Thursday, July 28, 2011

ரவா பொங்கல்

தேவையானவை:

ரவா 1 கப்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
---
பயத்தம்பருப்பு 1/4 கப்
இஞ்சி ஒரு சிறிய துண்டு
பச்சைமிளகாய் 2
மிளகு 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் 1 டேபிள்ஸ்பூன்
நெய் 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
முந்திரிபருப்பு 10
உப்பு,எண்ணைய் தேவையானது
---
செய்முறை:


பயத்தம்பருப்பை ஒரு கப் தண்ணீரில் மஞ்சள்தூள்,பெருங்காய்த்தூள் சேர்த்து வேகவைக்கவேண்டும். பருப்பு நன்கு குழைய வேண்டும்.குக்கரிலும் வைக்கலாம். 4 விசில் விடவேண்டும்.

ஒரு கடாயை எடுத்துக்கொண்டு ஒரு டேபிள்ஸ்பூன் நெய்,ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணைய் விட்டு முதலில் மிளகை பொறிக்கவேண்டும். பின்னர் சீரகத்தை பொறித்து அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவேண்டும்.தயாராக உள்ள பயத்தம்பருப்பை இதனுடன் சேர்த்து கிளறவேண்டும்.

இன்னொரு அடுப்பில் இரண்டு கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் கொதிக்கவிடவேண்டும். தண்ணீர் கொதித்தவுடன் பயத்தம்பருப்பு கலவையுடன் உப்புடன் சேர்த்து கிளறவேண்டும்.
ரவையை பரவலாக கட்டித் தட்டாமல் தூவிக்கொண்டே கிளறவேண்டும்,பயத்தம்பருப்பும் ரவையும் நன்றாக சேர்ந்து வந்தபின் அடுப்பை அணைத்து வறுத்த முந்திரியை போடவேண்டும்.

ரவா பொங்கலுக்கு பொருத்தமான side dish தேங்காய் சட்னி.

7 comments:

Menaga Sathia said...

சூப்பர்ர் ரவா பொங்கல்..

ஹேமா said...

அவசரத்துக்கு சீக்கிரமா செய்திடலாம்போல இருக்கே !

GEETHA ACHAL said...

ரவா பொங்கல் ரொம்ப சூப்பர்ப்..

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Menaga.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி ஹேமா.

DR said...

இன்னைக்கு ராத்திரி முயற்சி செய்து பார்க்க போகின்றேன். ஆனா ஒரு சந்தேகம்... ரவை வறுத்ததா இல்ல வறுக்காததா... ?

எனிவே, நான் வறுத்தே பண்ணி பாக்குறேன்... நீங்க பொறுமையா சொல்லுங்க... அப்புறம் சரியா பன்னிக்கலாம்...

Kanchana Radhakrishnan said...

//தினேஷ் said...
இன்னைக்கு ராத்திரி முயற்சி செய்து பார்க்க போகின்றேன். ஆனா ஒரு சந்தேகம்... ரவை வறுத்ததா இல்ல வறுக்காததா... ?

எனிவே, நான் வறுத்தே பண்ணி பாக்குறேன்... நீங்க பொறுமையா சொல்லுங்க... அப்புறம் சரியா பன்னிக்கலாம்..//



ரவையை வறுக்கவேண்டாம்.ஆனால்
தண்ணீர் நன்கு கொதித்தவுடன் ரவையை சேர்க்கவேண்டும்.வருகைக்கு நன்றி தினேஷ்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...