தேவையானவை:
கொண்டக்கடலை 1 கப் (channa)
புளி ஒரு எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி 2 மேசைக்கரண்டி
நல்லெண்ணெய் 1/4 கப்
உப்பு தேவையானது
--------
அரைக்க:
மிளகாய் வற்றல் 2
தனியா 1 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
நிலக்கடலை 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் 1 துண்டு
வெந்தயம் 1 தேக்கரண்டி
------
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து
-----
செய்முறை:
சன்னாவை நான்கு மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.
கொண்டக்கடலையை குக்கரில் வைத்து (3விசில்) வேகவைக்கவேண்டும்.
அடுப்பில் கனமான பாத்திரத்தை வைத்து அதில் ஒரு குழிக்கரண்டி நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து இவைகளுடன் கொண்டக்கடலையையும் போட்டு சிவக்க வறுக்கவும்.
வெடிக்கவிடவும்.வெடித்ததும் சாம்பார் பொடி போட்டு வறுக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை எண்ணெய்யில் வறுத்து நைசாக விழுது போல அரைத்து சிறிது தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவிடவும்.
பின்னர் புளியை கெட்டியாக கரைத்து விட்டு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்றாக கொதித்ததும் அடுப்பிலிருந்து இறக்கலாம்.
No comments:
Post a Comment