தேவையானவை:
சுண்டைக்காய் 1 கப்
வெங்காயம் 1மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
மசாலா தூள் 1 டீஸ்பூன்
எள்ளுப்பொடி 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
-------
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
-----
செய்முறை:
சுண்டைக்காய் ஒவ்வொன்றையும் தனித்தனியாக இடிக்கவேண்டும்.(நறுக்குவதற்கு பதில் இடித்தால் சுவையாக இருக்கும்).
எள்ளுப்பொடிக்கு எள்ளை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து கொள்ளவேண்டும்.
-------
அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணைய் சேர்த்து கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.
பின்னர் வெங்காயத்தை பொடியாக நறுக்கி பொன்னிறமாக வதக்கவேண்டும்.
அதனுடன் சுண்டைக்காயை சேர்த்து வதக்கி சிறிது வெந்ததும் தேவையான உப்பு, மஞ்சள்தூள்
மசாலா தூள்,எள்ளுப்பொடி
சேர்த்து நன்கு கிளறி இறக்கவேண்டும்.
9 comments:
வித்தியாசமான பிரட்டல்!!
நாங்கள் புளிவிட்டு பிரட்டல் கறி வைப்போம்.இந்த முறை வித்தியாசம் !
வருகைக்கு நன்றி Menaga.
// ஹேமா said...
நாங்கள் புளிவிட்டு பிரட்டல் கறி வைப்போம்.இந்த முறை வித்தியாசம் !///
முடிந்தவரை புளியை தவிர்க்கலாமே.வருகைக்கு நன்றி ஹேமா.
loved this pirattal !
எங்க வீட்டில் அம்மா செய்வாங்க...அப்பொழுது எல்லாம் இதனை சாப்பிடவே மட்டேன்...ஆனா இப்போ ஆசை இருக்கு...சுண்டைக்காய் தான் இங்கே கிடைக்காது...
பிடித்தமான ஒன்று. எள் சேர்த்து செய்யும் முறை எனக்குப் புதிது. கீதா சொல்வது போல பெங்களூரில் கிடைப்பது அரிது. எப்போதேனும் கடைகளில் தென்படும்.
வருகைக்கு நன்றி Priya.
வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.
Post a Comment