தேவையானவை:
உருளைக்கிழங்கு 5
வெங்காயம் 2
தேங்காய் துருவல் 1/4 கப்
பச்சைமிளகாய் 2
இஞ்சி 1 துண்டு
தேங்காய் எண்ணைய் 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
மிளகாய்தூள் 1 தேக்கரண்டி
எலுமிச்ச ஜூஸ் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணைய் தேவையானது
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
---
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.(உருளையை வேகவைக்கும்பொழுது இஞ்சித்துண்டை அதனுடன் சேர்த்து வேகவைக்கவும்.வாயு தொந்தரவு இருக்காது)
வெங்காயம்,பச்சைமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
தேங்காய் துருவலை தேங்காயெண்ணையில் வறுத்துக்கொள்ளவும்.
-----
அடுப்பில் வாணலியை வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயம்,பச்சைமிளகாய் இரண்டையும் வதக்கவும்.
பின்னர் மசித்த உருளைக்கிழங்கை சேர்க்கவும்.அதனுடன் உப்பு,மஞ்சள்தூள்,மிளகாய் தூள்,தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.
இறக்கிய பின் எலுமிச்சை ஜூஸ் பிழியவும்.
இந்த பொடிமாசை சாதத்தோடு சற்று நல்லெண்ணைய் விட்டு பிசைந்தும் சாப்பிடலாம். பொரியலாகவும் உபயோகித்துக்கொள்ளலாம்.
இதே முறையில் வாழைக்காயை செய்யலாம்
9 comments:
இதையும் வாழைக்காயில் செய்வதையும் நாங்கள் புட்டு என்போம். இஞ்சியைத் தாளிக்கையில் சேர்ப்போமானாலும் கிழங்குடனேயே அவிக்கலாம் எனும் தகவல் புதிது. செய்கிறேன்.
மிக அருமை காஞ்சனா
நானும் இஞ்சி துருவல் சேர்ப்பேன்
ஆனால் கிழங்குடன் அவிக்க்கலாம் என்பது புதிய தகவல்
வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.
நாங்களும் இதை பொடிமாஸ்ன்னுதான் சொல்லுவோம். இதே முறையில்தான் செய்வோம். ஆனா, தேங்காயை அப்டியே போடாம, அதோட சீரகம் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், பூண்டு போட்டு பிருபிருன்னு அரைச்சு வதக்கி அத்தோட கிழங்கைச் சேர்ப்போம்.
வருகைக்கு நன்றி அமைதிச்சாரல்.
பொடிமாஸ் சூப்பர் காஞ்சனா.
Podimas looks so tempting...
உருளைகிழங்கு பொடிமாசில் தேங்காய்துருவல் எல்லாம் செர்த்து வித்தியாசமாக செய்து காட்டி இருக்கீங்க.சூப்பர்.
வருகைக்கு நன்றி ஸாதிகா
Post a Comment