தேவையானவை:
உருளைக்கிழங்கு 4
மஞ்சள்தூள் 1தேக்கரண்டி
துருவிய இஞ்சி 1 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் 1
உப்பு,எண்ணெய் தேவையானது
-----
பொடிப்பதற்கு தேவையானது:
மிளகாய் வற்றல் 4
உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் 1 துண்டு
-------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கடலைபருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
--------
செய்முறை:
உருளைக்கிழங்கு ஒவ்வொன்றையும் நான்காக வெட்டி குக்கரில் வைத்து (மூன்று விசில்) வேகவைத்துக்கொள்ளவேண்டும்.
குக்கரில் இருந்து எடுத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவேண்டும்.
பொடிப்பதற்கு கொடுத்துள்ள மிளகாய் வற்றல்,உளுத்தம்பருப்பு,பெருங்காயம் மூன்றையும் சிறிது எண்ணெயில் வறுத்து பொடி செய்து கொள்ளவேண்டும்.
அடுப்பில் வாணலியை வைத்து தாளிக்க வேண்டியவைகளை எண்ணெயில் தாளித்து மசித்த உருளைக்கிழங்கை சிறிது மஞ்சள்தூள் உப்புடன் சேர்த்து பிரட்ட வேண்டும்.
துருவிய இஞ்சி,பொடித்து வைத்துள்ள பொடி இரண்டையும் சேர்த்து எல்லாவற்றையும் நன்கு கலந்தபின் அடுப்பை அணைக்கவேண்டும்.
கடைசியில் எலுமிச்சம்பழத்தை பிழியவேண்டும்.
உருளைக்கிழங்கு பொடிமாஸை சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்..பொரியலாகவும் பயன்படுத்தலாம்.
8 comments:
பார்த்தவுடன் சாப்பிட வேண்டும் போல இருக்கிறது, செய்துவிட வேண்டியதுதான். நன்றி
இந்த முறையில் இதுவரை செய்ததில்லை. செய்துபார்க்கும் ஆவலைத்தூண்டுகிறது செய்முறையும் படமும். நன்றி காஞ்சனா.
//ராது said...
பார்த்தவுடன் சாப்பிட வேண்டும் போல இருக்கிறது, செய்துவிட வேண்டியதுதான். நன்றி//
.வருகைக்கு நன்றி ராது.
// கீதமஞ்சரி said...
இந்த முறையில் இதுவரை செய்ததில்லை. செய்துபார்க்கும் ஆவலைத்தூண்டுகிறது செய்முறையும் படமும். நன்றி காஞ்சனா.//
வருகைக்கு நன்றி கீதமஞ்சரி
சூப்பர்.நான் பொடிமாஸில் உளுத்தம் பருப்பிற்கு பதில் கடலைப்பருப்பு வறுத்துப் பொடித்து போடுவதுண்டு.எனக்கு மிகவும் பிடிக்கும்,இட்லிப் பொடி போட்டாலும் சூப்பராக இருக்கும்.
எங்கள் வீட்டில் தேங்காய்ப்பூவும் கொஞ்சம் தூவி இறக்குவார்கள் !
//
Asiya Omar said...
சூப்பர்.நான் பொடிமாஸில் உளுத்தம் பருப்பிற்கு பதில் கடலைப்பருப்பு வறுத்துப் பொடித்து போடுவதுண்டு.எனக்கு மிகவும் பிடிக்கும்,இட்லிப் பொடி போட்டாலும் சூப்பராக இருக்கும்.//
கடலைப் பருப்பு பொடி பண்ணி சேர்த்தாலும் சுவையாக இருக்கும்..வருகைக்கு நன்றி Asia Omar.
// ஹேமா said...
எங்கள் வீட்டில் தேங்காய்ப்பூவும் கொஞ்சம் தூவி இறக்குவார்கள//
தேங்காய் பூ சேர்த்தாலும் கூடுதல் சுவை தான்.வருகைக்கு நன்றி ஹேமா.
Post a Comment