Wednesday, January 20, 2010

சோயாபீன்ஸ் மசாலா

தேவையானவை:

சோயாபீன்ஸ் 1 கப்
வெங்காயம் 2
தக்காளி 2
கொத்தமல்லித்தழை 1/2 கப் (ஆய்ந்தது)
பச்சைமிளகாய் 2
கசகசா 1 டீஸ்பூன்
பொட்டுக்கடலை 1 டேபிள்ஸ்பூன்
--
இஞ்சிபூண்டு விழுது 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
மிளகாய்தூள் 1 டீஸ்பூன்
தனியா தூள் 1 டீஸ்பூன்
---
தாளிக்க:
ஏலக்காய் 2
கிராம்பு 2
பட்டை ஒரு துண்டு

செய்முறை:

முதலில் செய்து கொள்ள வேண்டியது:

1.சோயா பீன்ஸை நான்கு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டவும்.
2.ஒரு வெங்காயத்தை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
3.தக்காளியை எண்ணையில் வதக்கி விழுது போல் அரைத்துக்கொள்ளவும்.
4.கொத்தமல்லித்தழையை வென்னீரில் போட்டு எடுத்து பச்சைமிளகாயுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
5.கசகசாவையும் பொட்டுக்கடலையையும் வறுத்து பொடிபண்ணிக் கொள்ளவும்.
----
வாணலியில் எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து மீதமுள்ள ஒரு வெங்காயத்தை
பொடியாக நறுக்கி பொன்னிறமாக வதக்கவும்.
ஊறவைத்து வடிகட்டிய சோயாபீன்ஸை சேர்க்கவும்.
மஞ்சள்தூள்,தனியாதூள்,மிளகாய்தூளுடன் வெங்காயவிழுது,தக்காளிவிழுது,கொத்தமல்லித்தழை விழுது,
இஞ்சிபூண்டு விழுது சிறிது தண்ணீர் (ஒரு கப்)உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

எல்லாம் சேர்ந்து நன்றாக கொதித்தவுடன் இறக்கியபின் கசகசா பொட்டுக்கடலை பொடியை தூவவும்.
கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்.

பூரி சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ளலாம்.
சாதத்தோடும் பிசைந்து சாப்பிடலாம்.
இதில் புரோட்டின் சத்து அதிகமாக உள்ளது.
காரம் குறைவாகப் போட்டால் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்,

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...