Thursday, April 14, 2011

ஸ்வீட் பொடேடோ போளி

பூரணத்திற்கு தேவையானவை:

 ஸ்வீட் பொடேடோ
(சர்க்கரை வள்ளிக்கிழங்கு) 2
வெல்லம் (பொடித்தது) 1 கப்
ரவை 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் தூள் 1/2 டீஸ்பூன்
-------
மேல்மாவு தயாரிக்க தேவையானவை:
மைதா மாவு 1 கப்
நெய் 1/4 கப்
கேசரி பவுடர் 1/2 டீஸ்பூன்
உப்பு ஒரு சிட்டிகை
------
செய்முறை:

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மைதாமாவு,ஒரு டேபிள்ஸ்பூன் நெய்,உப்பு,கேசரி பவுடர் எல்லாவற்றையும் சேர்த்து கைகளால் நன்கு பிசறி தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவேண்டும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளவேண்டும்.
அதனுடன் பொடித்த வெல்லம்,ரவை,ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவேண்டும்.

பிசைந்த மைதா மாவை ஒரு உருண்டை எடுத்து சப்பாத்தி மாதிரி இட்டு அதன் மேல் தயாராக உள்ள பூரணத்தை சிறிதளவு வைத்து நான்கு புறமும் மூடி மறுபடியும் சப்பாத்தி மாதிரி இடவேண்டும்.(பிசைந்த மாவை ஒரு உருண்டை plastic sheet ல் எண்ணைய் தடவி அதன் மேல் வைத்து உள்ளே பூரணத்தை வைத்து கையால் சிறிது தட்டிமேலே இன்னொரு plastic sheet ஆல் மூடி சப்பாத்தி தேய்க்கும் கட்டையிலும் எண்ணைய் தடவி இடலாம்)

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் இட்ட போளியை போட்டு சிறிது நெய் ஊற்றி இருபுறமும் சிவந்தவுடன் எடுக்கவேண்டும்

14 comments:

Jaleela Kamal said...

ரொம்ப அருமை ,எனக்கு ரொமப் பிடிக்கும்

இன்று கூட ஸ்வீட் பொட்டேட்டோ கோகனட் பால்ஸ் தான் காலை டிபன்

தெய்வசுகந்தி said...

அருமையான் போளி!!

GEETHA ACHAL said...

சூப்பரான் போளி...

ஹேமா said...

சக்கரை வள்ளிகிழங்கு குழப்பமா இருக்கு.ராசவள்ளிக்கிழங்கா இல்லை வற்றாளங்கிழங்கா !

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி தெய்வசுகந்தி.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Geetha.

Kanchana Radhakrishnan said...

//ஹேமா said...
சக்கரை வள்ளிகிழங்கு குழப்பமா இருக்கு.ராசவள்ளிக்கிழங்கா இல்லை வற்றாளங்கிழங்கா//

ஹேமா உங்களுக்காக சர்கரைவள்ளிக்கிழங்கின் படத்தை போட்டிருக்கிறேன்.வருகைக்கு நன்றி ஹேமா.

சி.பி.செந்தில்குமார் said...

ஒப்புட்டு மாதிரி

Asiya Omar said...

எங்க ஊரில் சீனிக்கிழங்குன்னு சொல்லுவோம்.நல்ல ரெசிப்பி.காஞ்சனா..

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி சி.பி.செந்தில்குமார்.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி asiya.

Menaga Sathia said...

நானும் இதேமாதிரி தான் என் பொண்ணுக்கு செய்து கொடுத்தேன்...ரவை சேர்த்து அடுத்த முறை செய்து பார்க்கிறேன்..

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Menaga.

ஹேமா said...

நன்றி அக்கா.இப்போதான் ஞாபகம் வந்து இந்தப் பதிவைப் பார்க்கிறேன்.படத்தையே போட்டிருக்கிறிங்க.

இதை நாங்கள் வற்றாளங்கிழங்கு என்று சொல்வோம்.நாவல் கலர் கிழங்கை இராசவள்ளிக்கிழங்கு என்று சொல்வோம் !

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...