Tuesday, February 12, 2013

இட்லி...சாம்பார்




இட்லிக்கு தேவையானது:

இட்லி ரவா 3 கப்
உளுத்தம்பருப்பு 1 1/4 கப்
அவல் 1/4 கப்
வெந்தயம் 1 தேக்கரண்டி
உப்பு தேவையானது
செய்முறை:
உளுத்தம்பருப்பை 4 அல்லது 5 மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
வெந்தயத்தை தனியே ஊறவைக்கவேண்டும்.
அவலை ஊறவைக்கவேண்டியதில்லை.
------
உளுந்து ஊறியதும் உளுந்து,வெந்தயம்  தண்ணீரில் நனைத்த அவல் மூன்றையும் சேர்த்து கிரைண்டரில் 35 நிமிடம் அரைக்கவேண்டும்.
இட்லி ரவாவை ஒரு பாத்திரத்தில் வைத்து தண்ணீர் விட்டு இட்லிக்கு தேவையான உப்பை அதனுடன் சேர்த்து கெட்டியாக பிசற வேண்டும். அரை மணி நேரம் ஊறினால் போதும்.(உளுந்தை அரைக்க ஆரம்பிக்கும் போது இட்லி ரவாவை ஊறவைத்தால் போதும்)
உளுந்தை அரைத்தவுடன் பிசறிய இட்லி  ரவாவில் இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்.(கலந்த மாவை மீண்டும் கிரைண்டரில் அரைக்கக்கூடாது)
இந்த மாவை 8 மணி நேரம் புளிக்கவைக்கவேண்டும்.
இட்லி மாவு ரெடி.
-------------------------------------------
சாம்பாருக்கு தேவையானது:
துவரம்பருப்பு 1 கப்
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
சாம்பார் பொடி 1 மேசைக்கரண்டி
-------
சின்ன வெங்காயம் 15
தக்காளி 2
----------
அரைக்க:
தனியா 2 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் 5
வெந்தயம் 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி
கடலைபருப்பு 1தேக்கரண்டி
துவரம்பருப்பு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் 4
உப்பு,எண்ணெய் தேவையானது
---------
தாளிக்க:
கடுகு 1தேக்கரண்டி
வெந்தயம் 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:

சின்ன வெங்காயத்தை தோலுரித்துக் கொள்ளவேண்டும்.
தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
---------
துவரம்பருப்பை இரண்டு கப் தண்ணீருடன் மஞ்சள்தூள்,நல்லெண்ணெய்,சீரகம் சேர்த்து குக்கரில் வைத்து வேகவைக்கவேண்டும்.(4 விசில்)
---------
அரைக்கக்கொடுத்துள்ளவைகளில் முதலில்
வெறும் வாணலியில் சீரகத்தை பொரிக்கவேண்டும்.
அதனுடன் மிளகாய் வற்றல்,சின்ன வெங்காயம் இரண்டையும் தவிர்த்து மற்றவற்றை சேர்த்து வறுக்கவேண்டும்.
மிளகாய் வற்றலையும் வெங்காயத்தையும் எண்ணெயில் வதக்கவேண்டும்.
எல்லாவற்றையும் மிக்சியில் தண்ணீர் சேர்த்து விழுது போல் அரைக்கவேண்டும்.
------
வாணலியில் எண்ணெய் வைத்து தாளிக்கவேண்டியவைகளை தாளித்து சின்ன வெங்காயத்தையும் தக்காளியையும் வதக்கவேண்டும்.
வெங்காயம் வதங்கியபின் வேகவைத்த துவரம்பருப்புஅரைத்த விழுது,சாம்பார் பொடி,தேவையான உப்பு எல்லாவற்றையும் சிறிது தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும். சாம்பார் நீர்க்க இருக்கவேண்டும். கொதித்தவுடன் அடுப்பை அணைக்கலாம்.
------
இட்லியை இந்த சாம்பாரில் மிதக்கவிட்டு உங்கள் காலை உணவை ருசியுங்கள்.

(முக்கிய குறிப்பு.   இந்த சாம்பாரில் புளியோ தேங்காயோ கிடையாது)

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றி சகோ... செய்து பார்க்க சொல்கிறேன்...

ADHI VENKAT said...

அருமையான குறிப்பு.

Kanchana Radhakrishnan said...

நன்றி
திண்டுக்கல் தனபாலன்.

Kanchana Radhakrishnan said...

Thanks Aadhi.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...