தேவையானவை:
பயத்தம்பருப்பு 1 கப்
உளுத்தம்பருப்பு 1 கப்
தொன்னை 10
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
கடலைபருப்பு 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் 1 துண்டு
பச்சைமிளகாய் 4
இஞ்சி 1 துண்டு
முந்திரிபருப்பு 10
தேங்காய் துண்டுகள் 10
நெய் 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லித்தழை சிறிதளவு
தொன்னையில் இட்லி மாவு
செய்முறை:
பயத்தம்பருப்பு,உளுத்தம்பருப்பு இரண்டையும் இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும். ஊறினபின் இரண்டையும் ' கொட கொட' என்று அரைத்து தேவையான உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.அரைத்த மாவு இட்லி மாவு பதத்திற்கு இருக்கவேண்டும்.அதை 8 மணி நேரம் கழித்து உபயோகப்படுத்த வேண்டும்.
மிளகு,சீரகம் இரண்டையும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றவேண்டும்.
இஞ்சி பச்சைமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
-----------
வாணலியில் நெய்வைத்து காய்ந்ததும் முந்திரிபருப்பை வறுக்கவேண்டும்.
அதனுடன் நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய் உடைத்த மிளகு,சீரகம் போட்டு வதக்கவேண்டும்.
கடலைபருப்பை அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி இதனுடன் சேர்க்கவேண்டும்.
தேங்காய் துண்டுகளையும் இதனுடன் சேர்த்து எல்லாவற்றையும் சேர்த்து வதக்கி அப்படியே மாவில் சேர்க்கவேண்டும்.
இப்பொழுது ' குடலை இட்லி மாவு ' ரெடி.
----------
தொன்னையை எடுத்துக்கொண்டு அதில் நன்றாக எண்ணெய் தடவவேண்டும்,முக்கால் பாகத்திற்கு மாவை விட்டு தொன்னையுடன் அப்படியே இட்லி தட்டில் வைத்து
குக்கரில் 15 நிமிடம் ஆவியில் வைத்து எடுக்கவேண்டும்.
'குடலை இட்லி' யை அப்படியே சாப்பிடலாம்.
வேண்டுமென்றால் தேங்காய் சட்னி,தக்காளி சட்னி side dish ஆக வைத்துக்கொள்ள்லாம்.
22 comments:
சமையல் குறிப்பை வெளியிட்டதற்கு நன்றி & வாழ்த்துக்கள்
வருகைக்கு நன்றி இணையத்தில் நீங்களும் சம்பாரிக்கலாம்.
//
Avargal Unmaigal said...
சமையல் குறிப்பை வெளியிட்டதற்கு நன்றி & வாழ்த்துக்கள்//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி . Avargal Unmaigal.
மிகவும் சத்தான புதுமையான உணவு வகை காஞ்சனா. உளுந்தும், பயத்தம் பருப்பும் சேர்த்து எதை செய்தாலும் அது ருசியாகத்தான் இருக்கும். மிக்க நன்றி காஞ்சனா.
அருமை காஞ்சனா.
இதே மாவை நம்ம எவர்சில்வர் மசாலா டப்பாவுக்குள்ளே இருக்கும் கிண்ணங்களில் பாதி அளவு ஊற்றி வச்சு எடுத்தால் சிலிண்டர் உருவத்தில் வருது.
இல்லைன்னா ஒரே மாதிரி இருக்கும் ஏழு ஸ்டீல் டம்ப்ளர்கள் இருந்தாலும் போதும்.
நம்மூரில் இங்கே தொன்னைகள் கிடைக்காது. அதான்.... இப்படி எல்லாம் தானாய் யோசிப்போம்:-))))
புதுசா இருக்கு. இதை ஏன் இட்லித்தட்டில் ஊற்றி எடுக்கக்கூடாது?
// புவனேஸ்வரி ராமநாதன் said...
மிகவும் சத்தான புதுமையான உணவு வகை காஞ்சனா. உளுந்தும், பயத்தம் பருப்பும் சேர்த்து எதை செய்தாலும் அது ருசியாகத்தான் இருக்கும். மிக்க நன்றி காஞ்சனா.//
ஆம்.சத்தான உணவு தான்.வருகைக்கு நன்றி புவனேஸ்வரி ராமனாதன்.
//
துளசி கோபால் said...
அருமை காஞ்சனா.
இதே மாவை நம்ம எவர்சில்வர் மசாலா டப்பாவுக்குள்ளே இருக்கும் கிண்ணங்களில் பாதி அளவு ஊற்றி வச்சு எடுத்தால் சிலிண்டர் உருவத்தில் வருது.//
'குடலை இட்லி' சற்று உப்பலாக வருவதால் நான் தொன்னையில் செய்வது வழக்கம்.
வருகைக்கு நன்றி துளசி கோபால்.
ரொம்ப நல்ல இருக்கு தொன்னையில் பார்க்க அழகா இருக்கு
தொன்னைக்கு பதில் இட்லி பாத்திரத்திலேயே நேரடியாக அவிக்கலாமா?> அல்லது குழிபனியார கல்லில் ஊற்றலாமா?
// ஹுஸைனம்மா said...
புதுசா இருக்கு. இதை ஏன் இட்லித்தட்டில் ஊற்றி எடுக்கக்கூடாது?//
இட்லி தட்டிலும் வைக்கலாம்.ஆனால் ஒவ்வொரு தட்டிலும் அரை கரண்டி மாவு ஊற்றினால் போதும்.
வருகைக்கு நன்றி ஹுஸைனம்மா. .
//
Jaleela Kamal said...
தொன்னைக்கு பதில் இட்லி பாத்திரத்திலேயே நேரடியாக அவிக்கலாமா?> அல்லது குழிபனியார கல்லில் ஊற்றலாமா?//
எதில் வேண்டுமானாலும் செய்யலாம்.ஆனால் அதற்கேற்றார்போல் நேரம் வித்தியாசப்படும்.
'தொன்னையில்' செய்வது பாரம்பரிய சமையல். வருகைக்கு நன்றி ஜலீலா.
வருகைக்கு நன்றி நண்டு @நொரண்டு -ஈரோடு.
தொன்னைங்கிறது ஒரு வகை இலைதானே.அதன் வாசனைக்காகத்தானே அதில ஊத்தி அவிக்கணும் !
தொன்னையில் செய்யறப்ப இன்னும் வாசனையா வித்தியாசமா இருக்கும் போலிருக்கே..
//ஹேமா said...
தொன்னைங்கிறது ஒரு வகை இலைதானே//
தொன்னை என்பது வாழைச் சருகை வைத்து செய்வது.அதற்கு தனி மணம் உண்டு.வருகைக்கு நன்றி ஹேமா..
//
அமைதிச்சாரல் said...
தொன்னையில் செய்யறப்ப இன்னும் வாசனையா வித்தியாசமா இருக்கும் போலிருக்கே..//
ஆம்.தொன்னையில் செய்யறப்ப இன்னும் வாசனையா வித்தியாசமா இருக்கும்.வருகைக்கு நன்றி.
அமைதிச்சாரல்.
அருமையான சத்துள்ள குறிப்பு.
தொன்னைக்கு மாற்றாக பல வழிகளும் பின்னூட்டங்களில் அறிந்து கொண்டேன்.
நன்றி.
வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.
New recipe,looks nice!!
Thanks Menaga.
வலைச்சரத்தில் ’மார்கழி கலைகள்’ என்ற பதிவில் உங்கள் பொங்கலோ பொங்கல் பிரசாதங்களை பதிவர்களுக்கு கொடுத்தேன். நம் பதிவுலக சமையல் அரசிகள் என்று சொல்லி.
குடலை இட்லி மிகவும் நன்றாக இருக்கிறது.
Post a Comment