Sunday, January 1, 2012

சேமியா...பால்...டிலைட்...




அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.புத்தாண்டினை ஒரு இனிப்புடன் தொடங்குவோம்.

தேவையானவை:
பால் 2 கப்
சேமியா 1/2 கப்
பாதாம் 10
முந்திரிபருப்பு 10
சர்க்கரை 1 கப்
பேரீச்சம்பழம் 4
நெய் 1 மேசைக்கரண்டி
------
செய்முறை:
பாதாம்,முந்திரி சேமியா மூன்றையும் நெய்யில் தனித்தனியாக பொன்னிறமாக வறுக்கவேண்டும்.
சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கம்பிப்பாகு வந்தவுடன் இறக்கவும்.
பாலை ஒரு அகண்ட பாத்திரத்தில் வைத்து இரண்டு கப் ஒரு கப் ஆகும் வரை காய்ச்சவேண்டும்.
கொதித்த பாலுடன் சர்க்கரைபாகையும்,சேமியாவையும் சேர்த்து கிளறவேண்டும்.
சேமியா நன்கு வெந்தவுடன் வறுத்த பாதாம்,முந்திரி சேர்க்கவும்.
சேமியா..பால்..டிலைட்... திக்காக வந்தவுடன் பேரீச்சம்பழத்தை பொடியாக நறுக்கி அதனுடன் சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவேண்டும்.

2 comments:

ஹேமா said...

இனிப்போடு வந்திருக்கிறது 2012.வாழ்த்துகள்.என்ன...சீனி கொஞ்சம் தூக்கலா இருக்கு !

Kanchana Radhakrishnan said...

வருகைக்கும் நன்றி Hema.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...