Tuesday, April 22, 2014

மாதுளை ஜூஸ்


தேவையானவை:

மாதுளை 1
சர்க்கரை 1 டேபிள்ஸ்பூன்
பால் 1/4 கப்
கிரீம் 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

மாதுளைப்பழத்தை இரண்டாக வெட்டி உள்ளே உள்ள முத்துக்களை எடுத்துவைக்கவேண்டும்.
அதனுடன் பால்,சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவேண்டும்.
நன்றாக அரைத்தால் வடிகட்டவேண்டிய அவசியமில்லை.
Fridge ல் வைத்து குழந்தகளுக்கு கொடுக்கலாம்.
முத்துக்களை சாப்பிடுவதை விட இப்படி ஜூஸ் ஆக சாப்பிடுவதை விரும்புவார்கள்
கொடுக்கும்பொழுது மேலே கிரீம் போட்டு கொடுக்கவேண்டும்.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அப்படியே சாப்பிடத்தான் குழந்தைகளுக்கு[ம்] பிடிக்கிறது...

ராஜி said...

என் வீட்டுக்காரருக்கு மாதுளை ஜூஸ் பிடிக்கும். செஞ்சு கொடுத்துட்டு பாராட்டுகளை உங்களுக்கு அனுப்புறேன்.

ராமலக்ஷ்மி said...

பால், க்ரீம் சேர்ப்பது சுவையை அதிகரிக்கும். நல்ல குறிப்பு. நன்றி.

Kanchana Radhakrishnan said...

@ திண்டுக்கல் தனபாலன்

:-)))

Kanchana Radhakrishnan said...

@ ராஜி

Thanks ராஜி

Kanchana Radhakrishnan said...


@ ராமலக்ஷ்மி.
வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...