தேவையானவை:
புழுங்கலரிசி 1 கப்
பச்சரிசி 1/2 கப்
உளுத்தம்பருப்பு 1/2 கப்
வெந்தயம் 1 டேபிள்ஸ்பூன்
------
வெங்காயம் 2
பச்சைமிளகாய் 4
இஞ்சி 1 துண்டு
உப்பு,எண்ணைய் தேவையானது
---------
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து
செய்முறை:
புழுங்கலரிசி,பச்சரிசி,உளுத்தம்பருப்பு,வெந்தயம் நான்கையும் ஊறவைத்து நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
தேவையான உப்பை சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.நான்கு மணிநேரம் கழித்து
அதில் வெங்காயம்,பச்சைமிளகாய்,இஞ்சி மூன்றையும் பொடியாக நறுக்கி போடவேண்டும்.பின்னர் கடுகு,உளுத்தம்பருப்பு,மஞ்சள்தூள்,கறிவேப்பிலை தாளித்து அதனுடன் சேர்க்கவேண்டும்.
----
குழிப்பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எல்லாக்குழிகளிலும் எண்ணைய் ஊற்றி மாவை சிறு கரண்டியால் ஊற்றவேண்டும்.மாவு வெந்ததும் திருப்பிப்போட்டு (குச்சியால் திருப்பவேண்டும்) மீண்டும் கொஞ்சம் எண்ணைய் ஊற்றி எடுக்கவேண்டும்.
வெங்காய்ம்,தக்காளி சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
9 comments:
romba nalla iruku...
அடிக்கடி செய்கிற ஒன்று. அருமையாகக் குறிப்பைத் தந்துள்ளீர்கள்.
மீதியான இட்லி மாவில் எல்லாம் சேர்த்து குழிப்பணியாரம் செய்வேன்,இது மிகவும் அருமை..
ஊருக்குப் போனநேரம் கடைசியாகச் சாப்பிட்டேன்.இடித்த தேங்காய்ச் சம்பலோடும் சுவையாக இருக்கும் !
வருகைக்கு நன்றி
கீதா
ராம லக்ஷ்மி
asiya omar
Hema
ரொம்ப நல்லாயிருக்கு!!
நானும் இட்லி மாவில்தான் செய்வேன். இது நல்லா இருக்குது.
வருகைக்கு நன்றி
Menaga
Deiva Suganthy.
இனிப்புப் பணியாரம் செய்திருக்கிறேன். இதுவரை இந்தமுறையில் செய்ததில்லை. செய்முறையே நாவில் சுவைகூட்டுது. பகிர்வுக்கு நன்றி.
Post a Comment