தேவையானவை: திணை
திணை 1 கப்
வெங்காயம் 1
காரட் 2
பட்டாணி 1/2 கப்
உருளைக்கிழங்கு 2
பச்சைமிளகாய் 2
மஞ்ச்ள்பொடி 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் 1
உப்பு எண்ணெய் தேவையானது
கொத்தமல்லித்தழை சிறிதளவு
----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
-------
செய்முறை:
திணையை எண்ணெய் விடாமல் வாணலியில் 5 நிமிடம் வறுத்துக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் திணையை சேர்க்கவும்.
சிறிது உப்பு சேர்த்து திணை வெந்ததும் ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைக்கவும்,
கடாயை அடுப்பில் வைத்து
சிறிது எண்ணெயில் கடுகு சீரகம் பொரிக்கவேண்டும்.
அதனுடன் மஞ்சள்பொடி,இஞ்சி பூண்டு விழுது,குறுக்கே வெட்டிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவேண்டும்.
வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவேண்டும்.
பட்டாணி,பொடியாக நறுக்கிய காரட்,உருளைக்கிழங்கு தேவையான உப்பு,சிறிது தண்ணீர் சேர்த்து வதக்கவேண்டும்.
காய்கறிகள் எல்லாம் நன்கு வெந்தவுடன் வேகவைத்த திணையை சேர்க்கவேண்டும்.
அடுப்பை ஸிம்மில் வைத்து உப்புமாவை நன்றாக கிளறி ஐந்து நிமிடம் கழித்து அணைக்கவேண்டும்.
எலுமிச்சம்பழச் சாறை சற்று ஆறியதும் பிழயவும்.
கொத்தமல்லிதழையை மேலே அலங்கரிக்கவும்.
12 comments:
திணை - உடம்பிற்கு அவ்வளவு நல்லது... வீட்டில் வேறு மாதிரி செய்வார்கள்... உங்களின் செய்முறையை செய்து பார்ப்போம்... நன்றி சகோ...
சத்துமிகு உப்புமா.அவசியம் செய்து பார்த்திட வேண்டும்
ஆம்.சத்துமிகு உப்புமா,அவசியம் வாரத்தில் ஒரு முறை செய்யவேண்டும்.
வருகைக்கு நன்றி ஸாதிகா.
திணையை இதுவரை நான் பார்த்ததேயில்லை. அவசியம் குறித்து கொள்கிறேன்.
right post for me... this week only bought thinai for paniyaram... will do this too...
Join in my first event - FEAST FOR YOUR GURU
VIRUNTHU UNNA VAANGA
வருகைக்கு நன்றி கோவை2தில்லி.
வருகைக்கு நன்றி Vijayalakshmi Dharmaraj.
Foxtail millet is thinai and is native to Asia. Quinoa (keen wa) is native to Peru. They are different, Quinoa has a bitter tasting saponin coating that had to be removed by processing before you can cook. They are both excellent replacement for Rice. If you are in US you can get both at Whole Foods and Costco (only Quinoa).
திணை என்பது நம்ம ஊர்களில் பயிரிடப்படும் தானியங்களில் ஒன்று.கேழ்வரகு,திணை,வரகு என பல தானியவகைகள் சிறிது சிறிதாக அழிந்துவரும் நிலையில், திணையை வைத்தும் இப்படி உப்புமா செய்யலாம்.உடலுக்கும் வலு சேர்க்கும்.
Quinoa எனப்படுவதும் அந்த வகையைச் சார்ந்ததே.அமெரிக்காவில் ..இத் தானியத்தைவைத்து நான் செய்த சமையல் குறிப்பே இது.கூகுளாண்டவர் Quinoa விற்கு திணை என்று போட்டதால், இரு பெயரையும் குறிப்பிட்டுள்ளேன்.வருகைக்கு நன்றி Mohan.
// – 10 of 10
திண்டுக்கல் தனபாலன் said...
திணை - உடம்பிற்கு அவ்வளவு நல்லது... வீட்டில் வேறு மாதிரி செய்வார்கள்... உங்களின் செய்முறையை செய்து பார்ப்போம்... நன்றி சகோ..//
வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்
Quinoa என்பதன் தமிழ் பெயர் "சீமைத் திணை" ஆகும்.
Post a Comment