தேவையானவை:
கருப்பு உளுந்து 2 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
இஞ்சி 1 துண்டுபச்சைமிளகாய் 3
சீரகம் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணைய் தேவையானது
-------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:
கருப்பு உளுந்தை இரவே ஊறவைத்து மறு நாள் குக்கரில் தேவையான உப்புடன் வைத்து மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவேண்டும்.
தேங்காய் துருவல்,இஞ்சி,பச்சைமிளகாய்,சீரகம் நான்கினையும் தண்ணீர் விடாமல் பொடி போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
--------
அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை தாளித்து குக்கரில் இருந்து எடுத்த கருப்பு உளுந்தை வடிகட்டி
சேர்க்கவேண்டும்.அதனுடன் அரைத்த பொடியையும் சேர்த்து நன்கு கிளறவேண்டும்.
நவராத்திரிக்கு ஒரு நாள் இந்த சுண்டலை செய்யலாம்,
4 comments:
நவராத்திரி ஸ்பெஷல் சுண்டலோ
அருமை. நன்றி.
நவராத்திரி வாழ்த்துகள்!
நன்றி ராமலக்ஷ்மி
ராஜி said...
நவராத்திரி ஸ்பெஷல் சுண்டலோ..////
ஆமாம்.வருகைக்கு நன்றி ராஜி.
Post a Comment