தேவையானவை:
தினை 3 கப்
உளுத்தம்பருப்பு 3/4 கப்
அவல் 1/4 கப்
வெந்தயம் 1 தேக்கரண்டி
----
செய்முறை:
தினையை தனியாகவும்.உளுத்தம்பருப்பு வெந்தயம் இரண்டையும் சேர்த்தும் இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
அவலை அரை மணிநேரம் ஊறவைத்தால் போதும்.
உளுத்தம்பருப்பு,வெந்தயம்,அவல் மூன்றையும் சேர்த்து நன்றாக நைசாக அரைக்கவேண்டும்.
தினையை தனியாக அரைத்து அரைத்து வைத்துள்ள உளுத்தம்பருப்பு,வெந்தயத்துடன் தேவையான உப்பு சேர்த்து கலக்கவேண்டும்.
ஆறு மணிநேரம் கழித்து மாவு புளித்துவிடும்.பின்னர் இட்லியாக வார்க்கலாம்
தினையில் புரோட்டீன்,நார்சத்து உள்ளது.
5 comments:
திணை உடலுக்கு நல்லது...
அதன் சமையல் குறிப்பும் படமும் அருமை.. அழகு...
இங்க குவைத்ல திணை கிடைக்குதான்னு தெரியல.. கிடைத்தால் கண்டிப்பா செய்து பார்க்கிறேன். அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
Manjubashini Sampathkumar.
திணை இட்லி குறிப்பு அருமை. திணை படத்தையும் சேர்த்திருக்கலாமே...:)
Refer http://annaimira.blogspot.com/2013/06/blog-post_13.html
அரிசிக்குப் பதில் திணை சாப்பிட்டால் நல்லது என்று சொல்கிறார்கள். திணை இட்லிக்கான செய்முறைக் குறிப்புகள் தந்திருக்கிறீர்கள். செய்து சாப்பிட்டுப் பார்த்துவிட வேண்டியதுதான்.
Post a Comment