தேவையானவை:
கருணைக்கிழங்கு 4
மஞ்சள் தூள்1 தேக்கரண்டி
இஞ்சி துருவல் 1 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் 1
உப்பு,எண்ணெய் தேவையானது
கொத்தமல்லித்தழை சிறிதளவுகருணைக்கிழங்கு
-------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:
கருணைக்கிழங்கை நன்றாக மண் போக அலசி விட்டு ஒவ்வொரு கிழங்கையும் நான்கு துண்டங்களாக வெட்டி குக்கரில் வைத்து மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
குக்கரில் இருந்து எடுத்து கிழங்கின் தோலை உரித்துவிட்டு ஒரு அகண்ட பாத்திரத்தில் போட்டு நன்றாக மசித்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்து மசித்த கருணைக்கிழங்குடன் தேவையான உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.இஞ்சித் துருவலையும் சேர்க்கவேண்டும்.
இறக்குவதற்கு முன்பு எலுமிச்சம்பழத்தை பிழிந்து நன்கு கலந்து கொத்தமல்லித்தழையை தூவி இறக்கவும்.
'கருணைக்கிழங்கு மசியல்' செய்வதற்கு மிகவும் சுலபம்,
உடல் சூட்டை தணிக்கும்.
12 comments:
அருமையான கருணைக்கிழங்கு மசியல். எனக்கு மிகவும் பிடிக்கும்.
புளி கரைத்து விட்டு குழம்பும் செய்வார்கள். இவை இரண்டுமே அம்மா செய்து தான் சாப்பிட்டிருக்கிறேன். தில்லியில் இந்தக் கிழங்கு கிடைக்காது.
வருகைக்கு நன்றி கோவை2தில்லி.
சிம்ப்ளி சூப்பர்ப்.
கருணைக்கிழங்கைப் பொரித்துக் குழம்பு வைக்கத்தான் தெரியும்.இது சுலபமா இருக்கே !
ரொம்ப காலத்துக்கு முன்னாலே அம்மா செய்து சாப்பிட்டது. என்ன காரணம்னு தெரியலை, பல ஆண்டுகளாகிவிட்டது இந்த கருணைக்கிழங்கு மசியல் சாப்பிட்டு! இப்போ எல்லாம் இது அம்மா சமைப்பாங்களானுகூட தெரியலை. "ரெசிப்பி" வேறயா இருக்கலாம் ஆனால் எங்க வீட்டிலேயும் இதுக்குப்பேரு கருணைக்கிழங்கு மசியல் தான்!
ஏன் இதை "கருணை"க்கிழங்குனு சொல்றாங்கனு தெரிந்தால் சொல்லுங்க! I used to ask this question to my mom too. I am not sure she ever gave a correct answer (if there is any)! :)
வருகைக்கு நன்றி Asiya Omar.
// ஹேமா said...
கருணைக்கிழங்கைப் பொரித்துக் குழம்பு வைக்கத்தான் தெரியும்.இது சுலபமா இருக்கே !//
வருகைக்கு நன்றி Hema.
//
வருண் said...ஏன் இதை "கருணை"க்கிழங்குனு சொல்றாங்கனு தெரிந்தால் சொல்லுங்க!//
எனக்கு தெரிந்தவரையில் எல்லாவற்றிற்கும் ஒரு பெயர் இருப்பது போல் இதற்கும் ஒரு பெயர்.அவ்வளவு தான்.ஒரு வேளை இந்த கிழங்கு மனிதர்கள் மேல் கருணை கொண்டு உடல் சூட்டை தணிப்பதுடன் மூல நோய் வராமல் தடுக்கும் குணமும் இதற்கு இருப்பதால் இந்த பெயர் வந்திருக்கலாம். வருகைக்கு நன்றி வருண்.
இந்த கிழங்கில் அம்மா இறால் சேர்த்து குழம்பும்,கருவாட்டுக்குழம்பும் செய்வாங்க.மசியல் நல்லாயிருக்கு!!
சூப்பர் மசியல்.நான் என் தாயார் சொல்லித்தந்த பிரகாரம் இதனை ஒரே முறையில்தான் சமைப்பேன்.உங்கள் முறையிலும் அவசியம் செய்து பார்த்துவிடுகின்றேன்.
வருகைக்கு நன்றி Menaga.
வருகைக்கு நன்றி ஸாதிகா.
Post a Comment