Monday, November 24, 2014

சாமைப் புளிப்பொங்கல்

தேவையானவை:
சாமை ரவை 1 கப்
புளி எலுமிச்சை அளவு
மிளகாய் வற்றல் 4
நல்லெண்ணெய் 2 மேசைக்கரண்டி
உப்பு தேவையானது
-------

தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
வேர்க்கடலை 5
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
வெந்தயம் 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து

--------
செய்முறை:


புளியை ஒரு கப் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டிக்கொள்ளவும்.
சாமை ரவையை வெறும் வாணலியில் லேசாக வறுத்துக்கொள்ளவும்
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் சாமை ரவையுடன் புளித்தண்ணீர் ஒரு கப் தண்ணீர் 1 1/2 கப் சேர்த்து கலந்து வைக்கவும்.( சாமை ரவை 1 கப்,புளித்தண்ணீரும்,தண்ணீரும் சேர்ந்து 2 1/2 கப்)


ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெயில் தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவும்.
குக்கரில் வைக்கும் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் சாமை ரவையும் புளித்தண்ணீரும் கலந்த கலவை,
தாளித்த பொருட்கள் எல்லாவற்றையும் தேவையான உப்புடன் கலந்து அப்படியே குக்கரில் வைத்து 3 விசில் முடிந்தவுடன் அடுப்பை அணைக்கவேண்டும்தேங்காய்
வேண்டுமென்றால் அரை கப் துருவல் சேர்த்துக்கொள்ளலாம்..
சுவையான சாமைப் புளிப்பொங்கல் ரெடி.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சாமை ரவை வாங்கி ஒருமுறை செய்து பார்க்கிறோம்...

ADHI VENKAT said...

சாமையில் சென்ற வாரம் தான் வெண்பொங்கல் செய்து பார்த்தேன். அருமையாக இருந்தது.

புளிப்பொங்கல் எனக்கு பிடித்தது. கட்டாயம் செய்து பார்க்கிறேன்.

சாரதா சமையல் said...

சாமைப் பொங்கல் அருமையான பதிவு !!

Kanchana Radhakrishnan said...

Thanks

திண்டுக்கல் தனபாலன்

Adhi Venkat

Saratha

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...