Sunday, January 29, 2012

கொள்ளு உருண்டை குழம்பு



தேவையானவை:
கொள்ளு 1 கப்
மிளகாய் வற்றல்5
சின்ன வெங்காயம்5
பெரிய வெங்காயம்2
தக்காளி3
புளி ஒருஎலுமிச்சை அளவு
சாம்பார் பொடி1 மேசைக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
                                                                   கொள்ளு

--------
அரைக்க:
தேங்காய் துருவல் 1/4 கப்
தனியா 1 மேசைக்கரண்டி
கடலைபருப்பு1 மேசைக்கரண்டி
வெந்தயம்1/2தேக்கரண்டி
--------
தாளிக்க:
கடுகு1 தேக்கரண்டி
வெந்தயம்1/2தேக்கரண்டி
கறிவேப்பிலைஒரு கொத்து
-------
செய்முறை:

கொள்ளை வறுத்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
ஊறவைத்த கொள்ளு,மிளகாய் வற்றல்.சின்ன வெங்காயம் சிறிது உப்பு எல்லாவற்றையும் நைசாக அரைத்து சிறு சிறு உருண்டைகளாக்கி இட்லி தட்டில் ஆவியில் 15 நிமிடம் வைத்து எடுக்கவேண்டும்.
வெங்காயம்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை சிறிது எண்ணையில் வறுத்து விழுதாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
--------
வாணலியில் எண்ணெய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவேண்டும்
 பின்னர் தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் புளித்தண்ணீர்,தேவையான உப்பு,சாம்பார் பொடி.சிறிது தண்ணீர்,அரைத்த விழுது சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
நன்கு கொதித்தவுடன் ஆவியில் வைத்த கொள்ளு உருண்டைகளை சேர்த்து சிறிது கொதித்தவுடன் இறக்கவேண்டும்.
கொள்ளு உருண்டை குழம்பை சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.

7 comments:

vimal said...

paarka azhagagave irukku saaptu paatha pinne kudhirai maadiri kanaippeno ???

ஹேமா said...

ஓ...பருப்பு உருண்டைக் குழம்பு போலவா.சமைச்சுப் பாக்கிறேன் !

கோமதி அரசு said...

துவரம்பருப்பு உருண்டை குழம்பு செய்து இருக்கிறேன், கொள்ளு உருண்டை குழம்பு செய்த்தது இல்லை .

செய்து பார்த்து விடுகிறேன். நன்றி.

Kanchana Radhakrishnan said...

//
vimal said...
paarka azhagagave irukku saaptu paatha pinne kudhirai maadiri kanaippeno ???//

:-)))

Kanchana Radhakrishnan said...

// ஹேமா said...
ஓ...பருப்பு உருண்டைக் குழம்பு போலவா.சமைச்சுப் பாக்கிறேன் //

செய்து பாருங்கள்.நன்றாக இருக்கும்.வருகைக்கு நன்றி ஹேமா.

Kanchana Radhakrishnan said...

// ஹேமா said...
ஓ...பருப்பு உருண்டைக் குழம்பு போலவா.சமைச்சுப் பாக்கிறேன் //

செய்து பாருங்கள்.நன்றாக இருக்கும்.வருகைக்கு நன்றி ஹேமா.

Kanchana Radhakrishnan said...

// கோமதி அரசு said...
துவரம்பருப்பு உருண்டை குழம்பு செய்து இருக்கிறேன், கொள்ளு உருண்டை குழம்பு செய்த்தது இல்லை .

செய்து பார்த்து விடுகிறேன். நன்றி//


செய்து பாருங்கள்.நன்றாக இருக்கும்.வருகைக்கு நன்றி கோமதி அரசு.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...