Thursday, February 21, 2013

கத்தரி..உருளை பொரியல்



தேவையானவை:

உருளைக்கிழங்கு 4

கத்தரிக்காய் 4

மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்

கறிப்பொடி 2 டேபிள்ஸ்பூன்

உப்பு ,எண்ணைய் தேவையானது



செய்முறை:


உருளைக்கிழங்கையும் கத்தரிக்காயையும் நீட்ட வாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் நறுக்கிய உருளைக்கிழங்கையும்,கத்தரிக்காயையும் சேர்த்து

உப்பு,மஞ்சள்தூள்,கறிப்பொடி தூவி எண்ணைய் சேர்த்து பிசிறவும்.

Oven ல் வைப்பதாக இருந்தால் oven ஐ 400 டிகிரி யில் pre heat செய்து பின்னர் cooking time 25 நிமிடம் வைக்கவேண்டும்.

ovenல் இருந்து எடுத்து நன்றாகக் கிளறி மீண்டும் பத்து நிமிடம் வைக்கவேண்டும்.

நேரடியாக அடுப்பிலும் செய்யலாம்.

வாணலியில் எண்ணைய் வைத்து உருள,கத்தரிக் கலவையை சேர்த்து பிரட்டவேண்டும்.

எண்ணைய் கூடுதலாக விட்டு வறுக்கவேண்டும்.

----

கறிப்பொடி செய்யும் முறை:

தேவையானவை:

தனியா 2 கப்

மிளகாய் வற்றல் 10

கடலைப்பருப்பு 1/2 கப்

உளுத்தம்பருப்பு 1/4 கப்

பொட்டுக்கடலை 2 டேபிள்ஸ்பூன்

எள் 1/4 கப்

கசகசா 1 டேபிள்ஸ்பூன்

தேங்காய் துருவல் 1 கப்

பெருங்காய்ம் 1 துண்டு

கறிவேப்பிலை சிறிதளவு

----

எள்,பெருங்காயம் தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் தனித்தனியாக எண்ணையில் வறுக்கவேண்டும்.

பெருங்காயத்தை எண்ணையில் பொரிக்கவேண்டும்.

எள்ளை சிறிது தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி வெறும் வாணலியில் வெடிக்கும் வரை வறுக்கவேண்டும்.

பின்னர் எல்லாவற்றையும் மிக்சியில் பொடி பண்ணிக்கொள்ளவேண்டும்.

இந்த கறிப்பொடியை ஒரு மாதம் வரை வைத்துக்கொள்ளலாம்..கெட்டுப்போகாது.

எல்லா விதமான பொரியலுக்கும் உபயோகப்படுத்தலாம்

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல காம்பினேசன்...

கவியாழி said...

ஒல்லியானவங்க விரும்பி சாப்பிடலாம்

கோமதி அரசு said...

உடனே கறிப்பொடி தயார் செய்து விட்டேன்.
நன்றி.

கத்திரி, உருளை பொரியலும் அருமை.

Kanchana Radhakrishnan said...

//கவியாழி கண்ணதாசன் said...
ஒல்லியானவங்க விரும்பி சாப்பிடலாம்//

வருகைக்கு நன்றி கவியாழி கண்ணதாசன்.

Kanchana Radhakrishnan said...

// கோமதி அரசு said...
உடனே கறிப்பொடி தயார் செய்து விட்டேன்.
நன்றி.//

நன்றி கோமதி அரசு.

ஸாதிகா said...

கூடவே கறிப்பொடி ரெஸிப்பியும் சூப்பர்.

ADHI VENKAT said...

அருமையான குறிப்பு.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...