Sunday, March 28, 2010

வல்லாரை மசியல்



தேவையானவை:
வல்லாரை கீரை 2 கப் (பொடியாக நறுக்கியது)
பயத்தம்பருப்பு 1/4 கப்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு.எண்ணைய் தேவையானது

அரைக்க:

தேங்காய் துருவல் 1/4 கப்
சீரகம் 1 டீஸ்பூன்
மிளகு 1 டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 1
கறிவேப்பிலை சிறிதளவு






செய்முறை:

முதலில் பயத்தம்பருப்பை ஒரு கப் தண்ணீரில் பெருங்காயத்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் குழைய வேகவிடவும்.(4 விசில் விடவேண்டும்).அரைக்கக் கொடுத்துள்ளவைகளை விழுது போல அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.வல்லாரைக் கீரையை காம்புகளை அகற்றிவிட்டு பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் சிறிது தண்ணீர் விட்டு பொடியாக நறுக்கிய வல்லாரைக் கீரையை சேர்த்து வேக வைக்க வேண்டும்.கீரை நன்றாக வெந்ததும் வெந்த பயத்தம்பருப்பை உப்புடன் சேர்க்க வேண்டும். கரண்டியால் நன்கு மசிக்கவும்.பின்னர் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

அடுப்பை அணைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.

வல்லாரைக் கீரை ஞாபக சக்தியை வளர்க்கும் என்பார்கள்

10 comments:

prabhadamu said...

நன்றி காஞ்சனா அக்கா. இன்றுதான் வல்லரையின் மருத்துவ குணங்கள் என்று என் தளத்தில் இட்டேன்.

http://azhkadalkalangiyam.blogspot.com/2010/03/blog-post_28.html

அதற்க்குள் மசியல் வந்து விட்டது. செய்து பார்த்து சொல்லுகிறோன். நன்றிக்கா.

Kanchana Radhakrishnan said...

நன்றி prabhadamu

SathyaSridhar said...

Vallarai keerai rombhavum nallathu athula masiyal senju kanpinchurukeenga,,rombhavum easy ah irukku n nallavum irukkum,,, but i dont get vallarai here in my place,,sure i will try this one soon when my india trip.thanks for sharing dear,,take care n keep on smiling.

Nithu Bala said...

Hi Kanchana, first time here..you have a wonderful space..I love this vallarai masiyal..cutely clicked..Just got attracted by your blog's name "Mira"..are you a follower of Shri Mother & Shri Aurobindo's ? drop in at my blog when you get time..following you Dear..

மின்மினி RS said...

அருமையாக உள்ளது; எளிமையான வழிமுறைகள்..,

நான் புதிதாக வலைப்பூ ஆரம்பித்து சில இடுகைகள் வெளியிட்டுள்ளேன். உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தருவீங்களா..

Kanchana Radhakrishnan said...

Thanks Nithu Bala

Kanchana Radhakrishnan said...

தங்கள் வலைப்பூவைப் பார்த்தேன் மின்மினி.நன்றாக உள்ளது.மகிழ்ச்சி.

Kanchana Radhakrishnan said...

Thanks for coming Sathya Sridhar

Unknown said...

இப்படி செய்வதில் அதன் கசப்பு குறைகிறதா எனத்தெரியவில்லை. நான் விழுதாக அரைத்து சட்னி செய்து உண்பது வழக்கம். பெங்களூரில் இந்த கீரை அதிகம் கிடைப்பதில்லை. சென்னையில் 5ரூக்கு அவ்வளவு கிடைக்கும். எனக்கு கீரை விற்கும் பாட்டி இந்நேரம் மறைந்திருக்கலாம். மிகவும் பயனுள்ள கீரை இது.
புளி, தேங்காய் வைத்து துவையல் அரைக்கலாம். நன்றாக இருக்கும்!

Kanchana Radhakrishnan said...

நன்றி இசை

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...