்
கடலைப்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
பயத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை 1 டேபிள்ஸ்பூன்
சிவப்பு மிளகாய் 2
---
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை:


ஒரு அகண்ட பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் உப்பு,பெருங்காயத்தூள் சேர்த்து அரிசி மாவை பரவலாக தூவி கட்டிதட்டாமல் கிளறவும்.
கிளறிய மாவு ஆறியவுடன் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தனியே எடுத்து வைக்கவும்.

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரை மணிநேரம் ஊறவைத்து வடிகட்டி கரகரப்பாக அரைக்கவும்.அரைத்த விழுதை இட்லி தட்டில் வைத்து 15 நிமிடம் ஆவியில் வேகவைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கவேண்டியவைகளை தாளித்து ஆவியில் வைத்து எடுத்த பருப்பு கலவையை சேர்த்து நன்கு கிளறவும்.உதிரியாக வரும்.பின்னர் தயாராக உள்ள மணி கொழுக்கட்டைகளை சேர்த்து நன்கு பிரட்டி எடுத்து வைக்கவும்.

பள்ளியிலிருந்து வரும் சிறுவர் சிறுமிகளுக்கு ஒரு அருமையான மாலை நேர சிற்றுண்டி இது.

Wednesday, July 24, 2013

புளி அவல்



தேவையானவை:
கெட்டி அவல் 1 கப்
புளி ஒரு எலுமிச்சை அளவு
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் தேவையானது
உப்பு தேவையானது
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 2
வேர்க்கடலை 10
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:

அவலை நன்றாக தண்ணீரில் அலச வேண்டும்.
புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி அடுப்பில் வைத்து லேசாக சூடு பண்ணவேண்டும்.
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அவல்,புளித்தண்ணீர்,மஞ்சள்தூள்,தேவையான உப்பு சேர்த்து பிசறி மூடி வைக்கவேண்டும்.
பத்து நிமிடம் அப்படியே ஊறவைக்கவேண்டும்.
அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெயில் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து ஊறவைத்த அவலை சேர்த்து
சிறிது நேரம் அடுப்பை slim ல் வைத்து கிளற சுவையான புளி அவல் ரெடி.

Friday, July 19, 2013

வரகு சர்க்கரைப்பொங்கல்



தேவையானவை:

வரகரிசி 1 கப்
தண்ணீர் 3 கப்
பொடித்த வெல்லம் 1 கப்
நெய்  1/4 கப்
முந்திரிபருப்பு 10
 ஜாதிக்காய்1 துண்டு
குங்குமப்பூ 1/4 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
பால் 1 மேசைக்கரண்டி
--------
செய்முறை:


ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு  வரகரிசியை சிறிது நெய் சேர்த்து வறுக்கவும்.

வெல்லத்தை அரை கப் தண்ணீரில் அடுப்பில் வைத்து கரையவிட்டு வடிகட்டவும்.

ஒரு அகண்ட கனமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் 3 கப் தண்ணீர் விட்டு,தண்ணீர் நன்கு கொதித்தவுடன்    வறுத்த வரகசரிசியைப்போட்டு அடிபிடிக்காமல் நன்கு கிளறவும்.அரிசி நன்றாக  வெந்தவுடன் வடிகட்டிய வெல்லத்தைப்போட்டு medium flame ல் ஒரு பத்து நிமிடம் வைத்து கிளறவும். (வரகரிசி வேகுவத்ற்கு பத்து நிமிடம் ஆகும்).

ஒரு கிண்ணத்தில் பாலை எடுத்துக்கொண்டு அதில் ,குங்குமப்பூ,ஏலக்காய் இவற்றைப்போடவும்.ஜாதிக்காய் துண்டை நெய்யில் வறுத்து பொடிசெய்து அதையும் பாலில் சேர்த்து கரைத்து பொங்கலில் சேர்க்கவும். முந்திரிபருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.மீதியுள்ள நெய்யை உருக்கி பொங்கலில் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்

Monday, July 15, 2013

நெல்லிக்காய் (Gooseberry ) சாதம்



தேவையானவை:
நெல்லிக்காய் 5
உதிரியாக வடித்த சாதம் 1 கப்
உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
நல்லெண்ணய் 1 மேசைக்கரண்டி
உப்பு தேவையானது
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:


நெல்லிக்காயை வேகவைத்து (குக்கரில் சிறிது தண்ணீருடன் 2 விசில் வரும் வரை வைத்து எடுக்கவும்) ஆறினவுடன் உள்ளே இருக்கும் கொட்டையை எடுத்துவிட்டு மிக்சியில் ஒரு சுற்று சுற்று சுற்றவும்.(முடிந்தால் துருவிக்கொள்ளலாம்)
உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
-----
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் உதிரியாக வடித்த சாதத்தை மஞ்சள் தூள்,நல்லெண்ணய் சேர்த்து பிசிறவும்.
ஐந்து நிமிடம் ஊறவைக்கவேண்டும்.
அதில் துருவிய நெல்லிக்காய்,உளுத்தம்பருப்பு பொடி தேவையான உப்பு சேர்த்து பிசிறவும்.
கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்க சுவையான நெல்லிக்காய் சாதம் ரெடி.
நெல்லிக்காயில் வைட்டமின்' C ' அதிகம் உள்ளது.

Thursday, July 11, 2013

கம்பு அடை



தேவையானவை:                                              கம்பு

கம்பு 1 கப்
துவரம்பருப்பு 1/2 கப்
கடலைப்பருப்பு 1/4 கப்
பயத்தம்பருப்பு 1/4 கப்
மிளகாய் வற்றல் 2
பச்சைமிளகாய் 2
பெருங்காயம் ஒரு துண்டு
வெங்காயம் 1
புதினா ஒரு கொத்து
கொத்தமல்லி சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
------
செய்முறை:

கம்பை தண்ணீரில் நான்கு மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.
மற்ற பருப்புகளை இரண்டு மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.

ஊறவைத்த கம்பு,பருப்புகளை வடிகட்டி அதனுடன் பெருங்காயம்,மிளகாய் வற்றல்,பச்சைமிளகாய்,பெருங்காயம்,தேவையான உப்பு சேர்த்து நைசாக அரைக்க வேண்டும்.
அரைத்த மாவில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவேண்டும்.
புதினாவையும்,கொத்தமல்லியையும் பொடியாக நறுக்கி சேர்க்கவேண்டும்.
எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கவேண்டும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சிறிது எண்ணெய் சேர்த்து ஒரு கரண்டியில் அடை மாவை ஊற்றி சற்று கெட்டியாக வார்க்கவேண்டும்.அடை ஒரே பதத்தில் வேகுவதற்காக நடுவில் ஒரு துளையிட்டு அதில் சிறிது எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வந்ததும் திருப்பி போட்டு சற்று நேரம் கழித்து எடுக்கவும்.

இந்த கம்பு அடையை  இட்லி மிளகாய் பொடியுடன் சாப்பிடலாம்.
வேர்க்கடலை,பொட்டுக்கடலை,பச்சைமிளகாய் சேர்த்த சட்னியுடனும் சாப்பிடலாம்.

Thursday, July 4, 2013

டால் மாக்கனி



தேவையானவை:
கறுப்பு உளுந்து 1 கப்
வெங்காயம் 1
தக்காளி 2
----
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
----
காரப்பொடி 1 டீஸ்பூன்
தனியாத்தூள் 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் 1/2 டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் 1 டீஸ்பூன்
வெங்காய தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
---
வெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
பால் 1/2 கப்
கொத்தமல்லித்தழை சிறிதளவு
--
செய்முறை:



கருப்பு உளுந்தை குக்கரில் வைத்து வேகவைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
--
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணைய் விட்டு முதலில் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
 தக்காளியை சேர்த்து வதக்கவும்.
குக்கரில் இருந்து கறுப்பு உளுந்தை எடுத்து உப்பு,மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து வெங்காயம் தக்காளியுடன் கலக்கவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
பின்னர் மேலே குறிப்பிட்ட காரப்பொடி,தனியாதூள்.சீரகதூள்,ஆம்சூர் பவுடர்,வெங்காய தூள் எல்லாவற்றையும் சேர்த்து கொதிக்க விடவும்.
கடைசியில் பாலை விட்டு இறக்கவும்.
இறக்கிய பின் வெண்ணைய் போடவும்.
கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்.
இது சப்பாத்தி,பூரி,நான்,புல்கா ரொட்டி ஆகியவற்றிற்கு ஏற்ற side dish.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...