தேவையானவை:
பாசுமதி அரிசி 1 கப்
பச்சை பட்டாணி 1 கப்
வெங்காயம் 1
தக்காளி 2
பச்சைமிளகாய் 2
இஞ்சி பூண்டு விழுது 1 மேசைக்கரண்டி
தேங்காய் பால் 1 1/2 கப்
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு எண்ணெய் தேவையானது
------
தாளிக்க:
பட்டை 1 துண்டு
ஏலக்காய் 2
கிராம்பு 2
நெய் 1 மேசைக்கரண்டி
-------
செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி அரை கப் தண்ணீரில் நைசாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியி;ல் சிறிது எண்ணெய் வைத்து அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து தனியே எடுத்து வைக்கவும்.
பச்சை மிளகாயை குறுக்கே வெட்டிகொள்ளவும்.
------
வாணலியில் நெய் வைத்து பட்டை ஏலக்காய்,கிராம்பு தாளித்து அதில் பாசுமதி அரிசியை 5 நிமிடம் வறுக்க வேண்டும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் வைத்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவேண்டும்.
அதனுடன் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி தக்காளி விழுதையும்,இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கவேண்டும்..
பின்னர் பச்சை பட்டாணி,தேவையான உப்பு,தேங்காய் பால் சேர்த்து நன்கு கிளறவேண்டும்.
இதனுடன் வறுத்த பாசுமதி அரிசியை கலந்து அப்படியே ele.cooker ல் வைக்கலாம்.
குக்கரில் இருந்து எடுத்து அதில் கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கி தூவவேண்டும்.
8 comments:
புலாவ் செய்ததில்லை...
வீட்டில் குறித்துக் கொண்டார்கள்... (பாசுமதி அரிசி தான் வேண்டுமா?-இது துணைவியின் கேள்வி)
நன்றி சகோ... தொடருங்கள்... வாழ்த்துக்கள்... (TM 2)
அருமையா இருக்கு புலாவ்..
//
திண்டுக்கல் தனபாலன் said...
புலாவ் செய்ததில்லை...
வீட்டில் குறித்துக் கொண்டார்கள்... (பாசுமதி அரிசி தான் வேண்டுமா?-இது துணைவியின் கேள்வி)//
பச்சரிசியில் பண்ணலாம்."சீரக சம்பா' வில் பண்ணினால் நன்றாகவும் சுவையாகவும் இருக்கும். வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.
my favorite pulao...
VIRUNTHU UNNA VAANGA
// ராதா ராணி said...
அருமையா இருக்கு புலாவ்..//
வருகைக்கு நன்றி ராதா ராணி.
// Vijayalakshmi Dharmaraj said...
my favorite pulao...
VIRUNTHU UNNA VAANGA//
Thanks Vijayalakshmi Dharmaraj.
புலாவ் அருமை....
வருகைக்கு நன்றி VijiParthiban .
Post a Comment