தேவையானவை:
தேங்காய்பால் 1 கப்
பீன்ஸ் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
காரட் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
பட்டாணி 1/2 கப்
உருளைக்கிழங்கு 2
சின்ன வெங்காயம் 10
உப்பு,எண்ணைய் தேவையானது
--
அரைக்க:
தேங்காய் துருவல் 1/2 கப்
முந்திரிபருப்பு 5
பச்சைமிளகாய் 2
கசகசா 1 டீஸ்பூன்
---
தாளிக்க்:
சோம்பு 1 டீஸ்பூன்
பட்டை சிறு துண்டு
செய்முறை:
பீன்ஸ்,காரட் இரண்டையும் பொடியாக நறுக்கிகொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சிறு துண்டுகளாக நறுக்கவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்து இரண்டு இரண்டாக நறுக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
---
வாணலியில் எண்ணைய் வைத்து சோம்பு,பட்டை தாளித்து வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும்.
பின்னர் பீன்ஸ்,காரட்,உருளைக்கிழங்கு,பட்டாணி நான்கையும் சேர்த்து வதக்கவும்.காய்கறிகள் நன்கு வெந்ததும்
தேவையான உப்பும்,சிறிது தண்ணீருடன் அரைத்த விழுதைக் கலந்து கொதிக்கவிடவும்.
கடைசியாக தேங்காய் பால் சேர்த்து சில நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.
தேங்காய்பால் குருமா இட்லி,தோசை,பூரி,சப்பாத்தி எல்லாவற்றிற்கும் சிறந்த sidedish.
12 comments:
Superb yummy recipe..thanks for sharing..
சூப்பராக் இருக்கின்றது குருமா...பூரி சூப்பராக உப்பலாக இருக்கின்றது...அதற்கு குறிப்பு போடவும்..
Hi Mira,
Superb recipe..mihavum arumai...
Dr.Sameena@
www.myeasytocookrecipes.blogspot.com
அருமையான குருமா!!
Thanks Nithu.
கோதுமை மாவுடன் சிறிது ரவை சேர்த்துக் கொள்ளவும்.(ஒரு கப் மாவுக்கு ஒரு டீஸ்பூன் ரவை).
வருகைக்கு நன்றி கீதா.
வருகைக்கு நன்றி Dr.Sameeba Prathap.
வருகைக்கு நன்றி Menaga.
பார்க்கவே அருமையாக இருக்கிறது ! வெண்மை நிறத்தில் குருமா அழகு!
வருகைக்கு நன்றி Mano.
Super combination
வருகைக்கு நன்றி Chef.Palani Murugan.
Post a Comment