Thursday, March 31, 2011

வாழைத்தண்டு தயிர் கூட்டு



தேவையானவை:        
வாழைத்தண்டு 1

தயிர் 1 கப்

உப்பு,எண்ணைய் தேவையானது
-------
அரைக்க:

தேங்காய் துருவல் 1/2 கப்

இஞ்சி 1 துண்டு

பச்சைமிளகாய் 3

சீரகம் 1/2 டீஸ்பூன்
---
தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை 1 கொத்து
------
செய்முறை:

வாழைத்தண்டின் தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில் போடவும்.

அரைக்க கொடுத்துள்ளவைகள சிறிது தயிர் சேர்த்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் சிறிது தண்ணீர் விட்டு வாழைத்தண்டு துண்டுகளை வேகவைக்கவும்.

சிறிது வெந்ததும் தேவையான உப்பு சேர்க்கவும்.(வாழைத்தண்டிற்கு அதிக உப்பு தேவைப்படாது)

பின்னர் அரைத்து வைத்துள்ள விழுதையும் மீதமுள்ள தயிரையும் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.

நன்கு கொதித்தபின் கடுகு,உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
---
வாழைத்தண்டு சிறுநீரக கற்களை கரைக்கும் சக்தி உடையது.

7 comments:

Priya Sreeram said...

make somethg similar- this looks good !

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி UPA.

ஹேமா said...

ஊரில் சாப்பிட்டு இருக்கிறேன் இதே முறையில்.அது இப்போ 13 வருடங்களாகிவிட்டது !

Jayanthy Kumaran said...

sooooooooper tempting..perfect for this hot summer..:P
Tasty Appetite

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Priya.

goma said...

நானும் 3 அங்குல,
’ட்யூப் லைட்’ஒன்று வாங்கி வைத்து 3 நாட்களாகி விட்டன ,
அது ஃப்யூஸ் போகும் முன் இன்றைக்கு அதை தயிர்கூட்டாக்க வேண்டும்.பகிர்வுக்கு நன்றி

Kanchana Radhakrishnan said...

"டியூப் லைட்" கூட்டாக மாறிவிட்டதா!
வருகைக்கு நன்றி Goma.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...