தேவையானவை:
புழுங்கலரிசி 1 கப்
துவரம்பருப்பு 1/2 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
பசலைக்கீரை 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
மிளகாய் வற்றல் 4
பெருங்காயம் 1 துண்டு
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
செய்முறை:
புழுங்கலரிசி,துவரம்பருப்பு,கடலைப்பருப்பு,மிளகாய் வற்றல் எல்லாவற்றையும் நான்கு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.பெருங்காயத்தை தனியே ஊறவைக்கவேண்டும்.
ஊறியதும் வடிகட்டி தேவையான உப்பு சேர்த்து மிக்சியில் சற்றே கரகரப்பாக அரைக்கவேண்டும்.
அரைத்த மாவில் பொடியாக நறுக்கிய பசலைக்கீரையை சேர்த்து கலக்கவேண்டும்.
-------
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சிறிது எண்ணெய் சேர்த்து ஒரு கரண்டியில் அடை மாவை ஊற்றி சற்று கெட்டியாக வார்க்கவேண்டும்.அடை ஒரே பதத்தில் வேகுவதற்காக நடுவில் ஒரு துளையிட்டு அதில் சிறிது எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வந்ததும் திருப்பி போட்டு சற்று நேரம் கழித்து எடுக்கவும்.
------
அடை அவியல் தான் நல்ல காம்பினேஷன். இட்லி மிளகாய் பொடியுடன் தயிர் சேர்த்தும் சாப்பிடலாம்.
பொடித்த வெல்லத்துடனும் சாப்பிடலாம்.
-------
எல்லா கீரைகளிலும் செய்யலாம்.குறிப்பாக முருங்கைக்கீரை அடை ருசியோ ருசி.
10 comments:
வீட்டில் அடிக்கடி செய்வதுண்டு... நன்றி...
நல்ல பகிர்வு.அருமையாக செய்து காட்டியிருக்கீங்க..
வருகைக்கு நன்றி Asiya Omar.
உங்கள் கீரை அடை கட்டுரையை பிளஸ்சில் பகிர்ந்திருக்கிறேன். நன்றி.
அடை அருமையாக இருக்கிறது. பச்சைமிளகாய், தேங்காய், புளி வைத்து சட்னி நன்றாக இருக்கும் அடைக்கு, சிவப்பு மிளகாய், தேங்காய், புளி வைத்தும் சட்னி செய்யலாம்.
அடை சூப்பர்
//Menporul Prabhu said...
உங்கள் கீரை அடை கட்டுரையை பிளஸ்சில் பகிர்ந்திருக்கிறேன். நன்றி.//
வருகைக்கு நன்றி Menporul Prabhu.
// கோமதி அரசு said...
அடை அருமையாக இருக்கிறது. பச்சைமிளகாய், தேங்காய், புளி வைத்து சட்னி நன்றாக இருக்கும் அடைக்கு, சிவப்பு மிளகாய், தேங்காய், புளி வைத்தும் சட்னி செய்யலாம்.//
நீங்கள் குறிப்பிட்டுள்ள சட்னிகளையும் செய்யலாம்.நன்றாக இருக்கும்.வருகைக்கு நன்றி கோமதி அரசு.
// ஸாதிகா said...
அடை சூப்பர்//
Thanks ஸாதிகா.
கீரை அடை சூப்பர்.
Post a Comment