தேவையானவை:
கெட்டி அவல் 1 கப்
புளி ஒரு எலுமிச்சை அளவு
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் தேவையானது
உப்பு தேவையானது
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 2
வேர்க்கடலை 10
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:
அவலை நன்றாக தண்ணீரில் அலச வேண்டும்.
புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி அடுப்பில் வைத்து லேசாக சூடு பண்ணவேண்டும்.
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அவல்,புளித்தண்ணீர்,மஞ்சள்தூள்,தேவையான உப்பு சேர்த்து பிசறி மூடி வைக்கவேண்டும்.
பத்து நிமிடம் அப்படியே ஊறவைக்கவேண்டும்.
அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெயில் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து ஊறவைத்த அவலை சேர்த்து
சிறிது நேரம் அடுப்பை slim ல் வைத்து கிளற சுவையான புளி அவல் ரெடி.
2 comments:
அவலில் புதிய சுவையை சுவைக்க ஆவல்... செய்முறை குறிப்பிற்கு நன்றி...
நன்றி. திண்டுக்கல் தனபாலன்
Post a Comment