தேவையானவை:
மேத்தி (முளைகட்டிய வெந்தய) பவுடர் 1 1/2 கப்
கோதுமைமாவு 1 கப்
பொடித்த சர்க்கரை 3/4 கப்
நெய் 1/4 கப்
ஏலக்காய் தூள் 1/2 டீஸ்பூன்
ஜாதிக்காய் தூள் 1/2 டீஸ்பூன்
சுக்குத் தூள் 1/2 டீஸ்பூன்
கசகசா 1/2 டீஸ்பூன்
பாதாம்பருப்பு 10
பால் 1/4 கப்
செய்முறை:
1.மேத்தி பவுடரில் பாலை தெளித்து நன்கு பிசறி ஒரு மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.பின்னர் வாணலியில் நெய் விட்டு மேத்தி பவுடரை நன்கு வறுக்கவேண்டும்.
2.கோதுமை மாவை நெய் விட்டு நன்கு வறுக்கவேண்டும்.
3.வறுத்த மேத்தி மாவு,கோதுமை மாவு இரண்டையும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் கட்டியில்லாமல் வரும்.
4.கசகசா வை அரை மணி நேரம் 1/4 டீஸ்பூன்தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
5.சர்க்கரை,ஊறவைத்த கசகசா,ஏலக்காய் தூள்,ஜாதிக்காய் தூள்,சுக்குத் தூள் எல்லாவற்றையும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் நைசாக இருக்கும்.
6.பாதாம் பருப்பை ஒன்று இரண்டாக உடைத்துக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தில் மேத்தி மாவு,கோதுமைமாவு கலவை.சர்க்கரை கலவை,உடைத்த பாதாம்பருப்பு எல்லாவற்றையும் போட்டு (வேண்டுமென்றால் மொத்த கலவையையும் மிக்ஸியில் ஒரு சுற்று
சுற்றினால் மாவு சீராக இருக்கும்) நன்கு கலந்து நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி உருண்டைகளாக உருட்டவும்
12 comments:
Sounds interesting and new to me dear...
Healthy laddoo
How does it taste with methi????
வெந்தயத்தின் குணம் போகாது.சாப்பிடும் போது சற்று கசப்பாகத்தான் இருக்கும்.
வருகைக்கு நன்றி அருணா.
இதுபுதுசா இருக்கே..
வருகைக்கு நன்றி Starjan
வித்தியாசமான புது ரெசிபி,அருமை!!
மிகவும் வித்தியசமான குறிப்பு...வெந்தயம் பவுடருக்கு பதிலாக , காய்ந்த வெந்தயகீரையினை இதில் உபயோகிக்கலாமா....நன்றி
வருகைக்கு நன்றி Menaga
காய்ந்த வெந்தயக் கீரை உபயோகப்படுத்தினால் நன்றாக வராது.வேண்டுமென்றால் நீங்கள் வெந்தயத்தை (fenugreek) வெறும் வாணலியில் நன்றாக வறுத்து விட்டு பொடி பண்ணிக்க்கொண்டு
செய்யலாம்.வருகைக்கு நன்றி கீதா.
ரொம்ப புது குறிப்பா இருக்கு.எனக்கு வெந்தயம் ரொம்ப பிடிக்கும்.கண்டிப்பா செஞ்சு பாக்கறேன்.
வருகைக்கு நன்றி Ammu.
A very differnet nutritious delight!
Thanks Mano
Post a Comment