தேவையானவை:
பாசுமதி அரிசி 1 கப்
துருவிய மாங்காய் 1 கப்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
சோம்பு 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
-------
மசாலா பவுடர் செய்ய தேவையானது:
துருவிய தேங்காய் 1 கப்
தனியா 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் 4
கிராம்பு 2
ஏலக்காய் 2
ஜாதிக்காய் பவுடர் 1/2 டீஸ்பூன்
------
அலங்கரிக்க:
முந்திரிபருப்பு 5
பாதாம் பருப்பு 5
நிலக்கடலை 5
--------
செய்முறை:
மசாலா பவுடர் செய்ய கொடுத்துள்ளவைகளை எண்ணையில் வறுத்து பொடி பண்ணிக்கொள்ளவும்.
பாசுமதி அரிசியை ஒரு கப்புக்கு 1 1/2 கப் வீதம் தண்ணீர் வைத்து அரைமணிநேரம் ஊறவைக்கவேண்டும்.
மாங்காய் துருவலுடன் அரைத்த பொடி பாதி அளவு,மஞ்சள்தூள்,தேவையான உப்பு சேர்த்து நன்கு பிசறி
பத்து நிமிடம் ஊறவைக்கவேண்டும்.
கடாயில் நெய் சேர்த்து சோம்பை தாளித்து மாங்காய் கலவையை சேர்த்து சிறிது வதக்கிக்கொள்ளவும்.
Ele.cooker ஐ எடுத்துக்கொண்டு அதில் ஊறவைத்த பாசுமதி அரிசி (தண்ணீருடன்),மாங்காய் கலவை,மீதமுள்ள மசாலா பொடி எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து வைக்கவேண்டும்.
மாங்காய் சாதம் தயாரானவுடன் வறுத்த முந்திரிபருப்பு,பாதம்,நிலக்கடலையால் அலங்கரிக்கவும்.
13 comments:
Nice tangy rice :)
tangy and a delicious platter-good one !
வாய் புளிக்குது வாசிக்கிறப்பவே.
செய்து பாக்கணும்.செய்யச் சுலபமாகவும் இருக்கும் !
Thanks Aruna Manikandan.
Thank you for the comment Priya.
நல்ல குறிப்பு காஞ்சனா,வெரி ரிச்..மீராவின் கிச்சன் தானே காஞ்சனா,மிரா என்று இருக்கிறதே ! சரி பார்க்கவும்..
சீஸ்சனுக்கேற்ற சாதம்.டிரை பண்ணிடவேண்டியதுதான்.
//நல்ல குறிப்பு காஞ்சனா,வெரி ரிச்..மீராவின் கிச்சன் தானே காஞ்சனா,மிரா என்று இருக்கிறதே ! சரி பார்க்கவும்..//
வலைப்பூவின் பெயர் "மிரா" தான்.பாண்டிச்சேரி அன்னையின் பெயர்.வருகைகு நன்றி asiya omar.
வருகைக்கு நன்றி Hema.
வருகைக்கு நன்றி ஸாதிகா.
romba nalla iruku ...superb...
மசாலா சேர்த்து செய்திருப்பது நல்லாயிருக்கு...
வருகைக்கு நன்றி
Geetha
Menaga
Deiva Suganthy.
Post a Comment