Tuesday, January 10, 2012

வெந்தய குருமா



தேவையானவை:
வெந்தயம்1/2 கப்
பூண்டு10 பல்
வெங்காயம்2
பச்சைமிளகாய்2
தக்காளி2
புளிஎலுமிச்சை அளவு
பொடித்த வெல்லம்2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி தழைசிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
அரைக்க:
உளுத்தம்பருப்பு1/4 கப்
சீரகம்1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்3
தேங்காய் துருவல்1/2 கப்
-----
தாளிக்க:
கடுகு1 தேக்கரண்டி
கறிவேப்பிலைஒரு கொத்து
------
             ஊறவைத்து வேகவைத்த வெந்தயம்

செய்முறை:
                                         குருமா

வெந்தயத்தை 8 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி வேகவைத்துக் கொள்ளவேண்டும்.
வெங்காயம்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.
பச்சைமிளகாயை குறுக்கு வாட்டில் கீறிக்கொள்ளவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை எண்ணையில் வறுத்து விழுது போல அரைத்துக் கொள்ளவும்.
புளியை அரைகப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.
--------
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணய் சேர்த்து  தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பூண்டு,வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் நான்கையும் வதக்கவேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் வேகவைத்துள்ள வெந்தயம்,அரைத்த விழுது,புளித்தண்ணீர்,உப்பு எல்லாம் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் பொடித்த வெல்லத்தை சேர்த்து கொத்தமல்லித்தழையை தூவி இறக்கவேண்டும்.
வெந்தய குருமாவை சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.பூரி சப்பாத்திக்கும் ஏற்றது.
வெந்தய குருமா நீரிழிவுகாரர்களுக்கு சிறந்தது.

10 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அறிந்துகொண்டேன்.
தகவலுக்கு நன்றி.

கோமதி அரசு said...

அருமையான வெந்தய குருமா .செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்.
உங்கள் குறிப்புக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

மருத்துவ குணங்கள் நிறைந்தது வெந்தயம். நல்ல குறிப்பு. நன்றி.

Kanchana Radhakrishnan said...

// நண்டு @நொரண்டு -ஈரோடு said...
அறிந்துகொண்டேன்.
தகவலுக்கு நன்றி.//

வருகைக்கு நன்றி நண்டு @நொரண்டு -ஈரோடு.

Reva said...

Kurma arumai..:) seithu parkanum..:))
Reva

ஹேமா said...

வெந்தயம் கூடுதலாகச் சாப்பிட்டால் எனக்கு வாயில் புண் வருகிறதே !

Kanchana Radhakrishnan said...

//கோமதி அரசு said...
அருமையான வெந்தய குருமா .செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்.
உங்கள் குறிப்புக்கு நன்றி.//

வருகைக்கு நன்றி கோமதி அரசு.

Kanchana Radhakrishnan said...

// ராமலக்ஷ்மி said...
மருத்துவ குணங்கள் நிறைந்தது வெந்தயம். நல்ல குறிப்பு. நன்றி.//

வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

Kanchana Radhakrishnan said...

// revathi said...
Kurma arumai..:) seithu parkanum..:))

Thanks Revathi.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Hema.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...