புழுங்கலரிசி 2 கப்
தேங்காய் துருவல் 1 கப்
நெய் 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணைய் 1 டீஸ்பூன்
பால் 1/4 கப்
உப்பு தேவையானது
செய்முறை:
புழுங்கலரிசியை மூன்று மணிநேரம் ஊறவைத்து வடிகட்டி ஒரு துணியில் பரவலாக பரப்பி உலர்த்த வேண்டும்.நன்றாக காய்ந்தவுடன் மிக்சியில் மாவாக அரைத்து எடுத்து வைக்கவேண்டும்.
(ready made புட்டு மாவு dept.store கிடைக்கும்.)
ஒரு அகண்ட பாத்திரத்தில் புட்டு மாவை போட்டு உப்பு,தேங்காய் எண்ணைய்,நெய்,பால் சேர்த்து பிசிறவேண்டும்.தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து"பொல பொல" என்று வரும்வரை
பிசிற வேண்டும்.
புட்டு பாத்திரம்

புட்டு பாத்திரத்தில் முதலில் தேங்காய் துருவல் சேர்த்து அதன் மேல் புட்டு மாவு பின் தேங்காய் துருவல் அதன் மேல் புட்டு மாவு என்று மாறி மாறிபோடவேண்டும்.அழுத்தக்கூடாது.
புட்டு பாத்திரத்தில் உள்ள ஓட்டையில் குச்சி வைத்து குத்தவேண்டும்.அப்பொழுதுதான் மாவு நன்றாக வேகும்.
குக்கரின் மேல் புட்டு பாத்திரம்

குழாய் புட்டு

குக்கரில் தண்ணீர் வைத்து மூடி போட்டு புட்டு பாத்திரத்தை குக்கரின் மூடியின் மேல் weight போடும் இடத்தில் வைத்து அடுப்பை on பண்ணி 10 நிமிடம் கழித்து குழாயின் மேல் ஆவி நன்றாக வரும்.அப்பொழுது அடுப்பை அணைக்கவேண்டும.இறக்கிய பின் அடிபக்கம் குத்தி எடுக்கவேண்டும்.
வாழைப்பழம் அல்லது கடலலைக்குருமா ஏற்ற sidedish.
14 comments:
Great recipe Mam...I'm drooling here..I don't have that kuzha puttu maker..must get one soon..
Thanks for your quick comment Nithu.
ரொம்ப நல்ல இருக்கு பா
குழாய் புட்டு சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு. அந்த பாத்திரம் இல்ல
ஆனால் வாரா வாரம் புட்டு தான் இட்லி தட்டில் ஸ்டீம் கொடுத்து செய்வது.
சூப்பர்ர்ர்,புட்டை ஞாபகபடுத்திட்டீங்க....
குழாய்ப்புட்டு அழகாக இருக்கிறது, காஞ்சனா!!
புட்டு நல்லாருக்கு.. சுவையாக இருக்கும்.
வருகைக்கு நன்றி Jaleela.
Thanks மனோ .
Thanks Starjan.
சுப்பரான அயிட்டம். எங்க ஊர் ப்ரேக்பாஸ்ட் அயிட்டம் செய்து அசத்திட்டிங்க. அடுத்து புட்டுக்கு தொட்டு சாப்பிட பயரு கற போடுங்க.நானும் அடிக்கடி செய்வேன்.இதே குழாயில் தான் நானும் புட்டு செய்வேன்.இதற்க்கு நாங்க பயறு கறி,பப்படம், பழம் சேர்த்து சாப்பிடுவோம். நல்ல் ரெசிப்பி.
I have never tried kuzhai puttu,only hav had the ordinary one,looks very special!
Thanks Viji.
புழுங்கலரிசி - என்றால் என்ன //
Boiled rice.(idli rice)
வருகைக்கு நன்றி.வி.ஜெ.சந்திரன் .
Thanks Rajeswari.
Post a Comment