Sunday, January 31, 2010

பயறு இட்லி உப்புமா


தேவையானவை:

பச்சபயறு 1 கப்
புழுங்கலரிசி 1/4 கப்
உளுத்தம்பருப்பு 1/4 கப்
பச்சைமிளகாய் 3
------
பச்சபட்டாணி 1/4 கப் (உரித்தது)
உருளைக்கிழங்கு 1
வெங்காயம் 1
காரட் 2
இஞ்சி 1 துண்டு
பூண்டு 4 பல்
---




தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கடலைபருப்பு 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு


செய்முறை:

முதலில் செய்து கொள்ளவேண்டியது:

1.பச்சப்பயறு,புழுங்கலரிசி,உளுத்தம்பருப்பு மூன்றையும் மூன்றுமணினேரம் ஊறவைத்து ஒரு பச்சமிளகாய் சிறிது உப்பு
சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த மாவை இட்லிதட்டில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
ஆறினவுடன் சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணவும்.
2.உருளைக்கிழங்கை தோலை நீக்கிவிட்டு grater ல் துருவிக்கொள்ளவும்.
3.வெங்காயம், காரட் இரண்டையும் துருவிக்கொள்ளவும்,
4.மீதமுள்ள இரண்டு பச்சமிளகாய்,இஞ்சி,பூண்டு மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
---

வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பயறு இட்லி துண்டுகளை வதக்கவும்.
பொன்னிறமாக வந்ததும் தனியே எடுத்து வைக்கவும்.
மற்றொரு வாணலியில் எண்ணைய் விட்டு துருவிய வெங்காயம்,பச்சைமிளகாய்,இஞ்சி,பூண்டு எல்லாவற்றையும்
நன்கு வதக்கவேண்டும்.வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் பச்சபட்டாணி,துருவிய உருளைக்கிழங்கு,காரட்
மூன்றுடன் சிறிது உப்பும் சேர்த்து வதக்கவும்.
எல்லாம் நன்றாக வதங்கியவுடன் ரெடியாக வைத்துள்ள இட்லி துண்டுகளை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவேண்டும்

10 comments:

Jaleela Kamal said...

அருமையான சத்துள்ள டிபன்

பித்தனின் வாக்கு said...

அருமை.முதல் முறை கேள்விப் படுகின்றேன். நல்ல சத்தான உணவு. பிளிஸ் அந்த தட்டு உப்புமாவை எனக்குக் கொடுத்து விடுங்கள். நன்றி.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Jaleela

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி பித்தனின் வாக்கு

Vijiskitchencreations said...

நல்ல ப்ரோட்டின் சத்துக்கள் அடங்கியுள்ள ஹெல்தி இட்லி. நல்ல ரெசிப்பி.

suvaiyaana suvai said...

healthy tiffen!!

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி vijis kitchen

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி suvaiyaana suvai

Menaga Sathia said...

சத்தான இட்லி!!

Kanchana Radhakrishnan said...

//Mrs.Menagasathia said...
சத்தான இட்லி!!//


நன்றி Menagasathia

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...