Sunday, April 10, 2011

வடு மாங்காய்

தேவையானவை:
மாவடு 1 கிலோ
உப்பு 1 கப்
மிளகாய் பொடி 1 கப்
கடுகு 1/4 கப்
மஞ்சள் துண்டு 3
விளக்கெண்ணைய் 1/4 கப்
தண்ணீர் 1 கப்
-----
செய்முறை:



மாவடு வாங்கும்பொழுது காம்புகள் உள்ள மாவடுவாக பார்த்து வாங்கவேண்டும்.
மாவடுவை நன்றாக அலசி தண்ணீரை வடிய வைத்து ஒரு டவலால் தண்ணீர் போக துடைக்கவேண்டும்.
ஒரு கப் தண்ணீரில் ஒரு கப் உப்பு சேர்த்து தண்ணீர் பாதியாகும் வரை கொதிக்கவைக்கவேண்டும்.
கடுகையும் மஞ்சள் துண்டையும் சேர்த்து விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
-----
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மாவடுவை போட்டு விளக்கெண்ணையை பரவலாக தடவவேண்டும்..அதனுடன் கடுகு மஞ்சள் விழுதை சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.
ஊறுகாய் போடும் ஜாடியை நன்றாக துடைத்து முதலில் சிறிது உப்பு தண்ணீர் அடியில் ஊற்றவும்.
அதன் மேல் கொஞ்சம் கலந்த மாவடுவை சிறிது போட்டு அதன் மேல் சிறிது உப்பு தண்ணீரும் மிளகாய் பொடியும் போடவும்.
இதே மாதிரி மாவடுவும்,உப்பும்,மிளகாய் பொடியுமாக கடைசிவரை போட வேண்டும்.
இரண்டு நாள் கழித்து ஜாடியை ஒரு குலுக்கு குலுக்கி நன்கு மூடி வைக்கவேண்டும்.

8 comments:

Jaleela Kamal said...

mika arumai

Kanchana Radhakrishnan said...

Thanks Jaleela.

GEETHA ACHAL said...

விளக்கு எண்ணெய் சேர்த்து செய்தது இல்லை...செய்து பார்க்கிறேன்...

Vijiskitchencreations said...

சூப்பர் பிக்கிள் ரெப்பி. நேரா உங்க வீட்டுக்கு கிளம்பி வந்துடறேன். தயிர் சாதமும் மாவடும் சூப்பர்.
ஆனால் விளக்கெண்ய் சேர்த்து செய்ததில்லை.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Geetha.

ஹேமா said...

மங்காய் ஊருகாயா?விளக்கெண்ணெய் ஒருவிதமான பிடிக்காத மணமாய் இருக்குமே !

Kanchana Radhakrishnan said...

விளக்கெண்ணைய் சேர்ப்பதால் மாவடு ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும்.சிறிதளவே கலப்பதால் விளக்கெண்ணைய் உவ்வே வாசனை இருக்காது. (ஹேமாவிற்கு).
வருகைக்கு நன்றி Vijis Kitchenan and Creations& Hema.
.

Menaga Sathia said...

ஆஹா சூப்பர்ர் மாவடு ஊறுகாய்..எனக்கு இங்கு கிடைக்காது!!ம்ஹூம்..

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...