தேவையானவை:
புழுங்கலரிசி 1 கப்
தேங்காய் துருவல்1/2 கப்
மிளகாய் வற்றல் 3
சீரகம்1 தேக்கரண்டி
புளிஎலுமிச்சை அளவு
வெங்காயம் 2
கடலைபருப்பு1 மேசைக்கரண்டி
உப்பு,எண்ணெய்தேவையானது
---------
தாளிக்க:
கடுகு1தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு1தேக்கரண்டி
மிளகாய்வற்றல்2
கறிவேப்பிலைசிறிதளவு
--------
செய்முறை:
புழுங்கலரிசி,தேங்காய் துருவல்.சீரகம்,மிளகாய் வற்றல் நான்கையும் தனித்தனியாக தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
முதலில் புளியை நார் நீக்கி அதனுடன் சிறிதளவு ஊறவைத்த அரிசி சேர்த்து அரைத்து பின்னர் ஊறவைத்த மற்ற பொருட்களையும் உப்பையும் சேர்த்து நைசாக அரைக்கவேண்டும். (இட்லி மாவு பதத்திற்கு இருக்கவேண்டும்)
வெங்காயத்தை பொடியாக நறுக்கவேண்டும்.கடலை பருப்பை தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைக்கவேண்டும்.
அரைத்த மாவை இட்லி தட்டில் ஆவியில் 15 நிமிடம் வைத்து எடுக்கவேண்டும். ஆறினதும் மீண்டும் மிக்சியில் வைத்து ஒரு சுற்று சுற்றவேண்டும்.
வாணலியில் எண்ணெய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம்,ஊறவைத்த கடலை பருப்பு சேர்த்து வதக்கவேண்டும்.
(காரட்,பட்டாணியும் இதனுடன் சேர்க்கலாம்)
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் மிக்சியில் அரைத்த 'புளி உப்புமா' வை சேர்த்து கிளற உதிரியாக வரும்.
இந்த ' புளி உப்புமா' தக்காளி சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
8 comments:
அருமையான புளி உப்புமா குறிப்புக்கு நன்றிங்க. செய்து பார்க்கிறேன்.
அய்ய்ய்ய்ய்ய்ய்ய்
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒரு டிஃபன் இது...
இதுவே அவல் போட்டும் செய்யலாம் தானே!!
அவுலிலும் செய்யலாம்.ஆனால் செய்முறை வேறு.இங்கே பார்க்கவும்.வருகைக்கு நன்றி கோபி.
http://www.annaimira.blogspot.com/2009/09/1-2-1-1-1-1-1-1-1.html
வருகைக்கு நன்றி கோவை2தில்லி.
வாய்தான் ஊறுது.பதிவு போட்டே வெறுப்பேத்துங்க !
புளி உப்புமா செய்யத் தூண்டுகிறது.
நிச்சியம் செய்து பார்த்து விட்டு உங்களிடம் சொல்கிறேன்.
// ஹேமா said...
வாய்தான் ஊறுது.பதிவு போட்டே வெறுப்பேத்துங்க !//
:-)))
// கோமதி அரசு said...
புளி உப்புமா செய்யத் தூண்டுகிறது.
நிச்சியம் செய்து பார்த்து விட்டு உங்களிடம் சொல்கிறேன்.//
செய்துபார்த்துவிட்டு சொல்லுங்கள்.வருகைக்கு நன்றி கோமதி அரசு.
Post a Comment