தேவையானவை:
சப்போட்டா பழம் 3
பேரிச்சம்பழம் 4
பால் 1/2 கப்
ஏலக்காய் 2
பனங்கல்கண்டு பொடி 1/2 டீஸ்பூன்
தேன் 1 டீஸ்பூன்
-------
செய்முறை:
பேரிச்சம்பழத்தை உள்ளே இருக்கும் கொட்டையை எடுத்துவிட்டு கால் கப் தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.
சப்போட்டா பழத்தின் தோலை நீக்கி உள்ளே இருக்கும் விதையை எடுத்துவிட்டு பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
-------
ஊறவைத்த பேரிச்சம்பழம் (தண்ணீருடன்) பொடியாக நறுக்கிய சப்போட்டா பழம்,ஏலக்காய்,பனங்கல்கண்டு பொடி எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு நன்றாக அரைக்கவேண்டும்.
பின்னர் பாலை சேர்த்து மீண்டும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றவேண்டும்.
மிக்சியிலிருந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து தேனைக் கலந்து fridge ல் ஒரு மணிநேரம் வைத்து எடுத்து சாப்பிட சுவையாக இருக்கும்.
11 comments:
குளுமையான குறிப்பு. பழங்களுடன் பால் பனங்கற்கண்டு தேன்... சுவைக்குக் கேட்க வேண்டுமா? நிச்சயம் செய்து பார்க்கிறேன்.
Healthy refreshing drink dear :)
வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.
இங்கயும் குழப்பம்.சப்போட்டாப் பழம் தெரியேல்ல.கூகிள் ல
தேடிட்டேன்.விளங்கவுமில்லை !
Thanks Aruna Manikandan.
// ஹேமா said...
இங்கயும் குழப்பம்.சப்போட்டாப் பழம் தெரியேல்ல.கூகிள் ல
தேடிட்டேன்.விளங்கவுமில்லை //
சப்போட்டா பழத்தை "Chiku " என்று கூறுவார்கள்.வருகைக்கு நன்றி ஹேமா.
எனக்கு ரொம்ப பிடித்த பழம் இது...
superb delight
வருகைக்கு நன்றி Geetha.
healthy delight!!
வருகைக்கு நன்றி Menaga.
தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்,நேரமிருக்கும்போது பார்க்கவும்
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_21.html
Post a Comment