தேவையானவை:
தக்காளி 2
பூண்டு 10 பல்
புளி எலுமிச்சை அளவு
பெருங்காயம் 1 துண்டு
உப்புஎண்ணெய் தேவையானது
கொத்தமல்லித்தழை சிறிதளவு
------
அரைக்க:
மிளகாய் வற்றல் 3
தனியா 1 தேக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
துவரம்பருப்பு 1 தேக்கரண்டி
------
தாளிக்க:
கடுகு
மிளகாய் வற்றல் 1
கறிவேப்பிலை சிறிதளவு
நெய் 1 மேசைக்கரண்டி
-------
செய்முறை:
அரைக்கக்கொடுத்துள்ளவைகளை தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைத்து விழுது போல அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
வாணலியில் எண்ணெய் வைத்து பொடியாக நறுக்கிய தக்காளி,பூண்டு இரண்டையும் நன்றாக வதக்கவேண்டும்.
அதனுடன் புளித்தண்ணீர், இரண்டு கப்தேவையான உப்பு,பெருங்காயம் சேர்த்து நன்றாக கொதிக்கவைக்கவேண்டும்.
அரைத்து வைத்துள்ள விழுதுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அதனுடன் கலந்து சிறிது நேரம் கொதிக்க வைத்து நுரைத்து வந்தவுடன் அடுப்பை அணைக்க வேண்டும்.
நெய்யில் கடுகு,கிள்ளிய மிளகாய் வற்றல்,கறிவேப்பிலை தாளிக்கவேண்டும்.
கடைசியில் கொத்தமல்லித்தழையை தூவவேண்டும்.
3 comments:
வணக்கம்
செய்முறை விளக்கம் நன்று .. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரசம் செய்யும் விதம் அருமையாக இருக்கிறது!
வருகைக்கு நன்றி மனோ
Post a Comment